search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.

    இந்த சிலைகளுடன் செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, உச்சிப்புளி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இந்த வருடம் விநாயகர் சிலைகள் அரசின் சுற்றுச்சூழல்துறை விதி–களுக்கு உட்பட்டு எளிதில் கரையக்கூடிய சிலைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் பிரிவினை வாதத்தை முறியடிப்போம்.

    தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற பொருளுடன் விழா நடை–பெறுகிறது. இந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும், இந்துக்களின் எழுச்சி விழாவாகவும் விநாயாகர் சதுர்த்தியை கொண்டாட உள்ளோம். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகத்திடம் ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    • ஆகஸ்டு 14-ந் தேதி முதல், 16-ந் தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
    • ஆலயங்களை இடிக்கும் திட்டங்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பூஜாரிகள் மற்றும் பூ கட்டுவோர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார்.

    செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வெள்ளமுத்து வரவேற்றார். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், கோட்ட அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல், 16ந்தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூரில் 75 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது, சாலை விரிவாக்கம் என்ற பெயரில்இந்து ஆலயங்களை இடிக்கும் திட்டங்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தேனியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • இதில் 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது

    தேனி:

    தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் அடுத்த மாதம் 31ம் தேதி 7ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது. கூட்டத்துக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டி வரவேற்றார். கூட்டத்தில் கம்பத்தை சேர்ந்த ராஜகுருபாண்டி, மாயலோக கண்ணன், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்த ராஜ், மாவட்ட செயலா ளர்கள் ராமமூர்த்தி, வெங்கலபாண்டி, மாவட்ட பொருளாளர் செந்தில்கு மார், இந்து எழுச்சி ஆட்டோ முன்னணி தேனி நகர தலைவர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறு ப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று தேனி நகர் மற்றும் மாவட்ட அளவில் 250 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • காலை கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு-குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் ஒரு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும், காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இதில் பெட்டட்டி, பெட்டட்டி சுங்கம், இளித்தொரை, அண்ணா நகர், காந்திநகர், அணியாரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விநாயகர் சிலையின் ஒரு பகுதி கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது.

    ஒரு சில நொடிகள் இது போன்று விநாயகர் சிலை கண் திறந்து மூடியதாக அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.

    இதையடுத்து அப்பகுதி மக்களும் விநாயகர் சிலை கண் திறந்த காட்சியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    விநாயகர் சிலை கண் திறந்ததாக கூறப்பட்ட தகவலால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

    ×