என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லஞ்சம் கைது"
- ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
- மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மனோஜ்(வயது52). இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தது.
ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். அதன்படி அந்த ரிசார்ட் தகுதி சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தது. தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர் மனோஜ் ரூ.1லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த ரிசார்ட்டின் மேலாளர், மனோஜை சந்தித்து பேசி ரூ.75ஆயிரம் தருவதாக கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவ அதிகாரி மனோஜ், அந்த பணத்தை தனது தனிப்பட்ட டிரைவர் ராகுல்ராஜிக்கு 'கூகுள்-பே' மூலமாக அனுப்புமாறு கூறியிருக்கிறார்.
அதன்படி அனுப்புவதாக கூறிய ரிசார்ட் மேலாளர், அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கூறியதன்பேரில், குறிப்பிட்ட நேரத்துக்கு மருத்துவ அதிகாரியின் டிரைவரின் செல்போன் எண்ணுக்கு 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளர் பணத்தை அனுப்பினார்.
அப்போது மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ஷாஜூ ஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் ஷின்டே, குரியன், பிலிப் சாம் உள்ளிட்டோர், அலுவலகத்துக்குள் அதிரடியாகசென்று மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களின் அலுவலகத்ததுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரி மனோஜ், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையால் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதற்கு கேரள நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதையடுத்து மருத்துவ அதிகாரி தனது அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது டிரைவரின் 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த முனியப்பன் (வயது 59) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.
அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11.7.2024 அன்று விண்ணப்பித்துள்ளார். முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்த பொழுது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (வயது 39) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார்.
இதையடுத்து மனையை உட்பிரிவு செய்து கொடுக்க சர்வேயர் முருகேசன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில் முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் முனியப்பனிடம் இருந்து சர்வேயர் முருகேசன் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து இருந்தார். மேலும் அதற்கான கட்டணம் ரூ.42 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரமும், ஊழியர்களுக்கு கொடுக்க ரூ.6 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முகமது பிலால் இன்று காலை மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9 ஆயிரம் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின்பேரில் ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் இன்று காலை முகமது பிலால் கொடுத்தார். அப்போது அதில் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீதி பணம் ரூ.6 ஆயிரத்தை அங்கு பணிபுரியும் வயர் மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.
அதன்படி இருவரும் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
- 2 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாரம், சுண்டக்காம்பாளையத்தை சோ்ந்தவா் ராதா கிருஷ்ணன். இவா் மக்காச்சோள அரவை ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கட்டிட விரிவாக்க பணிக்காக சுண்டக்காம்பாளையம் ஊராட்சித்தலைவா் ஆனந்த் என்ற லோகநாதனை தொடா்பு கொண்டுள்ளாா்.
அவா், கட்டிட அனுமதிக்கு ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். மேலும் முன் பணமாக ரூ.2.30 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை ராதாகிருஷ்ணன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கெளசல்யா தலைமையிலான போலீசார் ஊராட்சித் தலைவா் லோகநாதன் (வயது 43), ஊராட்சி செயலா் அமிா்தலிங்கம் (35) ஆகியோரை பிடித்தனா்.இதையடுத்து 2 பேரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
- கைது செய்யப்பட்ட அன்பழகன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்தவர்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அவர் திசையன்விளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலெட்சுமி(வயது 32).
இவர் தற்போது பாளையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா மாற்றம் செய்யவேண்டி திசையன்விளை நில அளவையர் அன்பழகன்(வயது 40) என்பவரிடம் கேட்டிருந்தார்.
அதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனை கையும், களயுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து சென்று சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவர் மணலிவிளையில் தங்கியிருந்த வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு சுமார் 1 மணிநேரம் பல்வேறு ஆவணங்களை சோதனை செய்தனர். பின்னர் அன்பழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அன்பழகன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்தவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அவர் திசையன்விளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தனியார் நிறுவன நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தினேசையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:
மருந்து கட்டுப்பாட்டாளர் கழக இணை அதிகாரியான ஈஸ்வர ரெட்டியை ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய போது சி.பி.ஐ. கைது செய்தது. தனியார் மற்றும் நிறுவனத்தின் 'இன்சூலின்' 3-ம் பரிசோதனைக்கு மருந்து அனுமதி வழங்க ஈஸ்வர ரெட்டிக்கு தினேஷ் என்பவர் லஞ்சம் கொடுத்த போது கையும், களவுமாக பிடித்தனர். தினேசையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் தனியார் நிறுவன நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தனியார் நிறுவனம் மறுத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்