search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்டு"

    • ரவையில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளியமுறையில் ரவா லட்டு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - ½ கிலோ

    சர்க்கரை - ½ கிலோ

    நெய் - 6 ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 50 கிராம்

    தேங்காய் - 1

    ஏலக்காய் - 12

    பால் - 250 மில்லி லிட்டர்

    செய்முறை:

    முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.

    அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.

    கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

    பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.

    கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

    சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம்.

    சுவையான ரவா லட்டு தயார்.

    • சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை.
    • கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 2 கப்

    வெல்லம் - 2 கப்

    பாதாம் - 10

    ஏலக்காய் - 10

    பிஸ்தா - 10

    முந்திரி - 10

    திராட்சை - 10

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை :

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

    • வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள், எலும்புகளுக்கு நல்லது.
    • விரைவில் உடல் எடையை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)

    நெய் - 2 மேசைக்கரண்டி

    முந்திரி - 1 தேக்கரண்டி

    கருப்பு எள் - தேக்கரண்டி

    திராட்சை - 1 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    சுக்கு தூள் - 1 சிட்டிகை

    செய்முறை :

    * வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)

    * எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.

    • குழந்தைகளுக்கு இந்த லட்டு மிகவும் பிடிக்கும்.
    • விருந்தினர் திடீரென வந்தால் இந்த லட்டு செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    துருவிய தேங்காய் - ஒரு கப்

    சர்க்கரை - ஒரு கப்

    நெய் - 2 தேகரண்டி

    முந்திரி, திராட்சை - தேவைக்கு

    ஏலக்காய் - 3 (பொடித்தது)

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

    சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    7 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.

    எளிய முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.

    • கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
    • கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.

    ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.

    தேவையானப் பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 200 கிராம்

    வெல்லம் - 100 கிராம்

    வேர்க்கடலை - 100 கிராம்

    எள் - 4 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    உப்பு - ¼ தேக்கரண்டி

    செய்முறை:

    பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.

    பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

    வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.

    கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.

    இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.

    ×