என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எழுத்து தேர்வு"
- எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன.
685 பணி இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நேற்றுடன் அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தது.
தமிழகம் முழுவதும் அரசு பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஆன்லைன் வழியாக 10,121 பேரும், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் மூலம் 1600 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. இதையடுத்து எழுத்துத் தேர்வு நடத்தி தகுதியான டிரைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வை 10 மையங்களில் நடத்த திட்டமிட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.
அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சேலம்:
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு சேலத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதேபோன்று யூ.பி.எஸ்.சி உதவித்தொகை முதல் நிலை தேர்வு சேலம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன. இந்த தேர்வில் பங்கேற்க 2175 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓ.எம்.ஆர். வினாத்தாள் மூலம் நடைபெறும் இந்த 2 தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி தேர்வு அறைக்குள் வரவேண்டும். தேர்வு எழுதும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன்.
கோவை:
தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது. அங்குள்ள மையத்தில் ஏராளமானோர் இந்த தேர்வினை எழுதினர்.
அப்போது ஒரு தேர்வறையில் இருந்த வாலிபர் ஒரு கருப்பு கலரில் வித்தியாசமான முறையில் முக கவசம் அணிந்திருந்தார். முக கவசம் என்பதால் கண்காணிப்பாளர்களும் விட்டு விட்டனர்.
சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வித்தியாசமான குரல் கேட்டது. இது அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வர்களின் அருகிலும் சென்று சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணிந்திருந்த வாலிபர் அருகில் தான் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது.
உடனே கண்காணிப்பாளர்கள் அந்த வாலிபரை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர், காதில் சிம்கார்டுன் கூடிய வாய்ஸ் மீட்டரை (ஹெட்போன்) வைத்திருந்தார்.
அதன்மூலம் வெளியில் இருந்து இவருக்கு ஒருவர் பதில் சொல்ல, அதனை கேட்டு, இவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாய்ஸ் மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியது, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பச்சூரை சேர்ந்த நவீன் (வயது26) என்பது தெரியவந்தது.
இவர் கோவை கோவைப்புதூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.
அதற்காக வாய்ஸ்மீட்டரை பயன்படுத்தி எழுதலாம் என முடிவு செய்தேன். அதன்படி தேர்வு அன்று, எனது தங்கை தேர்வறைக்கு வெளியில் இருந்து பதில்களை சொல்ல சொல்ல, அதனை வாய்ஸ் மீட்டர் வழியாக கேட்டு நான் தேர்வு எழுதினேன் என தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பயிற்சி காவலர் நவீன் மற்றும் அவருக்கு உதவிய தங்கை சித்ரலேகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி காவலர் நவீனை சஸ்பெண்டு செய்து கோவைப்புதூர் போலீஸ் பயிற்சி மைய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
- எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை
- குமரி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது
நாகர்கோவில் :
2023-ம் ஆண்டுக்கான தாலுகா ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு பட்டாலி யன் ஆகியவற்றில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஆண், பெண் பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று நடந்தது.
குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு 3,884 பேர் விண்ணப் பித்திருந்தனர். நாகர் கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீ யரிங் கல்லூரியில் உள்ள தேர்வு மையம் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால் காலை 7 மணிக்கு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர்.
தேர்வு எழுத வந்த பெண்களை 8.30 மணிக்கு பிறகு போலீசார் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர். பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டதையடுத்து தேர்வு எழுத வந்த பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போனை ஒப்படைத்து விட்டு சென்றனர். சிலர் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போனை வழங்கிவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். வாட்ச் அணிந்து செல்வ தற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வாட்டர் பாட்டில் கொண்டு செல்வதற்கும் போலீசார் அனுமதிக்க வில்லை. ஹால் டிக்கெட்டை கொண்டு செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது. தேர்வு எழுத வந்த பெண்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றியும் போலீசார் பரிசோதனை செய்தனர். பலத்த பரி சோதனைக்கு பிறகு உள்ளே சென்ற பெண்கள் தங்களுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டி ருந்தது என்பது குறித்த விவரம் அறிவிப்பு பல கைகள் வைக்கப்பட்டு இருந்தது.
