search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்து"

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. அவரது மனைவி சந்திரா (வயது 47). இவர், கடந்த மாதம் 29-ந்தேதி ஆரணி-சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த சந்திராவுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 4-வது மகளுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தை சாலையை கடக்க உதவியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி.

    இவரது மனைவி சின்னகுழந்தை (வயது 63). கணவன் - மனைவி இருவரும் ஆரணி அக்ரா பாளையம் சிறுமூர் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி பூ கடைக்கு சென்ற சின்னகுழந்தை சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காயமடைந்த அவரை ஆரணி அரசு மருத்து வமனை யில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் பழனி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மோதியதில் சாந்தி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தொழி லாளியான இவர் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    தனக்கன்குளம் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கணேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரதீப் (23) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். பிரதீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம், ஆஸ்டின் பட்டி, தனக்கன்குளம், கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமலிங்கம் அடிகள் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுதா (வயது 32), இவர் ஆற்காடு பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன் சுதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திமிரியை அடுத்த வரகூர் கிராமத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு நோக்கி வந்தனர்.

    எலாசி குடிசை கூட்ரோடு அருகே வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    வேட்டவலம்:

    வேட்டவலம் தேரடி வீதியை சேர்ந்த வர் சண்முகம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் அரிஹரன் (வயது 24), பொறியியல் பட்டதாரி.

    இவர் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதாகபெற்றோரிடம் கூறி விட்டு பைக்கில் சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    இரவு 8.30 மணியளவில் வேட்டவலம் ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத் தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த அரிஹரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரிஹரன் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து அரிஹரனின் தந்தை சண்முகம் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சுழி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
    • இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). இவர் தனது நண்பர்கள் முத்துக்குமார், நாகூர்கனி ஆகயோருடன் விடத்தகுளத்தில் இருந்து வீரசோழன் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் கணேசமூர்த்தி என்பவர் மலைச்சாமி என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தினேஷ்குமார், கணேசமூர்த்தி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியே சென்று வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 70) ஓய்வு பெற்ற போஸ்ட் மேன்.

    இவர் நேற்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது பொன்னையில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி வந்த பைக் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த பத்மநாபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த நெடுங்கலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அஞ்சலை (வயது 56). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு புதூர்சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நெடுங்கல் அரசு பள்ளி எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில் அஞ்சலை பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அஞ்சலியை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

    டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் வேலை சம்பந்தமாக வாணியம்பாடிக்கு சென்றார். பின்னர் வேலைகள் முடிந்து வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆலாங்குப்பம் அருகே நெடுஞ்சாலையில் வந்த போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். இதில் நேதாஜி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நேதாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் நேதாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளைவில் திரும்பிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பச்சமுத்து (வயது 62) விவசாயி, சதீஷ் (32) டிரைவர். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில் நேற்று இருவரும் வேடநத்தம் கிராமத்தில் இருந்து கீழ்பென்னாத்தூருக்கு வந்தனர். பின்னர் இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வேடநத்தம் கிராமத்திற்கு திரும்பினர்.

    கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம்- தேப்பனந்தல்குளம் அருகில் உள்ள வளைவில் சென்ற போது திடீரென கரும்பு லோடு ஏற்றிவந்த டிராக்டரும் பைக்கும் மோதியது.

    இதில் பச்சமுத்து, சதீஷ் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    வேலூர் பாலமதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (வயது 36) நேற்று காலையில் கேளூர் சந்தைமேட்டில் ரோட்டைக் கடக்க முயன்றார். அப்போது திருவண்ணா மலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மணிகண்டன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடிபட்டு இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×