என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச யோகா தினம்"
- பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினமான நேற்றுமுன்தினம் (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தாங்கள் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
அந்த வகையில், பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான அர்ச்சனா மக்வானா என்பவர் பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அப்படி அவர் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலில் யோகா செய்த வீடியோவை பகிர்ந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சீக்கிய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து அர்ச்சனா மக்வானா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அர்ச்சனா மக்வானா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
- உலகம் முழுக்க யோகா தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
- எளிமையான யோகா பயிற்சியை யோக தத்துவா மூலம் கற்றுக்கொள்ளலாம்.
யோகாவை அங்கீகரிக்கும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
யோகா பயிற்சி, யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என உலகம் முழுக்க யோகா தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
இந்த நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியாளரும் யோக தத்துவா மையத்தின் நிறுவனருமான பத்ம பிரியதர்ஷினி, "அனைவரும் எல்லா விதமான யோகா பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "யோகா மற்றும் அக்குபஞ்சர் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அவரவர் செய்கிற வேலைக்கு ஏற்றார் போல் எளிமையான யோகா பயிற்சியை யோக தத்துவா மூலம் கற்றுக்கொள்ளலாம்" என்றார்.
மேலும் கழுத்து, முதுகு, மூட்டு எலும்புகளில் ஏற்படக்கூடிய வலிகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற சிறிய சிறிய யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். யோக தத்துவா மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கழுத்து, முதுகு உள்ளிட்ட வலிகளில் இருந்து நிவாரணம் பெற யோகா பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இதன் வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும். யோக தத்துவா மூலம் தனிமனிதர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
யோகா தெரபி மட்டுமின்றி உணவுக்கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றும் போது ஒருவரது உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும்.
ஒருவர் தன் வாழ்க்கைக்கு ஏற்றார் என்னென்ன மாதிரியான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் மூலம் என்னென்ன மாதிரியான சத்துக்கள் கிடைக்கும் என்பதை அறிவுறுத்தி வருவதாக பிரியதர்ஷினி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு பெற 15 நிமிடங்களே செய்யக்கூடிய யோகா பயிற்சிகள் உள்ளன. சர்க்கரை நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பல பயிற்சிகள் யோகாவில் உள்ளன" என்றார்.
- நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
- நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
யோகா என்பது நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனம் மற்றும் இடத்தை ஒருசேர ஒருங்கிணைக்க அறிவியல் பூர்வமாக இயற்கையின் வழி நின்று உதவும் ஒரே கருவி யோகாதான். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத்சிங், அபிராமி, சம்யுக்தாஷான் ஆகியோர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
- யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் யோகா சனங்களை செய்தார்.
நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-
யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.
இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.
வடவள்ளி:
உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் நடந்தது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களையும் செய்தார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து ஆசனங்களை செய்தனர்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது யோகா தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா என்பது ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி கிடைக்க செய்தார். உலக நாடுகள் அனைத்தும் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.
மனதிற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கும் யோகாவை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது.
- மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி கூறுகையில், யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை ஸ்ரீநகரில் உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014-ல் நான் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன, இதுவே சாதனையாக இருந்தது. அதன்பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
நான் வெளிநாட்டில் இருக்கும்போது, உலகத் தலைவர்கள் என்னிடம் யோகா பற்றி விவாதிக்கிறார்கள். 10வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வேளையில், யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது. இன்று உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரத்தை முன்னோக்கிப் பார்க்கிறது. இந்தியாவில் இருந்து ரிஷிகேஷ் மற்றும் காசியில் இருந்து கேரளா வரை யோகா சுற்றுலாவின் புதிய இணைப்பு காணப்படுகிறது.
உலகெங்கிலும் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் இந்தியாவில் உண்மையான யோகாவை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல், ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், சண்டிகர் முதல் மந்திரி விஷ்ணு தியோ சாய், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, எச்.டி.குமாரசாமி, ஹேமா மாலினி, பி.எல்.வர்மா, சிவ்ராஜ் சவுகான், நிதின் கட்காரி, பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி, பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தனர்.
மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.
- இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம்.
- இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நியூயார்க்:
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்' என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இங்கு நடைபெறும் யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
- மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
- காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.
மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் உள்ள வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஹிசாரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
#WATCH | Haryana CM Nayab Singh Saini performs Yoga at a Yoga event in Hisar, on the occasion of International Day of Yoga. pic.twitter.com/FSYI1jjIZz
— ANI (@ANI) June 21, 2024
காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர்.
- 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி முதல் முறை காஷ்மீர் செல்கிறார்.
ஸ்ரீநகர்:
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர் என கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
3-வது முறை பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது.
சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதியவர் ஒருவர் யோகா செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கியது. சுவாமி சிவானந்தா என்று அழைக்கப்படும் யோகா ஆசிரியரான அவருக்கு தற்போது 127 வயதாகிறது. யோகா கலையில் அவரது செயல்பாடுகளை பாராட்டி பத்மஸ்ரீ கவுரவம் பெற்றுள்ளார்.
தீவிர யோகா பயிற்சியால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் சில யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது. யோகா மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
- கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.
- பேராசிரியர் சுமதி சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாத்துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக யோகா தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.செயலர் ஷோபா தலைமையுரை ஆற்றினார்.
மேலும் தமது தலைமையுரையில், மாணவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மனவலிமை மற்றும் உடல்நலம் பெற முடியும் என்பதை அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாணவர் களும் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
யோகாத்துறை பேராசிரியர் சுமதி பெண்களுன சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.
ஆயுட்காலத்தை நீடிக்கும் உணவுமுறைகள் மற்றும் முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தாவரவியல் துறை தலைவர் மஞ்சுளா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையாக அமைந்தது. இவ்விழாவானது இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவுற்றது.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார்.
- உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான படத்தை அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச யோகா தினமான இன்று விண்வெளி நிலையத்தில் யோகா பயிற்சி செய்து வருகிறேன். யோகா உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் கூர்மைபடுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்