search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசக்தி"

    • “சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
    • பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

    "சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.

    பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

    திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சிவராத்திரியன்று விரதமிருந் தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

    கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

    சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார்.

    மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.

    வழிபாடு பலன்கள்

    அபிஷேகம் - பாவம் அகலும்,

    பீட பூஜை - சாம்ராஜ்யம் கிடைக்கும்,

    கந்தம்-சகல சவுபாக்கியத்தையும் அளிக்கும்,

    புஷ்பம்-அமைதியும், செழுமையும் தரும்,

    தூபம்-நல்ல வாசனை தரும்,

    தீபம் - உடல் நலம் தரும்,

    நைவேத்தியம்-மகாபோகத்தைத் தரும்,

    தாம்பூலம்- லட்சுமி கடாட்சத்தைத் தரும்,

    நமஸ்காரம்-வாக்கு சாதூர்யம் தரும்,

    ஜபம் - அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

    ஹோமம்-செல்வம் தரும்,

    அன்னதானம்-திருப்தியான வாழ்வு அமையும்.

    • மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
    • முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.

    முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

    மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    • தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
    • சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

    தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.

    சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

    அத்தலங்கள் விவரம் வருமாறு:

    1. திருமலை

    2. திருக்குறிச்சி

    3. திற்பரப்பு

    4. திருநந்திக்கரை

    5. பொன்மலை

    6. பன்னிப்பாக்கம்

    7. கல்குளம்

    8. மேலங்கோடு

    9. திருவிடைக்கோடு

    10. திருவிதாங்கோடு

    11. திருப்பன்றிக்கோடு

    12. திருநட்டாலம்

    • எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
    • வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    மகாசிவராத்திரி வழி பாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோவிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

    • காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
    • முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

    சிவதரிசன பலன்

    காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்

    முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

    மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்

    இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்

    பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்

    மகிமை பெற்ற பன்னிரு சிவாலயங்கள்:

    1. திருவண்ணாமலை

    2. தீக்குறிச்சி

    3. திருப்பரப்பு

    4. திருவந்திக்கரை

    5. பொன்மலை

    6. திருபன்றிக்காடு

    7. பனிப்பாக்கம்

    8. கல்குளம்

    9. மேலோங்கோடு

    10. திருவிடைக்காடு

    11. திருவிதாங்கூர்

    12. திருநட்டாலம்.

    • கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,
    • பாசுபத விரதம்-தைப்பூசம்,

    அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    அவை:

    சோமாவார விரதம்-திங்கள்,

    உமாமகேஸ்வரர் விரதம்-கார்த்திகை பவுர்ணமி,

    திருவாதிரை விரதம்-மார்கழி,

    சிவராத்திரி விரதம்-மாசி,

    கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,

    பாசுபத விரதம்-தைப்பூசம்,

    அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

    கேதார விரதம்ஸ்ர-தீபாவளி அமாவாசை.

    • உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு
    • திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

    சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.

    1. புற்றுமண் லிங்கம்: முத்தி

    2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்

    3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்

    4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்

    5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்

    6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை

    7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு

    8. தயிர் லிங்கம்: நல்லகுணம்

    9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை

    10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்

    11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி

    12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்

    13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு

    14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி

    15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு

    16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
    • சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.

    சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள்.

    அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள். அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.

    உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.

    சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.

    அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும். அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

    மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

    • இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
    • விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள்.

    இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.

    இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது.

    அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.

    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.

    இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.

    எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன.
    • அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார்.

    1. ராமகிரி ஆலயம் ராமர் காலத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.

    2. ஆலயத்தின் முன்பகுதியில் மிகப்பெரிய அரசமரம் உள்ளது. பக்தர்களுக்கு நிழல் தரும் வகையிலும், கார்களை நிறுத்துவதற்கும் அந்த பகுதியில் மிகப்பெரிய இடம் அமைந்துள்ளது.

    3. இறைவனின் அருவ வழிபாட்டுமுறை சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை ஸ்ரீகால பைரவ ஸ்வரூபம் எனப்படும்.

    4. அஷ்டமி நாட்களில் ராமகிரி ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக உள்ளது. என்றாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

    5. காசியில் இருந்து லிங்கம் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு சென்ற ஆஞ்சநேயர் இந்த இடத்தில்தான் லிங்கத்தை நழுவ விட்டார். எனவே இந்த தலம் காசி, ராமேஸ்வரம் ஆகிய இரு தலங்களுக்கும் சமமான தலமாக கருதப்படுகிறது.

    6. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஆலயத்தின் சில பகுதிகள் சீரமைக்கப்படாமலேயே இருக்கின்றன. இதனால் சப்த மாதர் சன்னதி உள்பட சில இடங்களில் வவ்வால்கள் நிறைந்து உள்ளன.

