search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதன்மை"

    சேலம் மாவட்டத்தில் 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி–யிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் நீதிமன்றங்களிலும் வருகிற 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு–களை நீதிமன்றம் முன் வழக்கு–களையும் விரைவாகவும் சமரசம் மூலம் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதே இதன் நோக்கமாகும்.

    மேலும் மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணமுடியும்.

    அதன்படி சமரசம் செய்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் ஆகியவை குறித்து தீர்வு காணலாம்.

    இந்த வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால் யார் வென்றவர், தோற்றவர் என்ற பாகுபாடு இல்லாமல் உறவுமுறைகள் தொடர்ந்து நீடிக்கவும் மக்கள் நீதிமன்றம் வழி வகை செய்கிறது.

    இதற்கு பதிலாக மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் 26-ந் தேதி நடைபெற உள்ள மக்கள் நீதி மன்றத்தை பயன்படுத்தி தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும் சமரசம் மூலம் தீர்வு காண வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி–உள்ளார்.

    ×