search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடங்கும் அபாயம்"

    • ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். மோதலால் இரட்டை இலை முடங்கும் என பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • அதிகாரம் மோதலால் அ.தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் தற்போது அதிகார மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள இந்த அதிகாரம் மோதலால் அ.தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமுமில்லை தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக் குழு கூடுவதற்கு சட்ட ரீதியாக எந்த வாய்ப்புகளும் இல்லை. எனவே அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் பூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமும் முடங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிர்வாகிகள் அதிகம்பேர் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் 14 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. எனவே இந்த மோதலால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்தவன் என்ற முறையில் தெளிவாகக் கூறுகிறேன். அ.தி.மு.க. சட்ட விதி 43-வது பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

    பொதுசெயலாளர் பதவியை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக யாரும் தேர்வு பெற முடியாது. அ.தி.மு.க.வில் தற்போது நிலவி வரும் போக்கு கட்சியை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×