search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி"

    • குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மண்டல துணை தாசில்தார் கையெழுத்தினை போலியாக போட்டு நத்தம் பட்டா மாறுதல் வழங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தற்சார்ப்பு விவசாயிகள் இயக்க தலைவர் பொன்னையன், மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர இளைஞர் முன்னணி, உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உயர் அதிகாரி–களின் கையெழுத்தை தானே போட்டு போலியாக பட்டா தயார் செய்து பொது–மக்களுக்கு வழங்கியுள்ளது ஆர்.டி.ஓ. விசாரணையில் உறுதிப்படுத்த–ப்ப–ட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    குடிமக்களுக்கு தேவையான வருவாய் துறை ஆவணங்களை வருவா–ய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால எல்லை–க்குள் வழங்கு–வதற்கான கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டு அதை கண்காணிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    • ரநத்தத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
    • 27-ந் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    கோவை

    கோவை பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 28). இவர் கீரநத்தத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தந்தை இறந்தால் அர்ஜூன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அர்ஜூனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
    • மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சிறுபான்மை நலத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினா் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிக்கு தலா ரூ.1.90 லட்சம் என ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, முஸ்ஸிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம், உலமா மற்றும் இதர பணியாளா்களுக்கு நல வாரியம் சாா்பில் மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம்,

    தேசிய கல்வி உதவித் தொகை (என்.எஸ்.வி), மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறிஸ்தவ தேவாலயம் புனரமைக்கும் திட்டம், டாம்கோ திட்டம் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் ஆகியன சிறுபான்மையினா் நலத் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.ஆகவே, சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • தீயணைப்பு அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி
    • உறவினர் வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத்தெருவை சேர்ந்தவர் அருணகிரி மகன் ராஜ்குமர்(வயது 47). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, டிரஸ்சிங் டேபிளில் இருந்த தங்கதோடு, மொபைல் போன், பவர் பேங்க் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.இருப்பினும், சில ஊராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக்கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • பின்னர் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா அவர்கள் ஆய்வு செய்தார். முதலில் திருச்செங்கோடு அம்மன் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நகராட்சி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் முன்னுரை மையத்தில் விளைந்த பொருட்களை பார்வையிட்டு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டி னார். பின்னர் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் ராஜாகவுண்டம்பாலையம் மற்றும் சூரியம்பாலையம் பகுதியில் உள்ள ஏரிகளை நீர்நிலை பராமரித்தல் பணிகளை பார்வை யிட்டார்,மேலும் அனிமூர் உரகிடங்கினை ஆய்வு செய்தார். இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின் ஆய்வின்போது நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், நகர்மன்றத் துணைத் தலை வர் கார்த்திகேயன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
    • மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையால் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு படிக்கின்றவர்கள், படித்து முடித்தவர்களின் அசல், நகல் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து சேதமகியுள்ளன. அவற்றை கணக்கிட்டு புதிதாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு படித்துவந்த மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக சிறப்பு அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. அதன்படி ஆத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி ராஜூ கூடுதல் பொறுப்பாக சின்னசேலம் பள்ளி குழந்தைகள் கல்விக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கபப்ட்டு உள்ளார். இதை தொடர்ந்து இன்று சின்னசேலம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கு கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    வருகிற 24-ந்தேதி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதையொட்டி சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்கிடையே கலவரத்தில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்வை வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி கனியாமூர் பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத இருந்த 1200 தேர்வர்களுக்கும் அங்குள்ள ஏ.கே.டி. பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு அங்குள்ள 60 அறைகளில் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • முதியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர்.
    • 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது. இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    • முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • கப்பலில் உள்ள நிலக்கரியை, அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, காலன் குடி யிருப்பு கிராம பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியர் நிலங்கள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    3 கட்டங்களாக அனல்மின்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த இரு கட்டங்களில் 660 மெகா வாட் கொண்ட அனல்மின்நிலையங்கள் அமைக்கபடவுள்ளது. மேலும் அனல்மின்நிலைய வளாகத்தைச் சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பணி யாளர்களுடன் கட்டிடங்கள் கட்டும் பணி இரவு பகலாகநடந்து வருகிறது.

    அருகில் உள்ள தருவை குளத்து தண்ணீர்அனல்மின் நிலையத்தின் உள்ளே வரமுடியாத அளவுக்கு உறுதியான சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குபகுதியையொட்டி கல்லா மொழி கடற்கரை பகுதியிலிருந்து பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் பணியும், சுமார் 1.50கோடிடன் நிலக்கரி கையாளும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கான துறை முகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, கப்பலில் உள்ள நிலக்கரியை, உயர்மட்ட ராட்சச பாலம் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.

