search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணர்"

    • அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை.
    • குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.

    பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது. அவரது புல்லாங்குழலில் இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சியுண்டாக்கும்படி செய்தது.

    கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும். கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பு நிறைத்து விடும்.

    தெய்வீகமான அப்புல்லாங்குழலில் இருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும். அது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும்.

    அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை. யாரொருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.

    குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது. அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது. ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன.

    அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்பு ணர்வு பெற்றது. அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை.

    • எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
    • ‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும்.

    'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.

    பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

    • ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு.
    • ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.

    கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார். வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணெயும் ஏந்தியுள்ளார். தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.

    அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள். அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.

    • ஸ்ரீகிருஷ்ணரை பாமா, ருக்மணி சமேதராக வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும்.
    • பாமா “ பூமாதேவி” அம்சம் என்றும் ருக்மணி “லட்சுமி” அம்சம் என்றும் கூறுவதுண்டு.

    கிருஷ்ணருடன், பாமா, ருக்மணி ஆகியோர் இணைந்து காட்சி தருவர். விஷ்ணு சகஸ்ர நாமத்தில் "சத்ய பாமாப்யாம் சகிதயும் கிருஷ்ணமாச்ரயே" என்ற சுலோகம் வருகிறது. இதன் அடிப்படையில் தென்னகத்தில் பாமா ருக்மணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாமா " பூமாதேவி" அம்சம் என்றும் ருக்மணி "லட்சுமி" அம்சம் என்றும் கூறுவதுண்டு.

    பூமாதேவி பூலோக மக்களின் குறையை வானத்தில் உள்ள லட்சுமியிடம் எடுத்து சமர்ப்பிக்கிறாள். அதை லட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வகை செய்கிறாள். எனவே ஸ்ரீகிருஷ்ணரை பாமா, ருக்மணி சமேதராக வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வடமாநிலங்களில் ருக்மணியும், சத்யபாமாவும் இணைந்த வடிவத்தை "ராதை" எனக்கருதி ராதைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

    • சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன்.
    • சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன்.

    துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான். மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர். சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்து விட்டான்.

    சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன். தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார். முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான்.

    ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவுபதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார். முடிவாக சகுனி, "உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததை யெல்லாம் மீண்டும் பெறலாம்" என்று தூண்டினான்.

    அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார். துரியோதனன், "நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள்" என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான். திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டி இருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனனிடம் கட்டளையிட்டான். அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான்.

    துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.

    திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, "ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை" என ஓலமிட்டாள். அந்த அனா தரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    தனக்கு தக்க சமயத்தில் உதவிய திரவுபதிக்கு கிருஷ்ணரும் தக்க சமயத்தில் உதவி மானம் காத்தார்.

    • கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன்.
    • விதுரரின் பிறப்புப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான்.

    பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் தூது புறப்பட்டார் கிருஷ்ணர். கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்துண்டார். முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன்.

    அவையில் இருந்தவர்களிடம், "யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்கக்கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டான்.

    ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தோற்றத்தில் மயங்கி அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர். துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், "கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?" என்று கேட்டான். வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.

    ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்துவிட்டான். நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால், விதுரரின் பிறப்புப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான்.

    "தர்மத்தின் பக்கம் தான் நிற்பான்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவி செய்ய எனக்கு மனமில்லை!" என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்துவிட்டார்.

    நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனனுக்கு உதவினால், பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால், துரியோதனனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி, அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்தது கிரிஷ்ணரின் தந்திரம் ஆகும்.

    • பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது.
    • கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.

    "அநுராக மனோரமம் முக்தசங்க மனோரமம்" என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றிப் பணிவர். அநுராக மனோரமம் என்றால் அன்பர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவன் என்று பொருள். முக்தசங்க மனோரமம் என்றால் முற்றும் துறந்த பற்றற்ற பரமஞானியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன் என்று பொருள்.

    ஸ்ரீமந் நாராயணனுக்கு ஆழ்வார்கள், ஸ்ரீராமருக்கு வானரங்கள், சிவபெருமானுக்கு நாயன்மார்கள் என்பது போல் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோபிகா ஸ்திரிகளும் அடியார்களைப் போல் அபரிதமான பக்தி கொண்டிருந்தனர்.

    கண்ணன் மீது நீங்காத பக்தி பூண்ட கோபியர்கள் பூவுலகில் பெரும் புண்ணியத்தைச் செய்து பிறந்தவர்கள். கண்ணனின் மோகக் குழலோசைக்கு அந்த மோகனப் பதுமைகள் மதி மயங்கிப் போயினர்.

    கோபிகாஸ்திரிகளின் பிரேமை (மயக்கம்) என்பது ஒரு வித்தியாசமான பக்தி. அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது. அற்புதமானது, ஆனந்தமயமானது.

    பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது. அதே போல் கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.

    ஸ்ரீகிருஷ்ணன் மதுராபுரிக்குச் சென்றதும், அவனது பிரிவை கோபியர்களால் தாங்க முடியவில்லை. கண்ணனிடம் பூண்டுள்ள பிரேமையை அவர்களால் மறக்க முடியவில்லை.

    கோபியர், கண்ணனின் திருமேனியைத் தரிசித்து மகிழ்ந்த பக்திப் பாவையர்கள். அவர்கள் நிலையான பேரின்பத்தைக் கண்டவர்கள். சிற்றின்பத்தைக் காணாதவர்கள்.

    கோபியர், தாங்கள் ஸ்ரீகிருஷ்ணனிடம் கொண்டுள்ள அபரிதமான தாபத்தினால் உலகையே மறந்து விடுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் ஆனதால் கோபியர்களின் பிரேமையும் நிர்குணசொரூப மடைந்து ஜென்ம சாபல்யம் அடைகிறது.

    கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர். ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.

    அல்லும் பகலும் பக்தனைப் போல் பரந்தாமனிடம் பக்தி பூண்ட கோபியர் எங்கும், எதிலும், எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனுடைய மோகனரூபத்தைக் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டவர்கள். அதனால்தான் இன்றும் ஹரிகதா காலசேபங்கள் பூர்த்தி பண்ணும் போது, "கோபிகா ஜீவன ஸ்மரணம்" என்று கூறப்படுகிறது.

    கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.

    • கிருஷ்ணர் பல அற்புதங்களை புரிந்தார்.
    • இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.

    ஸ்ரீகிருஷ்ணர் இப்பூவுலகில் தனது அவதார நோக்கத்துக்காகப் பல அற்புதங்களை புரிந்தார்.

    தேரோட்டிய சாரதி :

    பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்சபாண்டவர்களைக் காத்தார். தனது விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனுக்குக் காட்டி அருளினார்.

    பகவத் கீதை :

    பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது. இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது. பகவத் கீதையின் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது. பகவத் கீதையில் கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று விதமான யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.

    கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல்

    ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார். அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார். எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தனகிரி யாகத்தைத் தொடங்கினர். தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள். பசுக்களையும் பூஜித்தனர். பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன.

    இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து, யாதவர்கள் அருளிய நைவேத்தி யங்களை எல்லாம் ஏற்று அருளினார். மலைச் சிகரத்தையும் அர்ச்சித் துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

    இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால், இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, 'கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில் பெருமழை பெய்வித்து, மாடுகளை எல்லாம் அவிழ்த்து விடுங்கள்' என்று கட்டளையிட்டான்.

    இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன. இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன. காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின. பயந்தகுரலில் கத்தின.

    பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்பட்டனர். இதைக்கண்ட ஸ்ரீகிருஷ்ணர், 'இந்த நிலைக்கு இந்திரனே காரணம். ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்' என்று கிரியையே பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார். இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்று களுக்கும் மலை குடைக்குள் வரவழைத்து பாதுகாப்பு அளித்தார். அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான். மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

    தேவேந்திரன் தன் தவறை உணர்ந் தான். மகா விஷ்ணுவே கிருஷ் ணராக அவதரித் திருக் கிறார் என்பதை அறிந்தான். தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். தன் னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உணரலாம்.

    • ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம் துவாரகை.
    • இத்தல கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம்.

    வைணவ திருத்தலங்களில், பெருமாள் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தைத் தரிசித்திருக்கிறோம்.

    அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம் துவாரகை. இந்த தலத்தில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம். ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பர்கள்.

    எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம்.

    இதையும் தாண்டிச் சென்றால் கண்ணனின் திவ்விய தரிசனம் கிடைக்கும்.

    • அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும்.
    • அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

    அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நற்காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் செய்யப்படுவதில்லை. இந்த மூன்று தினங்களிலும் தொடங்கும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே போகும் என்று சொல்கிறார்கள். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

    அஷ்டமி: கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்தே. அவர் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார். இறுதியில் வெற்றி பெற்றார். எனவேதான் அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், வீடு குடி புகுதல், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்நாள், தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு உகந்த நாளாகும். குறிப்பாக செங்கல் சூளைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.

    நவமி: அமாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். இந்த திதியில் தான் ராமபிரான் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில், காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் சொல்லில் அடங்காதவை. இதன் காரணமாகவும் நவமி திதியை பலரும் நற்காரியங்கள் செய்ய தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த திதியும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

    பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

    கரிநாள்: இந்த நாளைப் பற்றி அறிந்து கொள்ள, முதலில் திதி, நட்சத்திரக் கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக்கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். குறிப்பிட்ட திதி, நட்சத்திரம் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அது கரி நாளாக கருதப்படுகிறது. பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் தொடங்கினால், அது விருத்தியைத் தராது என்பார்கள். இனி தொடரக்கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை இந்த கரிநாளில் செய்யலாம். குறிப்பாக கடனை திரும்பி செலுத்துதல். அன்றைய தினம் கடனை அடைத்தால், மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது.

    • சந்திர பகவான் தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம்.
    • இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

    உடுப்பி கிருஷ்ணர் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

    விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகி ருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.

    தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் 'சந்திர புஷ்கரணி'. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

    உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

    புதிய சுவாமி மடத் தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

    முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.

    கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.

    • நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது.
    • கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான்.

    நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி.

    யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.

    கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு, கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான்.

    அவன் கண்ணனிடம், 'கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன்' எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.

    கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான்.

    ததிபாண்டன் அப்போதும் விடவில்லை.

    'கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு!' என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.

    ×