search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233879"

    • தி.மு.க. அரசின் இரண்டாண்டு ஆட்சி இதுவரை இருந்த ஆட்சிகளிலே சிறப்பு மிக்க ஆட்சியாக இருக்கிறது.
    • அனைத்து தரப்பு மக்களுடைய ஆவலை பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. கட்சி 30-வது ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூர் தாயகத்தில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ ஏமாற்றங்கள், எத்தனையோ சோதனைகள், எத்தனையோ துரோகங்களை கடந்து இன்று 29 ஆண்டுகளை கடந்து 30-வது ஆண்டில் நிற்கிறது.

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி காலாவதியாகி போன ஒரு மனிதர். தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பாடுகள் முரண்பட்டவை ஆக உள்ளது. தமிழகம் பெரிய தலைவர்கள் மற்றும் எத்தனையோ சோதனைகள் கடந்து வளர்ந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் ரவி உளறிக்கொண்டிருக்கிறார்.

    தி.மு.க. அரசின் இரண்டாண்டு ஆட்சி இதுவரை இருந்த ஆட்சிகளிலே சிறப்பு மிக்க ஆட்சியாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுடைய ஆவலை பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் அரசின் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலைகிறார்.
    • எதுவும் கிடைக்காததால் ஒரு சிறுமியை சாட்சியாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார்.

    சென்னை:

    சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமண விவகாரத்தில் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு போலீஸ் டி.ஜி.பி. தெளிவாக பதில் அளித்துவிட்டார். இருப்பினும் துறை சார்ந்து பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.

    கவர்னர் குழந்தை திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை நடந்ததாக நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

    அவர் சொன்ன குற்றச்சாட்டுக்காக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை கேட்டுள்ளது.

    சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக கவர்னர் கூறியது தொடர்பாக மருத்துவ அலுவலர்கள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அவர்கள் விசாரணையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    கவர்னர் அரசின் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலைகிறார்.

    எதுவும் கிடைக்காததால் ஒரு சிறுமியை சாட்சியாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்வது குறித்து விவசாயி தரணி முருகேசனிடம் கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.
    • கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ராமநாதபுரம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று ராமநாதபுரம் வந்தார். அவர் நேற்று மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்று, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடினார்.

    அதன்பிறகு உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்பு மாலையில் தேவிப்பட்டினம் நவாஷண கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் கடலுக்குள் உள்ள நவகிரகத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தார். பின்பு கவர்னர் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண் பண்ணைக்கு சென்றார். அங்கு இயற்கை வேளாண் மையை பயன்படுத்தி பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பார்வையிட்டார்.

    இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்வது குறித்து விவசாயி தரணி முருகேசனிடம் கேட்டறிந்தார். இயற்கை வேளாண் பண்ணையில் 3 மணி நேரம் இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்கலநாத சுவாமி கோவிலுக்கு சென்றார்.

    அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு கவர்னர் ஆர்.என்.ரவி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை முடித்து கொண்டு கவர்னர் மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

    அங்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் கவர்னர், பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

    அதனை முடித்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலமாக மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • கவர்னர் வருகையை எதிர்த்து ராமநாதபுரத்தில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    ராமநாதபுரம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை (19-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் கவர்னரை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு கவர்னர் அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கவர்னரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு கார் மூலம் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.

    அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்ற அவர், மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார். பின்பு மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

    இதையடுத்து மாலை 4.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மேல்தேவிபட்டிணத்தில் உள்ள நவபாஷாண கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு தேவிப்பட்டிணம் செல்லும் கவர்னர், மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனை முடிந்து கொண்டு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.

    இரவில் அங்கு தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (19-ந் தேதி) காலை 7 மணியளவில் சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்திற்கு சென்று தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண்மை பண்ணையை பார்வையிடுகிறார்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் திருஉத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதனை முடித்து கொண்டு மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் திரும்புகிறார்.

    அங்கு மதிய உணவை முடிக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி செல்கிறார். அங்கு இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

    அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக மாலை 6 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் வருகையை எதிர்த்து ராமநாதபுரத்தில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கவர்னர் பயணிக்கக் கூடிய சாலைகள், அவர் செல்லக்கூடிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • 2047-ம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும்.
    • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்கல்வியை தமிழில் பயில வேண்டும்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாரம்பரியமிக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.

