search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1500 சிலைகள் வைக்கப்பட உள்ளன.
    • நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழாவை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் ஒரு வார காலத்துக்கு சிலைகள் பூஜை செய்யப்படுகிறது.

    இதற்காக தமிழகம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

    சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1500 சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஆவடி மற்றும் தாம்பரம் பகுதியில் 1000 சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2500 சிலைகள் பூஜைக்காக நிறுவப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அது தொடர்பான பணிகளை போலீசார் தொடங்கி இருக்கிறார்கள்.

    போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    புளியந்தோப்பு பகுதியில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவி கமிஷனர்கள் தமிழ்வாணன், அழகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிலை தயாரிப்பாளர்கள் 17 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் 10 அடிக்கு மேல் சிலைகளை தயாரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்காக எந்தெந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர் என்கிற தகவலை வாங்கி வைத்திருக்க வேண்டும். சிலைகளை தயாரிக்கும் இடத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் அப்பகுதியில் சிலைகளை வைக்கும் அமைப்பினரை அழைத்து ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இதேபோன்று அனைத்து பகுதிகளிலும் விழா குழுவினரோடு ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இன்னும் 2 வாரங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் 10-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளையும் போலீசார் விதிக்க உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    தீயணைப்புத் துறை, மின்வாரியம் ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

    இவைகளை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதி அளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கிய கட்டுப்பாடான, விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் தயாரிக்கப்பட வேண்டும். வண்ணப்பூச்சு செய்ய வேண்டுமெனில் தண்ணீரில் கரையக் கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை வண்ண சாயங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனத்தால் ஆன வண்ணப்பூச்சுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    ஒலிபெருக்கி உரிம மானது. பூஜையின் போது, காலையில் 2 மணி நேரங்கள் மற்றும் மாலையில் 2 மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது.

    பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும். வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும். வகையிலோ கோஷமிடக் கூடாது.

    சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவாக பேனர் வைக்கக்கூடாது.

    தீ பாதுகாப்பு விதிமுறைகள், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

    விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள். ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மாநகரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • 18-ந் தேதி நாடு முழுவதும் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது
    • சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வதற்காக வந்தவாசி சன்னதி தெருவில் மாசு இல்லாத பேப்பர் கூழ் கொண்டு விதவிதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அவ்வகையில் எலி வாகன பிள்ளையார், மயில்வாகன பிள்ளையார், சிம்ம வாகன பிள்ளையார், குழந்தை பிள்ளையார், மும்மூர்த்தி பிள்ளையார், விநாயகர் சிலைகள் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலவிதமான வண்ணங்களை கொண்டு தயாராகும் விநாயகர் சிலைகளை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, தென்னாங்கூர், தெள்ளார், பொண்ணூர், கீழ் கொவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வாங்கி செல்வார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 500 மரக்கூழ் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக சுற்றுச்சூழல் நண்பனான காகித மரக் கூழால் 500 விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. இதில் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பின்னர் செப்டம்பர் 19ந்தேதி ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், பரமக்குடி, உச்சிப்புளி ஆகிய இடங்களிலும், வருகிற 20ந்தேதி ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி ஆகிய இடங்களிலும் விநாய கர் சிலை ஊர்வலங்கள் நடக்க உள்ளது.

    இந்தாண்டு விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் நண்பன் என்ற முறையில் மரக்காகித கூழ் கொண்டு 4 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாட்டர் கலர் மூலம் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம்' என்ற கருப் பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்துக்களின் ஒற்றுமை மற்றும் எழுச்சி விழாவாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருக்கும்.

    இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் விதமாக செய்யப்பட்டுள் ளது. இது மீன்களுக்கு உணவாகவும் பயன்படும். விநாயகர் சிலைகளில் சிம்ம வாகனம், மான் வாகனம், காளை வாகனம், மயில், அன்ன வாகனம் போன்ற வற்றில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது.

    செங்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    இதில் புதிதாக விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா மாநிலம், புதுவை, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு காகித கூழ் வாட்டர் கலர் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொண்டு செங்கோட்டை பகுதிகளுக்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தயாரித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சிலைகள் வடிவமைத்து உள்ளனர். இதனை வாங்குவதற்கு கேரளாவின் கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், கோட்டயம், தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-

    இந்தாண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரைய கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரிசி, கிழங்குமாவு, களிமண் போன்றவற்றால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது எங்களிடம் மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயன விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர் திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் அதாவது 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். அவைகள் செங்கோட்டை பகுதிக்கு மட்டுமல்லாது, கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊர் நல்லா இருக்க திருடினோம் என்று வாக்குமூலம்
    • கிராம மக்கள் துரத்திச் சென்று பிடித்தனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

    அப்பகுதி மக்கள் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

    அப்போது திடீரென மர்ம கும்பல் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை காரில் கடத்தி சென்றனர்.

    இதனை கண்ட சிலர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் விநாயகர் சிலையை தூக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    காரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது.

    மேலும் விநாயகர் சிலையை திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைத்தால் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று விநாயகர் சிலையை தூக்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.
    • எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர்.

    முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் பிள்ளையார், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில், நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொதுஇடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம்.

    நாங்கள் வடிவமைக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.

    அப்படி தயாராகும் சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, அதில் வாட்டர் கலர் மூலம் பெயிண்ட் அடித்து சிலைகள் செய்கிறோம். அவற்றில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே பிள்ளையார் சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி சிறிய அளவிலான சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே பணிகளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன என தெரிவித்தனர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

    சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

    3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

    குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

    • கட்சியில் ஆதரவை பெருக்க பாத யாத்திரை என்று அதிரடி திட்டங்களுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்.
    • தொய்வை சீராக்க விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து அடுத்த அதிரடியை பா.ஜனதா செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதாவின் அடித்தளம் இந்துத்துவா. அந்த உணர்வு குறைந்துவிடாதபடிதான் இயக்கத்தின் பயணம் இருக்க வேண்டும் என்று அமைப்பு ரீதியாக அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது தேர்தல் பிரசாரத்துக்கான பிள்ளையார் சுழியை அண்ணாமலை போட்டுள்ளார். ஆளுங்கட்சி மீதான புகார்களை பகிரங்கப்படுத்துவது. கட்சியில் ஆதரவை பெருக்க பாத யாத்திரை என்று அதிரடி திட்டங்களுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். இருப்பினும் ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காததால் பலர் ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொய்வை சீராக்க விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து அடுத்த அதிரடியை பா.ஜனதா செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    அதாவது அனைத்து பூத்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை, வழிபாடு அதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறார்கள்.

    அண்ணாமலையின் முதற்கட்ட பாத யாத்திரை வருகிற 22-ந் தேதி முடிகிறது. அதன் பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழு முடிவு செய்து அறிவிப்பு வெளியாகலாம் என்று ஏ.என்.எஸ்.பிரசாத் கூறினார்.

    • நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது.
    • அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம்.

    நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவர்களது அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியதால் இன்று எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் இந்துக்கள், நாங்கள் கோவிலுக்கு போறோம் என்று சொல்ல வைத்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளது. சில அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரான போக்கை தொடர்ந்து வருகின்றனர். அதனை அவர்கள் கைவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
    • பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித,விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுமார் 5 அடி முதல் 20 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

    பொன்னேரியை அடுத்த சயனாவரம், வெள்ளோடை, கிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பாகுபலி விநாயகர், கல்வெட்டு விநாயகர், ராஜ விநாயகர், தர்பார் விநாயகர், செண்டு வாகன விநாயகர், மூல வாகன விநாயகர், ஆதியோகி சிவன் விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித,விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    பெருபாலான சிலைகளை வடிவமைக்கும பணிகள் முடிந்து உள்ளன. அதில் அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவை பார்வைக்காக பொன்னேரி தச்சூர் சாலை, சயனாவரம் ,கிருஷ்ணாபுரம் சாலை அருகே வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது,

    விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரித்து வருகிறோம். இதற்காக கிழங்கு மாவு, தேங்காய் நார், பேப்பர்கூழ், ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல மாடல்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படும். இன்னும் சில நாட்களில் சிலைகளில் வர்ணம் பூசும் வேலைகள் முடிந்து விற்பனைக்கு தயாராகி விடும் . சிலைகள் வாங்க பல கிராமங்களில் இருந்து முன்கூட்டியே அட்வான்ஸ் செய்து புக்கிங் செய்து உள்ளனர். ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன என்றார்.

    வெள்ளோடை பகுதியில் விநாயகர் சிலை செய்து வரும் பிரபு என்பவர் கூறும்போது, ராஜ விநாயகர் கற்பக விநாயகர் பாம்பே மாடல்விநாயகர், தர்பார் விநாயகர் மற்றும் பல மாடல்களில் சிலைகள் செய்து வருகிறோம் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என்றார்.

    • துணை ஆணையா் அபினவ்குமாா் மேற்பாா்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • கோவில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகம், தென்னம்பாளையம் காலனி சக்தி விநாயகா் கோவி வளாகம், கே.எம்.ஜி.நகா் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் கடந்த 6-ந்தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது.

    இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (வடக்கு சரகம்) அபினவ்குமாா் மேற்பாா்வையில் உதவி ஆணையா்கள் பி.என்.ராஜன், கண்ணையன் ஆகியோா் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படையினா் சம்பவம் நடைபெற்ற கோவில்களில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனா்.இதில் திருப்பூா் வெள்ளியங்காடு திரு.வி.க.நகரைச் சோ்ந்த மருதாசலம் (வயது 62) சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மருதாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வாழ்க்கை சரியாக அமையாததால் கடவுள் மேல் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தாா்.சிலைகளை சேதப்படுத்திய நபரை 48 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை பொதுமக்கள்- போலீஸ் அதிகாரிகள் பாராட்டினா்.

    • கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • விநாயகர் சிலையை நேற்று இரவு சிலர் கால்வாயில் கரைக்க சென்றனர்.

    சண்டிகர்:

    நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று இரவு விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் 4 இளைஞர்களை மீட்டனர். ஆனால், நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ×