search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூசைபுரம் காலனி"

    • சூசைபுரம் காலனி செல்லும் சாலை 15 வது நிதிகுழு திட்டத்தில் ரூ.25 லட்சம்
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள சூசைபுரம் காலனி செல்லும் சாலை, சிலுவைப்புரம் - நெல்லியப்பட்டு செல்லும் சாலை, நெல்லியப்பட்டு - உள் மண் சாலை இறையன் தோட்டம் ஆகிய சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மிகப்பெரிய குண்டும் குழிகளாக காணப்பட்டது. இந்த சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், தமிழக முதல்-அமைச்சர், நகராட்சி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார். அடிப்படையில் சூசைபுரம் காலனி செல்லும் சாலை 15 வது நிதிகுழு திட்டத்தில் ரூ.25 லட்சம், சிலுவைப்புரம் - நெல்லியப்பட்டு செல்லும் சாலை 15 வது நிதிகுழு திட்டத்தில் ரூ.20 லட்சம், நெல்லியப்பட்டு - உள் மண் சாலை இந்த சாலையை சீரமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.33 -லட்சம், இறையன் தோட்டம் சாலை இந்த சாலையை சீரமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.18.30 -லட்சம் என நான்கு சாலைகளுக்கு ரூ. 96.30 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து சாலைகளை சீரமைக்கும் பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெஜீஷ், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறிஸ்டோபர், கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் ராணி, துணை சேர்மன் பேப்பர், நகராட்சி உறுப்பினர்கள் கவிதா, ஸ்டீபன், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×