அதை பார்த்து பெண்கள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் மற்றவர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரி, சுங்கான் கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு இங்கு ஏராளமான வாலிபர்கள், பட்டதாரிகள் வந்திருந்தனர். இவர்களும் பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களில் குமரி மாவட்ட சீருடை பணியாளர் தேர்வு கண்காணிப்பு அதிகாரியும், ஆயுதப்படை டி.ஐ.ஜி.யுமான விஜயலட்சுமி மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்த பிறகு பெரும்பாலான பெண்கள் தேர்வு மையத்திற்கு வெளியே மதியம் நடை பெறும் தேர்வை எழுது வதற்கு காத்திருந்தனர்.
அவர்களுக்கு தேவை யான உணவை அவரது பெற்றோர் வாங்கி வைத்து விட்டு வெளியே காத்தி ருந்தனர். மொழி தகுதி தேர்வு மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை நடக்கிறது. போலீஸ் துறையில் பணிபுரிந்து தேர்வு எழுதுபவர்கள் மற்றும் பணியின்போது இறந்த அவரது வாரிசுகள் தேர்வுகளில் எழுதினால் அவர்களுக்கு அதே மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
வேறு மாவட்டத்தில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது. அதன் அடிப்படை யில் வேறு மாவட்டத்தில் இருந்து ஒரு சிலர் குமரி மாவட்டத்திற்கு தேர்வு எழுத வந்திருந்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு தேர்வு எழுத பலர் சென்றிருந்தனர்.
- 3 ஆயிரத்து 844 பேர் எழுதுகிறார்கள்
- கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் (ஆண் மற்றும் பெண்) பதவிகளுக்கான முதன்மை தேர்வு 26-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மொழித் தகுதி தேர்வு மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 844 பேர் எழுத உள்ளனர். இதற்காக மொத்தம் 4 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. அதாவது நாகர்கோவில் பார்வதிபுரம் பொன் ஜெஸ்லி என்ஜினீய ரிங் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா இன்ஸ்டிடியூட், சுங்கான்கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட் ஆகிய 4 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அன்று காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படு வார்கள். தேர்வுக் கூட அனுமதி சீட்டில் குறிப்பிட் டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய இயலாது. தேர்வு கூட அனுமதி சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையை கொண்டு வருவது உகந்தது.
செல்போன், கால்கு லேட்டர், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரம் தேர்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப் பட மாட்டாது. எழுத்து தேர்வுக்கு வரும்போது கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது.
தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வாணைய இணையதளமான www.tn.gov.in/tusen.com என்ற இணைய தளத்திலிருந்து அழைப்பு கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652-220167 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கி ணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்களுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
- தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்க ளுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல் வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் காகாபாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் நாளை மற்றும் நாளை மறு நாள் ஆகிய 2 நாட்கள் தேர்வு நடக்கிறது. 4 பிரிவு களாக (ஷிப்ட்) இத்தேர்வு நடைபெறும்.
இந்த கல்லூரி வளா கத்தில் கேண்டீன் வசதி, ஜெராக்ஸ் எடுக்கும் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தேர்வர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கும், அவர்களது பெற்றோர், உறவினர்கள் உட்கார்ந்து இருப்பதற்கும் இடம் வசதி விசாலமாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் வருவதற்கும் எளிதாக உள்ளது.
இந்த மையத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் எனப்படும் மின் அனுமதி சான்றுகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் அனுமதி சான்றிதழ்களும், உரிய அடையாள அட்டையும் இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் தெரிவித்துள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.
- தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 10 தாலுக்காவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 10 தாலுக்காவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத ஆயிரக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்தனர். இதில் 12 ஆயிரத்து 510 பேர் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்.
இன்று காலை 9.30 மணிக்குள் வருகை தந்த தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர். பின்னர் காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிந்தது இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
- விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
திருவள்ளுர்:
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதற்காக, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கலவலக் கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காக்களுர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்கோட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாயில் சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, திருத்தணி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பள்ளிப்பட்டு அய்யன் வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை, கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அன்டு டெக்னாலஜி, செங்குன்றம் பொன்னேரி மற்றும் மஹரிஷி வித்யா மந்திர்பள்ளி கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 6 மையங்களில் இந்த தேர்வானது நடந்தது
- தேர்வு மையங்களுக்கு அதிகாலை முதலே தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர்
கோவை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.
