என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண்மை வளர்ச்சி திட்டம்"
- தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விவசாயிக்கு ரூ.10,500 வழங்கப்படுகிறது.
- பொது விவசாயிகளுக்கு 80 சதவீதமும், ஆதிதிராவிட மக்களுக்கு 20 சதவீதமும் பெற்று பயன்பெறலாம்.
தாராபுரம் :
தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) செ. மிதுலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2022-23கீழ் தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், அலங்கியம், நாதம்பாளையம், வீராட்சிமங்கலம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த கிராமங்களுக்கு மட்டும் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் பொது விவசாயிகளுக்கு 80 சதவீதமும், ஆதிதிராவிட மக்களுக்கு 20 சதவீதமும் பெற்று பயன்பெறலாம்.
அதில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையம் அமைக்க 5 ஏக்கருக்கு ரூ.6 ஆயிரமும், உழவர் சந்தை அட்டை கொண்டு காய்கறி பயிர்களை சாகுபடி செய்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் வரை 8 ஏக்கர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விவசாயிக்கு ரூ.10,500 வழங்கப்படுகிறது. அதுபோன்று விவசாயிகள் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்றுகள் மடத்துக்குளம், சங்கராமநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் - 7338726839: அலங்கியம்- 8220709645: வீராட்சிமங்கலம், நாதம்பாளையம் -9976267323 மற்றும் 6381395756 என்ற அந்தந்த கிராம உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
- தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
- பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு என கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தினார்.
தேனி:
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் நலத் திட்டங்களை செயல்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துவதே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த தொகுப்புகளில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், விதை, நாற்றுகள் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக புதர்களை நீக்கி, நீர் பாசன வசதி ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கமான நிகர சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டில் ேதர்வு செய்யப்பட்ட 13 கிராம பஞ்சாயத்துகளில் 20 தொகுப்புகள் கண்டறியப்பட்டு 422 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளில் 10 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராம பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்ட 3-வது தொகுப்பில் 23 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 510 அடி ஆழத்தில் ரூ.1.54 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்றுக்கு தேவையான மின் மோட்டார், புதிய இலவச மின் இணைப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் முரளிதரன் ெதரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்