search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்து"

    • வேன் மோதியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஜெகதீசன்(22) திருமணம் ஆகாதவர். இவர் தந்தைக்கு துணையாக கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெகதீசன் சென்னசமுத்திரம் கிராமத்தில் இருந்து பைக்கில் ஆற்காடு நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

    சென்னையிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு ஆற்காட்டை நோக்கி வேன் வந்தது.

    ஜெகதீசன் சென்ற பைக் மீது வேன் மோதியது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊத்தூர், கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், வயது 65 விவசாயி.

    இவரது மனைவி சரோஜா, இவர்களது பேத்தி நிஷா, ஆகியோர் பத்தியாவரம் ஊத்தூர் கிராமத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் ராஜேந்திரன், சரோஜா, நிஷா, ஆகியோர் கிழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜேந்திரன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தர்.

    சரோஜா, நிஷா, ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயகுமார், வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சர்வீஸ் ரோட்டில் சென்ற போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த புள்ளானேரி புரத்தான் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்கின்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கார்த்திக் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து பச்சூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி அருகே செல்லும் போது பைக்கில் இருந்து எதிர்பாராத விதமாக தவிறி விழுந்தார். இதில் தடுப்பு சுவர் மீது தலை மோதியதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சர்மிளா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாயல்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த ராமர் மகன் வீரமுத்து (வயது 22). இவரும் இரு வேலி கிராமத்தைச் சேர்ந்த மொயின்கான் என்பவரும் மூக்கையூர் கிராமத்தில் இருந்து சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்ேபாது சாயல்குடியில் இருந்து மூக்கையூர் நோக்கி சென்று கொண்டிருந்த தெற்கு மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் உமையராஜ் (18) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரமுத்து கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த உமையராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டார்.

    காயமடைந்த மொயின்கான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சால்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55). இவர் அழிவிடை தாங்கி அரசினர் மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று பணி முடிந்து மாலை வீட்டுக்கு ஜம்போடை வெம்பாக்கம் சாலை எடப்பாளையம் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ‌ அங்கு சிகிச்சை பலனின்றி நாகப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகப்பன் தம்பி காண்டீபன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மின்வாரிய பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்தது.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தமிழக மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சரவணகுமாரும், மற்றொரு ஊழியர் வடிவேல் என்பவரும் சம்பவத்தன்று மதியம் மின்வாரிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அது சரவணகுமார், வடிவேல் மீது மோதியது. இதில் சரவணகுமாருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. ஆனால் தூக்கி வீசப்பட்ட வடிவேலுக்கு உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சரவணகுமார் அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை படுவேகமாக ஓட்டி வந்ததாக ஆனையூர் முகமது ரியாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள சம்மனேந்தல் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    வீரசோழன் அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி ரகுராமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரகுராமன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த ரகுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய கண்ணனை அந்தப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே நடந்த பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உசிலம்பட்டி அடுத்த குப்பனாம்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (40) நேற்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    வைகை வடகரை, அம்மா பாலம் அருகே சென்றபோது, எதிரில் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மேல பொன்னகரம், வெங்கடேஸ்வரன் (19) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர் வீட்டு நிகழ்சியில் பங்கேற்க சென்றபோது பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் வயது 62 இவர் கடந்த 7-ந் தேதி உறவினர் வீட்டு நிகழ்சியி பங்கேற்பதற்க்காக ஆக்கூர் கூட்டு ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார்.

    அப்போது அவர் வெளியில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியக வந்த பைக் இவர் மீது மோதியது. சாமிநாதன் பலத்த காயம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேத்தனர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×