search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234636"

    • 1842 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு ஏராளமான மாணவ-மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். அதே போல் நீங்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேஷ் பாண்டியன், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர்உசேன், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா நடந்தது.
    • தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, அவற்றை நடவு செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் குண்டல அள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா நடந்தது.

    விழாவில் பேசிய அனைவரும், 'மனித குலமும், இதர உயிரி னங்களும் இந்த மண்ணில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ உதவுவது ஒசோன் படலம் தான். அதன் வாழ்வு நீடித்தால் தான் இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகை உயிரினங்களின் வாழ்வும் நீடிக்கும்.

    வசதிக்காகவும், சொகுசுக்காகவும் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை ஓசோனை பாதிக்கிறது. இதுபோன்ற உபகரணங்களின் துணை யின்றி குழுமையான காலநிலையை நீடிக்கச் செய்ய மரங்கள் பேரூதவி யாக உள்ளன. மரங்கள் மண்ணின் வரங்களாக உள்ளன. எனவே, மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்போம் என்றனர்.

    பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதாகரன், அண்ணாதுரை, காரிமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    'இயற்கையைக் காப்போம்' அமைப்பின் நிறுவன தலைவர் தாமோ தரன் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, அவற்றை நடவு செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளித்தார். விழா முடிவில் ஆசிரியர் ராகவேந்திரன் நன்றி கூறினார்.

    • கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
    • தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினாா்.

    இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

    இதைத் தொடா்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஊட்டி காந்தல் பகுதியைச் சோ்ந்த தாரணி, பந்தலூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூா் உலிக்கல் பகுதியைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு, செப். 11-

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.

    இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

    ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் இருந்து தொடங்கி நந்தா கலை அறிவியல் கல்லூரி வரை சென்று விட்டு மீண்டும் வீரப்பம் பாளையம் பிரிவுக்கு வரவேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4-வது முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்களது பள்ளியில் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • பிராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றி முழுமையாக தெரிவதில்லை.

    கோவை:

    18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

    பெரும்பாலான குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தோ, அது குறித்து யாரிடம் கூற வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக தெரிவதில்லை. இதை தவிர்க்க கோவை மாவட்ட போலீசார் சார்பில் பிராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கான பாதுகாப்பை மையப்படுத்தி பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறான தொடுதல், பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, அது தொடர்பாக யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள், அதற்குரிய தண்டனைகள், பாலியல் குற்றத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தால் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், சமூக வலைதளங்களை கையாளுவது உளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது.

    10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் எவை? அதனால் ஏற்படும் உடல், மன ரீதியிலான மாற்றங்கள், எதிர்கால பாதிப்புகள், சமூகவலைதளங்களைக் கையாளுதல் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகளிர் நல அலுவலர், குழந்தை நல அலுவலர் என 2 பயிற்சி பெற்ற போலீசார் உள்ளனர்.

    இவர்கள் மூலம் அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 56 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.156 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போக்சோ வழக்கில் கைதானாலும் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்ட விழிப்புணர்வு மூலம் வளர்ப்பு தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி, நண்பரால் பாதிக்கப்பட்ட சிறுமி என 2 பேர் தைரியமாக வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு துன்புறுத்தல் அளித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல விதமான போட்டிகள் நடத்தபட்டது.
    • மாணவ, மாணவிகள் கலைநிகழ்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் பள்ளிகளுக்கிடையே பல விதமான போட்டிகள் நடத்தபட்டது. அதை தொடர்ந்து ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு சுவாமி ராகவேஷாநந்தர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி அலுவலர் தமோதரன், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்

    விழாவில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் கலைநிகழ்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது 

    • கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குபேச்சுப்போட்டி ,கவிதை, உரையாடல், பாடல், நடனம், ஓவியம் வரைதல் ,கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் கல்வியி யல் வல்லுனர் புகழேந்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது மாணவர்கள் விளையாட்டு மற்றும் கலை துறையில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். மாணவர்களாக மட்டும் இல்லாமல் அடுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். எனக்கூறி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை ஆற்றினார். விழாவில் செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணி மேகலை,நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரளிக்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-ரொக்க பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
    • இந்த பள்ளி தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரளிக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவரது தாய் தந்தை கருத்தான் - கருப்பாயி அம்மாள்நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளை சார்பில் அவரின் சொந்த நிதியில் இருந்து அந்த பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் 12-வது ஆண்டாக அந்த பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ10 ஆயிரம் ரொக்க பரிசினையும், 2-வது பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் அந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கடிகாரத்தையும் அமைச்சர் வழங்கினார். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்று மேல்நிலைப் பள்ளியிலும் அதை தொடர்ந்து கல்லூரி படிப்புக்கு செல்லும் மாணவ- மாணவிகளுக்கு இந்த அறக்கட்டளை சார்பாக அவர்களின் கல்விக்கான செலவையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியே செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி இன்று நடந்தது. இதில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

    இதேப்போல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பர்கூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, பச்சாம்பாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட 55 அரசு பள்ளியில் பயிலும் 200 மாணவ-மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி இன்று காலை 10 மணி அளவில் நடந்தது.

    இதில் முதன்மை நடுவர் ராமசாமி மேற்பார்வையில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.பவானி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, அந்தியூர் வட்டார கல்வி அலுவலர்கள் மாதேஷா முருகன் மற்றும் டி.ஐ. மோகன்குமார் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) லிங்கப்பன்,

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமா வளவன், ஜெயந்தி மற்றும் உடற்கல்விஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

     நெரிஞ்சிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளாங்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையத்துக்கு பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதேபோல் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடுமுடிக்கு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலைக்கு ஈங்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    • கல்வராயன்மலையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு திறன்வளர் பயிற்சி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
    • 142 பழங்குடியின மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரி ஆண்கள் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு திறன்வளர் பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சி முகாமில் குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீ, 200 மீ, 400 மீ, கபாடி மற்றும் வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில் திறன்மிக்க விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் 10 நாட்களுக்கு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதில் 142 பழங்குடியின மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

    முகாமின் முக்கிய நோக்கமே மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை உடற்பயிற்சி ஆசிரியர்கள் வெளிக்கொணர்ந்து மாநில, தேசிய மற்றும் உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்திடும் வகையில் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியின மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி முகாம் உறுதுணையாக இருக்கும் என கூறினார்.அப்போது திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) இளங்கோ,கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியர் அசோக், கல்வராயன்மலை ஒன்றியக்குழு பெருந்தலைவர் சந்திரன், வெள்ளிமலை ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாமலை, வெள்ளிமலை ஊராட்சிமன்ற தலைவர் இரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் எழுதினர்.
    • 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 218 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் எழுதினர்.

    திருப்பூர் :

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதன் பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 804 மாணவர்கள், 14 ஆயிரத்து 827 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 631 பேர் எழுதினர். இதில் 12 ஆயிரத்து 459 மாணவர்களும், 13 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதுபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டினர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 30-வது இடமும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7-வது இடமும் பிடித்துள்ளது.

    ×