search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி குடம்"

    • காடந்தேத்தியில் அரசு மீள் குடியிருப்பில் உள்ள குடியிருப்புகளுக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
    • குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள காடந்தேத்தியில் அரசு மீள் குடியிருப்பில் 190 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் மயான கட்டிடம், மயான சாலை வேண்டியும், வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கிட வேண்டடியும்ஊ ராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜூ, வேதாரண்யம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் , கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணிநேரம் நடந்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் தலைஞாயிறு- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×