கோவை மாவட்டத்திலும் கோவை பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக்கல்லூரி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உள்பட 6 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
தேர்வு மையங்களுக்கு அதிகாலை முதலே தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மையத்திற்கு முன்பாக காத்திருந்தனர். காலை 8.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மையத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்பாக தேர்வர்களை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். தேர்வு எழுதுவதற்கு தேவையான பேனா, ஹால்டிக்கெட் உள்ளிட்டவற்றை மட்டுமே எடுத்து செல்ல அனுமதித்தனர்.
தேர்வு மையத்திற்கு செல்ேபான் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டையும் சரிபார்த்து உள்ளே அனுப்பினர்.சட்டையின் கையை மடித்து விட்டிருந்தவர்கள் கீழே இறக்கி விட்டு ெசல்ல அறிவுறுத்தினர்.
தேர்வர்கள் காலை 9.50 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தேர்வு தொடங்கியதும், தேர்வர்களின் ஹால்டிக்கெட் மற்றும் அதில் உள்ள புகைப்படங்கள் விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்த்தனர். தேர்வானது 12.40 மணிக்கு முடிவடைந்தது. தேர்வின் இடையே அதிகாரிகளும் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் நடந்த இந்த தேர்வில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 309 பேர் எழுதினர்.
- 04.12.2022 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
- குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கும், எழுத்து தேர்வு எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, நீலமங்கலம் ஏகேடிமெமோரியல் வித்யா சாகேத் (சி.பி.எஸ்.சி) பள்ளியிலும், சங்கராபுரம் வட்டத்தில் உள்ளகிராமங்களுக்கு, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சின்னசேலம்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, சின்னசேலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்வராயன் மலை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, ஏகலைவா அரசு ஆண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு உளுந்தூர்பேட்டை பெஸ்கிமேல்நிலைப் பள்ளியிலும், எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
மேற்படி எழுத்து தேர்வுக்கான நுழைவுத் தேர்வு சீட்டு விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இக்குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ளத் தெரியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கான நுழைவுச்சீட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 9 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர்.
- தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
ராமநாதபுரம் மாவட் டத்தில் 2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுதும் மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்ப தாரர்கள் காலை 8.30 மணி முதல் தங்களுக்குரிய தேர்வு மையத்தில் அனு மதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் தேவையற்ற பொருட்கள் தேர்வு மையத்திற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா மற்றும் அட்டை, ஒரு புகைப்படம், ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவை மட்டும் கொண்டு செல்ல அனு மதிக்கப்படும்.
தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றபடுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10 மையங்களில் நடக்கிறது
- விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-04652 220167 ஆகும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2022-க்கான 3,552 இரண் டாம் நிலை காவலர் ஆண் மற் றும் பெண் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
எழுத்து தேர்வு வரும் நவம் பர் 27-ந்தேதி தமிழ் மொழி தகுதி தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு அனைவரும் வர வேண்டும். தேர்வு நேரம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை நடைபெறும். குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வுகள் நடக் கிறது. ஆரல்வாய்மொழி ஜெய மாதா பொறியியல் கல்லூரி யில் 1000 பேரும், தோவாளை லயோலா பொறியியல் கல்லூரியில் 1100, தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 1000, ஆரல்வாய்மொழி டிஎம்ஐ கல் லூரியில் 800, அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் 1000, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் 1000, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ் தவ கல்லூரியில் 1000, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் 1500, இறச்சகுளம் அமிர்தா பொறி யியல் கல்லூரியில் 1711, பார்வதிபு ரம் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூ ரியில் 1756 என்று மொத்தம் 11 ஆயிரத்து 907 பேர் தேர் எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருப வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதா ரர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத தேர்வு மையத்திற்குள் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையினை கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தேர்வு எழுதும் அறைக்குள் கண்டிப் பாக அனுமதிக்கப்பட மாட்டாது.
எழுத்து தேர்வுக்கு வரும்போது கறுப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வரக் கூடாது. அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ் நாடு சீருடை பணியா ளர் தேர்வாணைய இணைய தளம் (www.tn.gov.in/tnusrb.com) லிருந்து அழைப்புக் கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இத்தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்ப தாரர் தங்களது புகைப்ப டத்தினை ஒட்டி அதில் "A" அல்லது "B" பிரிவு அலுவலரிடம் சான்றொப் பம் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-04652 220167 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்