என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண்வள"
- வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “சமச்சீர் உரமிடல் மற்றும் இயற்கை முறையில் மண்வள மேம்பாடு” இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி நாளை நடைபெற உள்ளது.
- இதில் விவசாயிகள் பங்கேற்க அைழப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை(செவ்வாய்ககி்ழமை) காலை 10 மணிக்கு "சமச்சீர் உரமிடல் மற்றும் இயற்கை முறையில் மண்வள மேம்பாடு" என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மண் மற்றும் பாசன நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்ளுக்கேற்ற சமச்சீர் உரமிடல், மண்வள மேம்பாட்டு அணுகு முறைகள், பயிர்களில் சத்துக்குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யும் முறைகள், மண்சார்ந்த பிரச்சனைகளுக்கேற்ற நிவர்த்தி முறைகள் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்படும்.
இத்துடன் மண் மற்றும் நீர் மாதிரி சேகரிக்கும் முறைகள், ஊட்டமேற்றிய மட்கு உரம் தயாரிக்கும் முறைகள், ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் முறைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படும். ஆகையால் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை அறிவியல் துறை அலுவலர் கேட்டு கொண்டுள்ளார். முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.