search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்கொலை"

    • முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மகனுடன் கருத்து வேறுபாடு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி துவரன்கொல்லைப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65 ) விவசாயியான இவருக்கும், மகனுடன் கருத்து வேறுபாடு நடந்துள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பழனிவேல் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசரானை நடத்தி வருகிறார்.

    • தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மகன் வெளிநாட்டுக்கு சென்றதால்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேல கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவரது ஒரே மகன் வல்லரசை பிழைப்புக்காக தாய்லாந்து நாட்டிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
    • இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர் பாச்சாமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி வேலூருக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது செல்போனிற்கு கணவர் பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி விரைவாக வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பழனிச்சாமி குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

    உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் மராட்டியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் இவருக்கு கிட்னியில் கல் இருப்பதால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திருப்பதி வயிற்று வலியால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

    இதனால் வீட்டில் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டிலும், உறவினர்களிடமும், தான் வேலை பார்க்கும் இடத்திலும் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் சங்கரன் மகன் நந்தகுமார். இவர் விராலிமலை அருகே உள்ள ஆவூர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.வீட்டிலும், உறவினர்களிடமும், தான் வேலை பார்க்கும் இடத்திலும் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.இதுபற்றி பெற்றோர் காரணம் கேட்டபோது, எதுவும் கூற மறுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுபானத்துடன் குருணை மருந்து என்று சொல்லக்கூடிய விஷ மருந்தை கலந்து குடித்து மயங்கியுள்ளார்.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.அவரது உடலை கைப்பற்றிய விராலிமலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    வடமதுரை, ஜூலை.6-

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள வெள்ள பொம்மன் பட்டியை சேர்ந்த கருப்பு ச்சாமி மகன் செல்வ குமார் (வயது 38) லாரி டிரை வராக வேலை பார்த்து வந்தார்.

    போ திய வரு மானம் இல்லாத தாலும் , உட ல்நலம் பாதிக்க ப்பட்டதாலும் மனமுடைந்த செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகி ன்றனர்.

    • நிதிநிறுவனம் நெருக்கடியால் அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
    • விழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை வாணக்கார வீதியை சேர்ந்தவர் பாபுஜி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் ரவிக்குமார். இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பாபுஜி விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் கடன் வாங்கினார்.தற்போது தவணை கட்டும் தேதி வந்தது. எனவே, நிதிநிறுவன ஊழியர் மேகநாதன், கட்டிட தொழிலாளி பாபுஜி வீட்டுக்கு சென்றார். ஆனால், அவர் அங்கு இல்லை.

    அப்போது பாபுஜியின் சகோதரர் ரவிக்குமார் அங்கு வந்தார். அவரை பார்த்த நிதிநிறுவன ஊழியர் மேகநாதன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிக்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிய ரவிக்குமாரை தூக்கி கொண்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்துவிழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவன ஊழியர் நெருக்கடி கொடுத்ததால் ரவிக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக நிதிநிறுவன ஊழியர் மேகநாதனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரசகுளம், மேலவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் நேசையன் (வயது 65). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று நேசையனுக்கும் மனைவி மேரிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், வீட்டின் அருகில் உள்ள வாழை தோப்பில் விஷ மருந்து தின்று ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நேசையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நேசையன் மகன் ஜெகன் (33) அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×