search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள்"

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • இரணியல் போலீசார் தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேனகா (வயது 39).

    இவரது கணவர் ஜோஸ்லின் பாபு,கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு 12 வயது மகளுடன் வசித்து வந்த மேனகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 2 குழந்தைகளுடன் மேனகா குருந்தன் கோட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று குருந்தன்கோடு வந்த ஜெய பால், ஆலயத்திற்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை குருந்தன் கோடு கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்துள்ளார்.

    மேலும் மகனை தன்னு டன் அனுப்ப கூறி தகராறு செய்து உள்ளார். ஆனால் மகனை கொடுக்க மேனகா மறுத்தார். இதனால் ஆத்தி ரம் அடைந்த ஜெயபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேனகாவை வெட்டினார்.

    இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது 12 வயது மகள் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மேனகா மற்றும் அவரது மகளைஅங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்து வர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேனகாவின் உறவுப் பெண் சிஜி (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    • விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.
    • 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது

    மதுரை

    மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக தகராறு செய்து ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ரமேஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    இதில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் ரமேசை வெட்டியதாக முருகன், அவரது மனைவி செல்வி, மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ், தமிழரசன் ஆகிய 4 பேரையும் கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.

    • தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளிக்கு அரிவாள் வெட்டு.
    • இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளி கங்காதரன் (வயது30). இவருடைய தங்கையை தாரமங்கலம் சக்கரை விநாயகர் கோவில்

    பகுதியை சேர்ந்த சந்தான கோபால் (38) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து

    வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    மேலும் பணம் வாங்கி வரச்சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளார். கங்காதரன் இதனை கண்டித்து வந்த தால் ஆத்திரம் அடைந்த சந்தானகோபால் நேற்று மதியம் கங்காதரன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கங்காதரன் வெட்டி யுள்ளார்.

    கங்காதரன் அங்கி ருந்து தப்பி ஓடிய போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சந்தானகோபால் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி கங்காதரனிடம் வாக்கு மூலம் பெற்று தாரமங்கலம் போலீசார் சந்தானகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடும்ப தகராறில் மைத்துனரை அரிவா ளால் வெட்டிய சம்பவம்

    தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயிகளுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி வழங்கல்.
    • வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காட்டில் ரூ.38 லட்சம் செலவில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாநந்தினிபிரபாகரன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவைத் தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்று பேசினார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய வேளாண்மை விரி வாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து விவசாயி களுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி, பாறை வழங்கி பேசினர்.

    விழாவில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜிஎன்.ரவி மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், துணை வேளாண்மை அலுவலர்கள் ரவிச்சந்திரன், வேதை ராஜன், அலெக்சாண்டர், விஜய்அமிர்தராஜ், விதை அலுவலர் அசோக், கிடங்கு மேலாளர்கள் சரவணன், ரம்யா, வெங்கடேசன் மன்சூர் கலந்து கொண்டனர். ஒப்பந்தக்காரர் பழனிவேல் நன்றி கூறினார்.

    இதேபோல் காரை மேடு பகுதியில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை கட்டிடத்தையும், கொள்ளிடம் வடகால் பகுதியில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண் மையக் கட்டிடங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இரு தரப்பைச் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு
    • தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள கீழ மணக்குடி யைச் சேர்ந்தவர் விக்டர் (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் 

    அப்போது அங்கு வந்த சார்லஸ் (47), ஜான் பிரிட்டோ (26) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தகறாறு செய்து உள்ள னர். மேலும் அரிவா ளால் விக்டரின் இடது கன்னத்தில் வெட்டினர். இதை தடுக்க வந்த ஜோசப் பிராங்கோ (30), சகாயராஜ்(57) ஆகியோரும் அரிவாளால் வெட்டப்பட்டதாக தென் தாமரை குளம் போலீ சில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்களுடன் வந்த சிலர் தனது தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் விக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த சகாய மிதின்மோன்( 18) என்பவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் நண்பர்களு டன் விக்டர் வீட்டு பக்கம் சென்ற போது சுந்தர்( 42), சகாயராஜ், பிராங்கோ, ஜோசப் ஆன்றணி (50), தாசன் (45) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த விக்டர், ஜோசப் பிராங்கோ, சகாயராஜ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யிலும், சகாய மிதின் மோன் கன்னியாகுமரி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

    இது குறித்து தென் தாமரை குளம் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பபையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடந்த 18-ந் தேதி அஜின் (22) என்பவர் வேகமாக பைக் ஓட்டி வந்து, சகாய ஜோசப் (57) என்பவர் மீது மோதிய தாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பெண்ணை கம்பு மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
    • பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை பார்வ திபுரம் அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வமேரி (வயது 40). கடந்த.2012 ம் வருடத்தில் செல்வமேரி வீட்டு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்ட பழைய துணிகளை யாரோ போட்டு சென்று விட்டதாக செல்வமேரி திட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் அருகில் குடியிருந்து வந்த அந்தோணி தாஸ் (வயது 48) அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செல்வ மேரியை கம்பால் மற்றும் அருவாளால் வெட்டி தாக்கி உள்ளனர்.

