என் மலர்
நீங்கள் தேடியது "கோழிப்பண்ணை"
- இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
- தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காஞ்சி கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்க ளாகவே பட்டிக்குள் இருக்கும் ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்த கோரியும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் கவுந்தப் பாடி அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை தெரு நாய்கள் கொன்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குட்டி பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.
இவர் அதேபகுதியில் சொந்தமாக கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை வளர்த்து வருகிறார்.
கோழிப்பண்ணை சுற்றி கம்பி வலைகள் அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.இந்நி லையில் சோம சுந்தரம் கோழிப் பண்ணைக்குள் தெரு நாய்கள் கூட்டம் திடீரென புகுந்தது.
இதை தொடர்ந்து அந்த தெரு நாய்கள் அங்குள்ள கம்பி வலைகளை கடித்து உள்ளே புகுந்து 100-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்துக் கொன்றுள்ளது. கோழிகள் அலறல் சத்தம் கேட்டு வந்த சோமசுந்தரம் அங்கு 100 கோழிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோமசுந்தரம் இறந்த கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் கவுந்தப்பாடி அடுத்த மஜரா பாப்பாங் காட்டூர், பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 4 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளது. இது தொடர்பாகவும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. தற்போது கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை கொன்று உள்ளது. இதேப்போல் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளையும் கொன்று உள்ளது.
தொடர்ந்து தெரு நாய்கள் அட்டகாசம் செய்து வருவ தால் எங்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வாழ்வா தாரத்தை இழந்து தவித்து வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை.
- தமிழகம்-கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
கோவை:
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.
இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை-கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்-கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-
பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் டயர்களில் ரசாயன மருந்து கலவை தெளிக்கப்படுகிறது.
தமிழகம்-கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளன என்றனர்.
- அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). இவருக்கு அதே பகுதியில் கோழி பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதமாக பூட்டி இருந்தது. நேற்று அதன் உரிமையாளர் ராமதாஸ் நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இதுகுறித்து ராமதாஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அழிஞ்சிகுளம் கிராமத்தை சேர்ந்த சிவராமன் விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
- இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் ஒரு செட்டில் திடீரென தீப்பிடித்தது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அருகே உள்ள அழிஞ்சி குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
இதில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதற்காக தனித்தனியாக கூரையால் அமைக்கப்பட்ட செட் அமைத்து கோழிகளை அடைத்து வைத்துள்ளார். இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் ஒரு செட்டில் திடீரென தீப்பிடித்தது. வேகமாக பற்றிய தீ கூரையில் பிடித்து மளமளவென எரிந்தது.
இதனைக் கண்ட ஊழியர்கள் வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வந்தனர். அதற்குள் கொட்டகை முழுவதும் எரிந்தது. அதில் சிக்கிய 300-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியானது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜாங்கம் தனது வீட்டிற்கு அருகே கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
- ராஜாங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள மூணான்டிபட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் தனது வீட்டிற்கு அருகே கோழிப்பண்ணை வைத்துள்ளார். இன்றுகாலை பண்ணையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
ராஜாங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 4000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து தேவாரம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேதமதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
- 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
- ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சாமராயப்பட்டி, பாப்பான்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சாமராயப்பட்டி கிராமத்தில் விவசாயி சபரிஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 350 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணை பலத்த சேதம் அடைந்தது. மேலும் சூறாவளி காற்றால் கோழிப் பண்ணையின் மேற்கூரைகள் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது .கோழி பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சாமராயபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் இது வரை பார்க்காத வண்ணம் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .ஆயிரக்கணக்கான கோழிகளும் பரிதாபமாக உயிரிழந்தன . ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள் மற்றும் கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
- கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக சுமார் 3000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார்.
- கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்சம்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் கோழி பண்ணை நடத்தி வந்தார்.
இதில் நேற்று இரவு கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக சுமார் 3000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கோழி பண்ணையில் மின் ஒயர்கள் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பண்ணையில் இருந்த வைத்திருந்த 3000 கோழி குஞ்சுகள், குடோன் மற்றும் கோழி தீவனங்கள் உட்பட சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தால் சேதம் அடைந்தது.
இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
- கோழியை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
- மாற்றுத் தொழிலாக கறிக்கோழி வளா்ப்பு தொழில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தாராபுரம் :
தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் முட்டை கோழி உற்பத்தி மற்றும் கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, அருகில் உள்ள வீடுகளில் வசிப்போா் பாதிக்கப்படுவதாகவும் கூறி, 2 நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையை முற்றுகையிட்டும், கோழியை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்தும், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சின்னக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது : விவசாயம் பொய்த்துப் போன எங்கள் கிராமப் பகுதிகளில் மாற்றுத் தொழிலாக கறிக்கோழி வளா்ப்பு தொழில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.கோழிப் பண்ணை கழிவுகளில் இருந்து கிடைக்கும் இயற்கை உரத்தை விவசாயத்திற்கு தயாா்படுத்தி வருகிறோம். கோழி பண்ணைகள் எங்கள் பகுதியைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்களுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்து வருவதால் நாங்கள் சிரமமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த கோழிப் பண்ணையில் இருந்து துா்நாற்றமும், காற்று மாசும் ஏற்படவில்லை.எனவே எங்களது கிராமப்பகுதிகளில் கோழிப்பண்ணைகளை தொடா்ந்து நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
- பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சீனிவாசன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோழிப்பண்ணையில் ஒவ்வொரு நாளும் கோழி குஞ்சுகள், முட்டைகள் காணாமல் போய் கொண்டிருந்திருக்கிறது. அவரும் அதை கவனிக்கவில்லை. கீரி அல்லது நாய்கள் எடுத்திருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு சட்டை உரித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார். யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது விறகு அடியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறிக்கொண்டு வெளியே வந்தது. அதனை லாபகரமாக மீட்ட யுவராஜ் இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறினார். மேலும் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.
தற்போது குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
- எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஜஸ்டின் சுதாகர், கீழே விழுந்தார்.
- 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜான்சன். இவரது மகன் ஜஸ்டின் சுதாகர் (வயது28). இவர் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக வேலை செய்தார்.
கோழிகளுக்கு தேவையான மருந்துகளை வாங்க ஜஸ்டின் சுதாகர், காவல்கிணறு விலக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்றும் அவர் மருந்து வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இரவில் அவர் ஆரல்வாய்மொழிக்கு புறப்பட்டார். குமாரபுரம் வழியாக மோட்டார் சைக்கிள் வரும்போது கண்ணு பெத்தை பகுதியில் வேகத்தடையை அவர் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஜஸ்டின் சுதாகர், கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு ஜஸ்டின் சுதாகரை மீட்டு நாகர்கோ வில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு, ஜஸ்டின் சுதாகர் இறந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து உடல் ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
இதுகுறித்து உறவினர் தேவதாஸ், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படை யில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பலியான ஜஸ்டின் சுதாகருக்கு, அனிஸ்ஷா என்ற மனைவியும் 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
- தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35).
இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து இடுப்புலிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எர்ணாபுரம் சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
- இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.
உடுமலை
உடுமலை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படும் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
குடிமங்கலம் ஒன்றியம் அணிகடவு கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பி .ஏ. பி. பாசன கால்வாய் கிராம குளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்பு அருகில் இந்த கோழி பண்ணை அமைந்துள்ளது.
இறந்த கோழிகளை நீர் நிலைகளில் வீசுவது போன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை சரி செய்யவும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.இருந்தாலும் விதிமுறைகள் முறையாக பின்பற்ற ப்படுவதில்லை.
எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.