    அவர்களில் 20 பேர் தமிழ்நாடு தரிசனம் என்ற பெயரில் தமிழகத்தின் பெருமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளனர்.

    கடந்த 10 நாட்களாக பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர்கள் இன்று கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

    இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு.

    இந்தி மொழியை விட தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.

    தமிழ் இல்லாமல் பிற மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    தமிழை ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும்.

    2047-ம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும்.

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்கல்வியை தமிழில் பயில வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.

    திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருக்குறள், இந்தி மற்றும் நேபாளி மொழிகளில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதை மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பரிசளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது.
    • தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வந்தது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது.

    தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறிய காவல்துறை திட்டம் வகுக்கிறது.

    முதற்கட்டமாக சென்னை சைபர் க்ரைம் காவல்துறை ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது.

    ஆன்லைன் கேம் பட்டியல்களை தயாரித்து சம்பந்தப்பட்ட, செயலி மற்றும் இணையதள நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.
    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை பறிகொடுத்த நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை அதிகரித்து வந்தது.

    இதனால் இந்த சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி முதன் முறையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கூடிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க மறுத்து சட்டத்தை ரத்து செய்து விட்டது.

    இதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் வகையில் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.

    இந்த குழு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

    இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

    அதன்பிறகு இதை நிரந்தர சட்டமாக்க 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

    ஆனால் கவர்னர் இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டார். அந்த விளக்கங்களுக்கு உரிய பதிலை தமிழக அரசு தெரிவித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் அதை திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதனால் கடந்த மாதம் 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு மார்ச் 23-ந்தேதி சட்டசபையிலும் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மறுநாளே (மார்ச் 24) இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வளவு நாள் இழுபறிக்கு பிறகு நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து இதை மீறி யாரேனும் ரம்மி, போக்கர் விளையாடினால் அவர்களுக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
    • அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இச்சட்டத்தால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:-

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு சற்றுமுன் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
    • தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடினால் அல்லது சூதாட்டம் நடத்தினால் 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். சில விளக்கங்களையும் கேட்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு சற்றுமுன் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு  5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே  தண்டனையாக விதிக்க தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நமது கவர்னர் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் "நண்பராக" இருப்பதற்குத் தயாராக இல்லை
    • ராஜ்பவனை "அரசியல் பவனாக" மாற்றிக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்த ஆண்டு "கவர்னர் உரை" கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், 2-வது முறையாக கவர்னர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை.

    ஆனால் கவர்னர், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை 2-வது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும், சுயாட்சிக் கொண்டவையாய் மாநிலங்களை மலர வைக்கவும், தி.மு.க. முன்னணிப் படையாகச் செயல்படும் என்று தலைநகர் டெல்லியில் வைத்துப் பேரறிஞர் அண்ணா கூறியதை இம்மாமன்றத்தில் நானும் வழிமொழிகிறேன். இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். அதனை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது.

    "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் தேவையில்லை" என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும், அதை முத்த மிழறிஞர் கலைஞர் வழி மொழிந்த போதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை.

    அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை.

    அனுமந்தய்யா நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1969-ல்,  "கட்சி அரசியல் வேறுபாடு மற்றும் ஒருதலை பட்சமான செயல்பாடுகளின்றி, நம்பிக்கை வைக்கக் கூடியவராக கவர்னர் இருக்க வேண்டும்" என்று கூறியது.

    முத்தமிழறிஞர் கலைஞர் நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான "ராஜமன்னார் குழு" ஒன்றிய-மாநில அரசு உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில், "கவர்னர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது" என்று பரிந்துரைத்தது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இதே மாமன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு, மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது வரலாறு.

    ஒன்றிய அரசு-மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான கமிஷன், "கவர்னர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக" இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

    அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்யப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் 2000-ம் ஆண்டு நியமித்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி வெங்கடா சலய்யா அறிக்கையும் இதே கருத்தையே வலியுறுத்தியது.