    7. கால பைரவரின் வாகனம் நாய். அதனால்தான் என்னவோ இந்த ஆலயத்தின் வெளிப்பகுதியில் நிறைய நாய்கள் உலா வருவதை காண முடிகிறது. நந்தி தீர்த்தம் அருகிலும், கார் பார்க்கிங் பகுதியிலும் ஏராளமான நாய்கள் அங்கு சுற்றியபடியே இருக்கின்றன.

    8. ஆஞ்சநேயர் இந்த தலத்தில் தவற விட்ட லிங்கத்தை எப்படியாவது மீட்டு செல்ல வேண்டும் என்று தனது வாலால் லிங்கத்தை இழுத்தார் என்பது தல வரலாறு ஆகும். மரகதாம்பிகை சன்னதி அருகே இதை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான சிற்பம் ஒன்று ஒரு தூணில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    9. ராமகிரி கால பைரவரை 8 வாரம் தொடர்ச்சியாக வந்துதரிசனம் செய்தால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். முதல் வாரம் எந்த கிழமை வழிபாட்டை தொடங்குகிறார்களோ, அதே கிழமைகளில் 8 வாரமும் வழிபட வேண்டும் என்று விதி வகுத்துள்ளனர்.

    10. இந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகும். திருமணம், குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை, பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இந்த தலத்தில் பரிகாரம் செய்கிறார்கள்.

    11. இந்த தலத்தில் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனால் 15 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

    12. கோவிலுக்குள் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லுங்கி அணிந்து வருபவர்களுக்கும் ஆலயத்துக்குள் அனுமதி இல்லை.

    13. இந்த ஆலயத்தின் அனைத்து சன்னதிகளிலும் ஆச்சார விதிமுறை படியே பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

    14. கால பைரவர், வாலீஸ்வரர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்யும் போது தமிழிலும் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.

    15. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிப்பதற்கு ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை தனி அறையில் இருந்து கண்காணிக்கிறார்கள்.

    16. ஆலயத்தின் சுற்றுச்சுவர்களில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அனைத்து கல்வெட்டுக்களும் ஆதி தமிழில் உள்ளன. பழமையான தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் அந்த கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    17.தீபம், கற்பூரம் போன்றவை ஏற்றுவதற்கு இந்த தலத்தில்தடை விதிக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு மட்டுமே ஏற்ற அனுமதிக்கிறார்கள். அதுவும் ஆலயத்துக்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    18. ராமகிரி மலையில் இருக்கும் பாலமுருகர் ஆலயம் 1967ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இங்கு ஆடி மாதம் கிருத்திகை விழா மிக கோலாகலமாக நடக்கிறது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் அந்த சமயத்தில் திரள்வார்கள்.

    19. இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன. அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார். கஜ முக விநாயகர், வீர பத்திரர் ஆகியோர் அபூர்வமான வடிவமைப்பாக கருதப்படுகிறது.

    20.நமது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.