    கப்பலில் கொண்டு வரப்படும் நிலக் கரியைராட்சத கன்வெயர் மூலம் கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு நேரடியாககொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தென்மண்ட லத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதியுடன், நவீனமாடலில் கூடுதல் சக்தி கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியில் உருவாக்கப்படுகிறது.

    கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடி கொண்டு வரும் உயர்மட்ட கம்பிபாலம் பணி முடிந்தவுடன் முதலில் முதல் மின் அலகு மின்சாரம் உற்பத்தி தொடங்கும். இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

    • விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வரு மாறு:- (அடைப்புக்குறியில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ள பகுதிகள்)

    சுதாராணி (அல்லம் பட்டி), ராஜு (விருதுநகர்), உமா கணேசன் (கோட்டைப் பட்டி), சந்திரசேகரன் (ரோசல்பட்டி), கருப்பசாமி (கூரைக்குண்டு), ராஜலட்சுமி (முத்துராமன் பட்டி), செல்வி (சின்ன மூப்பன் பட்டி), லதா (நாட்டார்மங்கலம்), சர்மிளா (கோவில் வீரார் பட்டி), ராமு கார்த்திக் ராஜா (கடம்பன்குளம்), கார்த்தி கேயன் (சீனியாபுரம்), பார்த்த சாரதி (எல்லிங்க நாயக்கன் பட்டி), விஜயகுமார் (மெட்டுக்குண்டு), சுப்பு லட்சுமி (ஆமத்தூர்), லாவண்யா (வாய்பூட்டான் பட்டி), மதன்குமார் (பெரிய பேராளி), முத்துமணி (மருளூத்து), கார்த்திகேயன் (துலுக்கப்பட்டி), பெத்துராஜ் (வலையப்பட்டி), கற்பக செல்வி (எண்டப்புளி), கதிரேசன் (செங்கோட்டை), சமயன் (அப்பைய நாயக்கன் பட்டி), பழனி (சின்ன வாடி), மாரிமுத்து (ஒண்டிப்புலி நாயக்கனூர்) ஆகிய 24 கிராம நிர்வாக அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உடனே தற்போதுள்ள பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட்டு நாளை (1-ந் தேதி) முதல் புதிய பகுதிகளில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.

    • அரசு விதிமுறைகளை பின்பற்றி ஆலைக்கான சான்று பொறியாளரிடம் கொடுத்திருந்தது .
    • ஏற்கனவே வாங்கிய லஞ்ச பணத்தை மீட்டுக் கொடுக்கவும், எங்களது நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம், சுக்கம்பாளையம் கிராமம்ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தார் கலவை ஆலை மேலாளர் அபுதாஹிர் மற்றும் அலுவலர்கள் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    நாங்கள் மேற்படி முகவரியில் செயல்படும் தார் சாலை அமைக்கும் கலவை உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறோம்.

    இதனிடையே எங்களது தார் கலவை நிறுவனத்திற்கு உரிமையாளர் பெயரில் குத்தகை ஒப்பந்தம், டிமாண்ட் ட்ராப்ட், சொத்து மதிப்பு ஆவணங்கள் மற்றும் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஆலைக்கான சான்று பொறியாளரிடம் கொடுத்திருந்தேன்.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில் செலவினங்களுக்கு கட்டாயப்படுத்தியதன் பேரில் 6 தவணைகளில் இதுவரை அலுவலர்களுக்கு சுமார் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். அனுமதி வழங்கிட மேலும் ரூ. 10 லட்சம் கேட்டனர். பணம் தருவதற்குள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மற்றும் வட்டாட்சியர், வருவாய் துறையினர் உட்பட 10 பேர் ஆலையில் உள்ளஎந்திரங்கள் ஆகியவற்றிற்கு பூட்டு போட்டு சீல் வைத்து சென்றுவிட்டனர். எங்களிடம் ஏற்கனவே வாங்கிய லஞ்ச பணத்தை மீட்டுக் கொடுக்கவும், எங்களது நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    சேலத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய மண்டல அலுவலகத்தில் சென்னை நெடுஞ்சாலைஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார், அதன்பிறகு சேலம் வட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய உள்ளார். இதன் முதற்கட்டமாக சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட மாவட்ட இதர சாலையான கீரை பாப்பம்பாடி சாலையில் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறி–யாளர் சுரேஷ், கோட்ட பொறியாளர் துரை, உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், சேலம் நெடுஞ்சாலை தரக்–கட்டுப்பாடு கோட்ட பொறி–யாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×