    இன்னும் சொல்லப் போனால், ஜனாதிபதியை பதவி நீக்க "இம்பீச்மென்ட்" அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பது போல, கவர்னர்களை நீக்க சட்டமன்றத்திற்கும் "இம்பீச்மென்ட்" அதிகாரம் வழங்கலாமா என ஒரு கலந்தாலோ சனையையே அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கர், "கவர்னர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட கவர்னராக செயல்பட வேண்டும்" என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தி இருக்கிறார்.

    2010-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பால கிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, "கவர்னர் நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல" என்று "பி.பி. சிங்கால்" வழக்கில் மிகத் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் கவர்னர் இருக்க வேண்டும்" என்று எத்தனையோ உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் நமது கவர்னர் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் "நண்பராக" இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதில் இருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது.

    கவர்னர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்த சட்ட மன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொது வெளியில் பேசுகிறார்.

    அவர் கவர்னர் என்ற நிலையைத் தாண்டி அரசியல் வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளைச் சர்க்காரியா அறிக்கை வரையறுத்துக் கூறியுள்ளதோ, அந்தத் தகுதிகளையெல்லாம் மறந்து விட்டுப் பேசுகிறார்.

    அதுவும் குறிப்பாக, பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

    அதற்கு மேல் சென்று, "வித் ஹோல்டு" என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று கவர்னர் விதண்டாவாதமாக பேசுகிறார். இந்த "வித் ஹோல்டு" அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார்.

    அரசியல் சட்டப் பிரிவு 200-ன்கீழ் "கவர்னரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி விட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி கவர்னருக்கு இல்லை" என்பதே தெளிவு.

    அதைவிட ஒரு மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், அதைக் கூட அமைச்சரவையின் அறிவுரைப்படியே கவர்னர் செய்ய வேண்டும் என்பதே அரசியல் நிர்ணய சபையில், இந்த அரசியல் சட்டப்பிரிவு குறித்து விவாதம் நடைபெற்ற போது சுட்டிக் காட்டப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்.

    சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்கக்கூடிய சட்ட மன்றங்களுக்கு வழங்கி விட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன கவர்னருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

    அரசியல் சட்டம் கவர்னருக்கு தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    அதனால்தான் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளையும் மீறி, அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்துப் பொது வெளியில் பேசுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள "மதச்சார் பின்மைக்கு" எதிராகப் பேசுகிறார்.

    தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் குறுக்கே நிற்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை, இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார்.

    நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை "அரசியல் பவனாக" மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக கவர்னர் செயல்படுகிறார்.

    கவர்னரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல. கவர்னரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். கவர்னர் பேசி வந்த கருத்துகளுக்கு, பதிலுக்குப் பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை.

    அதே நேரத்தில், சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக, நாம் இந்த அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது இல்லை. எடுத்தவுடன் சட்டம் போடு வதும் இல்லை. நீட் விலக்குச் சட்டமாக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமாக இருந்தாலும், எத்தனைக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றினோம் என்பதை இந்த அவைக்கு விளக்கத் தேவையில்லை.

    ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைப்படி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா என்பது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

    மக்கள் கருத்து, வல்லுநர்கள் கருத்து, சட்டங்கள், தீர்ப்புகள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய உங்களுடைய கருத்துகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் உருவாக்குகிறோம்.

    இப்படிப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசின் கவர்னர் உரையில் இருந்த சில பகுதிகளை, சொற்களை தவிர்த்துவிட்டு கவர்னர் உரையாற்றியதை திருத்துவதற்காகவும், அரசின் கவர்னர் உரையை முழுமையாக பதிவு செய்வதற்காகவும், நானே முன் மொழிந்து இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் 9.1.2023 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். இன்று, இதே மாமன்றத்தில், உங்கள் முன் ஒரு தீர்மானத்தை மொழி கிறேன்.

    பேரவைத் தலைவர் அவர்களே, "தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாய கரீதியான கடமையும் உள்ளது.