    • ஓம் வடுகூர் நாதனே போற்றி
    • ஓம் வடகிழக்கருள்வோனேபோற்றி

    ஓம்பைரவனேபோற்றி

    ஓம்பயநாசகனேபோற்றி

    ஓம்அஷ்டரூபனேபோற்றி

    ஓம்அஷ்டமித் தோன்றலேபோற்றி

    ஓம்அயன்குருவேபோற்றி

    ஓம்அறக்காவலனேபோற்றி

    ஓம்அகந்தையழிப்பவனேபோற்றி

    ஓம்அடங்காரின் அழிவேபோற்றி

    ஓம்அற்புதனேபோற்றி

    ஓம்அசிதாங்கபைரவனேபோற்றி

    -10

    ஓம்ஆனந்த பைரவனேபோற்றி

    ஓம்ஆலயக் காவலனேபோற்றி

    ஓம்இன்னல் பொடிப்பவனேபோற்றி

    ஓம்இடுகாட்டுமிருப்பவனேபோற்றி

    ஓம்உக்ரபைரவனேபோற்றி

    ஓம்உடுக்கையேந்தியவனேபோற்றி

    ஓம்உதிரங்குடித்தவனேபோற்றி

    ஓம்உன்மத்த பைரவனேபோற்றி

    ஓம்உறங்கையில் காப்பவனேபோற்றி

    ஓம்ஊழத்தருள்வோனேபோற்றி

    -20

    ஓம்எல்லைத்தேவனேபோற்றி

    ஓம்எளிதில் இரங்குபவனேபோற்றி

    ஓம்கபாலதாரியேபோற்றி

    ஓம்கங்காளமூர்த்தியேபோற்றி

    ஓம்கர்வபங்கனேபோற்றி

    ஓம்கல்பாந்தபைரவனேபோற்றி

    ஓம்கதாயுதனேபோற்றி

    ஓம்கனல் வீசுங்கண்ணனேபோற்றி

    ஓம்கருமேகநிறனேபோற்றி

    ஓம்கட்வாங்கதாரியேபோற்றி

    -30

    ஓம்களவைக்குலைப்போனேபோற்றி

    ஓம்கருணாமூர்த்தியேபோற்றி

    ஓம்காலபைரவனேபோற்றி

    ஓம்காபாலிகர்தேவனேபோற்றி

    ஓம்கார்த்திகையில் பிறந்தவனேபோற்றி

    ஓம்காளாஷ்டமிநாதனேபோற்றி

    ஓம்காசிநாதனேபோற்றி

    ஓம்காவல்தெய்வமேபோற்றி

    ஓம்கிரோத பைரவனேபோற்றி

    ஓம்கொன்றைப்பிரியனேபோற்றி

    -40

    ஓம்சண்டபைரவனேபோற்றி

    ஓம்சட்டை நாதனேபோற்றி

    ஓம்சம்ஹார பைரவனேபோற்றி

    ஓம்சம்ஹாரகால பைரவனேபோற்றி

    ஓம்சிவத்தோன்றலேபோற்றி

    ஓம்சிவாலயத்திருப்போனேபோற்றி

    ஓம்சிஷகனேபோற்றி

    ஓம்சீக்காழித்தேவனேபோற்றி

    ஓம்சுடர்ச்சடையனேபோற்றி

    ஓம்சுதந்திர பைரவனேபோற்றி

    -50

    ஓம்சிவ அம்சனேபோற்றி

    ஓம்சுவேச்சா பைரவனேபோற்றி

    ஓம்சூலதாரியேபோற்றி

    ஓம்சூழ்வினையறுப்பவனேபோற்றி

    ஓம்செம்மேனியனேபோற்றி

    ஓம்ேக்ஷத்ரபாலனேபோற்றி

    ஓம்தனிச்சன்னதியுளானேபோற்றி

    ஓம்தலங்களின் காவலனேபோற்றி

    ஓம்தீதழிப்பவனேபோற்றி

    ஓம்துஸ்வப்னநாசகனேபோற்றி

    -60

    ஓம்தெற்கு நோக்கனேபோற்றி

    ஓம்தைரியமளிப்பவனேபோற்றி

    ஓம்நவரஸரூபனேபோற்றி

    ஓம்நரசிம்மசாந்தனேபோற்றி

    ஓம்நள்ளிரவு நாயகனேபோற்றி

    ஓம்நரகம் நீக்குபவனேபோற்றி

    ஓம்நாய் வாகனனேபோற்றி

    ஓம்நாடியருள்வோனேபோற்றி

    ஓம்நிமலனேபோற்றி

    ஓம்நிர்வாணனேபோற்றி

    -70

    ஓம்நிறைவளிப்பவனேபோற்றி

    ஓம்நின்றருள்வோனேபோற்றி

    ஓம்பயங்கர ஆயுதனேபோற்றி

    ஓம்பகையழிப்பவனே போற்றி

    ஓம்பரசு ஏந்தியவனேபோற்றி

    ஓம்பலிபீடத்துறைவோனேபோற்றி

    ஓம்பாபக்ஷ்யனேபோற்றி

    ஓம்பால பைரவனேபோற்றி

    ஓம்பாம்பணியனேபோற்றி

    ஓம்பிரளயகாலனேபோற்றி

    -80

    ஓம்பிரம்மசிரச்சேதனேபோற்றி

    ஓம்பூஷண பைரவனேபோற்றி

    ஓம்பூதப்ரேத நாதனேபோற்றி

    ஓம்பெரியவனேபோற்றி

    ஓம்பைராகியர் நாதனேபோற்றி

    ஓம்மல நாசகனேபோற்றி

    ஓம்மகா பைரவனேபோற்றி

    ஓம்மணி ஞாணனேபோற்றி

    ஓம்குண்டலனேபோற்றி

    ஓம்மகோதரனேபோற்றி

    -90

    ஓம்மார்த்தாண்ட பைரவனேபோற்றி

    ஓம்முக்கண்ணனேபோற்றி

    ஓம்முக்தியருள்வோனேபோற்றி

    ஓம்முனீஸ்வரனேபோற்றி

    ஓம்மூலமூர்த்தியேபோற்றி

    ஓம்யமவாதனை நீக்குபவனேபோற்றி

    ஓம்யாவர்க்கும் எளியவனேபோற்றி

    ஓம்ருத்ரனேபோற்றி

    ஓம்ருத்ராக்ஷதாரியேபோற்றி

    ஓம்வடுக பைரவனேபோற்றி

    -100

    ஓம்வடுகூர் நாதனே போற்றி

    ஓம்வடகிழக்கருள்வோனேபோற்றி

    ஓம்வடைமாலைப்பிரியனேபோற்றி

    ஓம்வாரணாசி வேந்தேபோற்றி

    ஓம்வாமனர்க்கருளியவனேபோற்றி

    ஓம்வீபீஷண பைரவனேபோற்றி

    ஓம்வீழாமல் காப்பவனேபோற்றி

    ஓம்வேத முடிவேபோற்றி

    -108

    ×