search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு வழக்கு"

    • பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு எவரும் வர முடியாது. இருக்கவும் முடியாது. தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது.

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க.வினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்த ஓ.பி.எஸ். தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர்.

    பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தி.மு.க அரசு ஏன் கால தாமதம் செய்கிறது என்று தெரியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

    தற்போது சொத்து வரி உள்பட விலைவாசி ஏறியுள்ளது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சொத்து வரியை குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு 954 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஓ.பி.எஸ் அணி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சில தினங்களுக்கு முன்பு கூட கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • காவலாளி கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்தும்போது இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது கொள்ளை சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஒம்பகதூர் மற்றும் கிருஷ்ணதபா தடுக்க முயன்றனர்.

    இதில் ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணதபா படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படையினர் மறுவிசாரணை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., டிஜி.பி ஷகில் அக்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி விட்டனர். சில தினங்களுக்கு முன்பு கூட கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புகார்தாரரான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணதபா தற்போது நேபாளத்தில் வசித்து வருகிறார். அவரை நீலகிரி அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேபாளத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    காவலாளி கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்தும்போது இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள்.

    ஊட்டி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் பல மர்மங்கள் இருந்ததால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    தனிப்படை போலீசார் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எஸ்டேட் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் திரும்ப வருவோம், எனவே ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர் காரில் ஊட்டி செல்கிறார்.

    அங்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அவரே நேரடி விசாரணையில் இறங்க உள்ளார். அப்போது எஸ்டேட்டுக்கும் நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்துவார் என தெரிகிறது.

    சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் கொடநாடு வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.
    • கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்க உள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை துவங்க உள்ள நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.ஷகில் அக்தர் உத்தரவின் பேரில், 2 கூடுதல் டி.எஸ்.பி.க்கள், 3 டி.எஸ்.பி.கள், அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது.
    • சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக் உள்ளிட்டோரிடம் தனிப்படை விசாரணை நடத்தியது

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர்.

    முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

    வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் வழக்கு விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொடநாடு வழக்கு தொடர்பாக தற்போது 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டது. தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக தற்போது 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சம்சீர் அலி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
    • மூடி மறைக்கப்பட்ட விபத்துகள் குறித்தும், விபத்தில் பலியானவர்கள் குறித்தும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் நுழைந்து காவலாளியை கொலை செய்து, பொருட்கள், ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த மனோஜ், சயான் உள்பட பலரை கைது செய்தனர். பின்னர் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த வழக்கை ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் மீண்டும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனோஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே மூடி மறைக்கப்பட்ட விபத்துகள் குறித்தும், விபத்தில் பலியானவர்கள் குறித்தும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் எதுவும் செய்யக்கூடாது" என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது.

    இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • தனிப்படையினர் இதுவரை ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
    • கொடநாடு வழக்கில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு சம்பந்தமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனிப்படையினர் இதுவரை ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி கோவையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார், புதுச்சேரியை சேர்ந்த நவீன் பாலாஜி, மதுரையை சேர்ந்த லாஜி வோரா, ஜெயலலிதா முன்னாள் டிரைவர் குணசேகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இதையடுத்து இன்று மருது அழகுராஜ் கோவை வந்தார். காலை 11.45 மணிக்கு அவர் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஏதாவது தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் தகவல்களை சேகரித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொள்ளை வழக்கை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊட்டியில் தங்குவதால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது என கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • நீலகிரி நீதிமன்ற அனுமதி இல்லாமல் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கூடாது எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    சென்னை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது இந்த வழக்கில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜின் மரணம் தொடர்பாக சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் ஊட்டியில் தங்கியிருந்து திங்கட்கிழமை தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஊட்டியில் தங்குவதால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது என கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தனபால், ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்படி தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரும் வாரந்தோறும் திங்கட்கிழமை கையெழுத்து இடுவதற்கு பதிலாக, மாதந்தோறும் 1 மற்றும் 15-ந் தேதிகளில் சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் நீலகிரி நீதிமன்ற அனுமதி இல்லாமல் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கூடாது எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
    • மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது.

    தொடர்ந்து, நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில்,

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

    கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக டிராவல்ஸிலும் கார் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×