    இவற்றைக் கருத்தில் கொண்டு, மாண்புமிக்க இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழக கவர்னர் அனுமதி அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் கவர்னர் தெரிவிக்கும் சர்ச்கைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப் படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

    எனவே மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஜனாதிபதியையும் வலியுறுத்துவது என்றும்,

    மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்ட மன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, கவர்னருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது." என்னும் தீர்மானத்தை நான் மொழிகிறேன்.

    உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டு, அமைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதன் பிறகு முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள்.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர். 144 உறுப்பினர்களின் ஆதரவோடு தனித்தீர்மானம் நிறைவேறியது.

    விவாதம் தொடங்கும் போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி ஆகியோர் சபையில் இருந்தனர். அவர்கள் தீர்மானம் தாக்கல் ஆனதும் வெளிநடப்பு செய்து விட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.
    • அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும்.

    * நாள்தோறும் கூட்டங்கள் நடத்தி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார்.

    * வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.

    * அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

    * ஆளுநர் பேசி வந்த கருத்துக்களுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை.

    * ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

    * மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உண்டு.

    * மக்கள் நலனுக்காக கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் பேரவை வருந்துகிறது.

    * ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும்.

    * மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு மத்திய அரசு காலம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துவிட்டதால் அவர்களது இருக்கை காலியாக இருந்தது.
    • சட்டசபையில் உள்ள 6 டிவிசன் வாரியாக உறுப்பினர்களை எண்ணும் பணி நடந்தது.

    சென்னை:

    சட்டசபையில் கவர்னரின் செயல்பாடுகள் பற்றியோ, அவரது நடவடிக்கைகள் பற்றியோ விமர்சிக்க இயலாது. ஆனால் அவ்வாறு கவர்னரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் சட்டப் பேரவை விதி 92(7)-ல் அடங்கியுள்ள 'ஆளுனரின் நடத்தை குறித்து' என்ற சொற்றொடர், விவாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கவர்னரின் பெயரை பயன்படுத்துவது என்ற சொற்றொடர் மற்றும் விதி 287-ல் அடங்கிய 92(7) ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து அரசினர் தனித்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    இந்த தீர்மானத்தை சபையில் பெரும்பான்மை இருந்தால்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் சபாநாயகர், உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கையை கணக்கிட உத்தரவிட்டார். இதற்காக சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன.

    சட்டசபைக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டெடுப்பு முடியும் வரை எழுந்து வெளியே செல்லக்கூடாது என சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    இந்த ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துவிட்டதால் அவர்களது இருக்கை காலியாக இருந்தது.

    ஆனால் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி (நாகர் கோவில்), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் அவையில் இருந்தனர். இவர்கள் கடைசி சமயத்தில் தான் எழுந்து வெளியே செல்ல முற்பட்டனர்.

    ஆனால் சட்டமன்ற கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் வெளியே செல்ல முடியவில்லை.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓட்டெடுப்பு நடப்பதால் நீங்கள் இப்போது வெளியே செல்ல இயலாது. தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ நீங்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம் என்றார்.

    அதன்பிறகு ஓட்டெடுப்பு எண்ணிக்கையின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதன்படி சட்டசபையில் உள்ள 6 டிவிசன் வாரியாக உறுப்பினர்களை எண்ணும் பணி நடந்தது.

    அதில் 144 பேர் தீர்மானத்தை ஆதரித்தனர். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் எதிர்த்தனர். யாரும் நடுநிலை வகிக்கவில்லை.

    ஓட்டெடுப்பு முடிந்ததும் சபாநாயகர் கூறுகையில், "அவை முன்னவரின் தீர்மானத்தை 146 பேரில் 144 பேர் ஆதரித்துள்ளதால் சட்டசபை விதி 287-ன் கீழ் 92 (7)-ல் உள்ள சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரின் செயல்பாடு குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

    சட்டசபையில் கவர்னரை விமர்சித்து பேசும் இதேபோல் ஒரு விவகாரம் ஜெயலலிதா ஆட்சியின் போது நடைபெற்றுள்ளது.

    தமிழக கவர்னராக சென்னாரெட்டி இருந்த போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது சென்னாரெட்டி பற்றி சட்டசபையில் பேசுவதற்காக விதியை தளத்தினார்கள். அதேபோன்ற விவகாரம் இப்போது மீண்டும் நடந்து உள்ளது.

    ×