search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டை சேதப்படுத்திய யானை"

    • கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம்
    • பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி :

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கூடலூர் பாடந்துரை உளிமாஞ்சோலை பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்குள்ள ரவிச்சந்திரன் என்பவர் வீட்டை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது. சேதம் அடைந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு எக்ஸ்ரே பிரிவு செயல்படாததால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் பிரதான சாலையில் குஞ்சப்பனை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு காபித்தோட்டம், தேயிலை தோட்டம் அதிகம் உள்ளது. தற்போது பலாப்பழ சீசன் நடந்து வருவதால் அந்த பகுதிக்கு காட்டு யானைகள் உணவு தேடி வருகின்றன. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • தினமும் பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்துள்ளது. வாழவயல் கிராமம். இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்ைக எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று வாழவயல் கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. வெகுநேரம் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்த யானை அங்கு வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டின் அருகே சென்றது.

    பின்னர் அந்த வீட்டில் இருந்த குளியல் அறையை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு முத்தையா மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது யானை நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினரும் விரைந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- தினமும் பகல் நேரங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.

    எனவே ஊருக்குள் யானை வருவதை தடுக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×