    இதனை தடுக்க வந்த ஸ்டாலின் மற்றும் சார்லஸ் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செல்வமேரி கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தோணி தாஸ், அர்விஸ் ஆகிய இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்ப ட்டனர்.

    இந்நிலையில் பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி, அந்தோணி தாஸ், அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அர்விஸ்க்கு ரூ.1,500, அந்தோணி தாஸ் க்கு ரூ.1000 அபராத தொகை விதிக்கப்பட்டது.

    • மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவாளால் முகத்திலேயே சரமாரியாக வெட்டினர்.
    • விசாரணையில் சுவாமிநாதனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    வல்லம்:

    தஞ்சாவூர் அருகே வடக்கு வாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 36).

    பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    வெளியூரில் தங்கி இருந்த சாமிநாதன் தீபாவளி பண்டிகைகாக தஞ்சைக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து சுவாமிநாதன் தஞ்சை அருகே உள்ள‌ பிருந்தாவனம் ஆர்ச் அருகே வந்துள்ளார்.

    அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவா ளால் முகத்திலேயே சரமாரி யாக வெட்டினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் இறந்தார்.

    இதைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார்வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில், சுவாமிநா தனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்ப ட்டுள்ளார். இதற்கு பழிக்குப்பழி வாங்கு வதற்காக சுவாமிநாதன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.

    தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே பிரேம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • கலெக்டர் உத்தரவுபடி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பள்ளியக்ரஹா ரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் பிரேம் (வயது 30). நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்ப ட்டார்.

    இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மனக்கரம்பையை சேர்ந்த விஸ்வ பிரசாத், பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இவர்களில் மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த உத்தரவு நகல்களை திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்‌.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள காரங்காட்டு அடுத்த புல்லுவிளையை சேர்ந்தவர் பால்பாண்டி யன் (வயது 67). இவர் பேயன்குழியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் பூமி நாதன் தெருவைச் சேர்ந்த அஜி (43) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பேயன்குழி வந்த அஜி, பால்பாண்டியனிடம் தனக்கு தரவேண்டிய ரூ.4 லட்சம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அஜி, பால்பாண்டியனை அரிவாளால் வெட்டியதில் பால்பாண்டியனின் இடது உள்ளங்கை மற்றும் முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து பால்பாண் டியன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்குப் பதிவு செய்து அஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜி முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    குருந்தன்கோடு ஆசாரிவிளை கொல்ல மாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன் ராஜன், கட்டிட தொழிலாளி.

    இவரது வீட்டில் கடந்த மாதம் ரூ.47 ஆயிரம், 2 கிராம் தங்கம் திருட்டு ேபானது. இது குறித்து இரணியல் போலீசில் அவர் புகார் செய்தார். அதில் தனது நண்பரான ஆசாரிபள்ளம் பெருவிளையைச் சேர்ந்த செல்வமணி மகன் ராஜன் மற்றும் அவரது நண்பர் தான் நகை-பணத்தை எடுத்துச் சென்றதாக கூறியி ருந்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரு விளையில் உள்ள ராஜன் வீட்டிற்கு வந்த, கட்டிட தொழிலாளி ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் பள்ளிவிளையில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராஜன் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்.மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கட்டிட தொழிலாளி ராஜனை தலை மற்றும் உடல் பகுதியில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த ராஜன் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார், இன்ஸ்பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வமணி மகன் ராஜனை தேடி வரு கின்றனர்.

    • தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி, மகன்களுடன் தகராறு செய்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி- மகன்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அருகில் உள்ள உறவினர் பரமசிவம் வீட்டில் சென்று அவரது மனைவி தனது மகன்களுடன் தங்கியிருந்தார்.

    அப்போது அங்கு வந்த நரசிம்மமூர்த்திக்கும், பரமசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நரசிம்மமூர்த்தி உயிரிழ ந்தார்.இது குறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி ரத்தினகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
    • விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருபுவனம் மேல சாலை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சக்தி பிரகாஷ் (19), பிரிதிவிராஜன்(20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி ரத்தினகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் படுகா யமடைந்த ரத்தினகுமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி னர். முதல்கட்ட விசார ணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரகாஷ், பிரிதிவிராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×