search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு வழக்கு"

    • கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை லாஜிவோரா விசாரணைக்கு ஆஜரானார்.
    • சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

    கோவை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    நேற்று 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    இதையடுத்து இன்று காலை கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் லாஜிவோரா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அதனை பதிவு செய்து கொண்டனர்.

    சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

    மேலும், இவருக்கு மதுரையில் சொந்தமாக ஒரு மால் ஒன்று உள்ளது. இந்த மாலை சசிகலாவுக்கு ரூ.50 கோடிக்கு விற்க இருந்ததாகவும், அது தொடர்பாக அவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே போலீசார் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
    • இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கோவை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் கொடநாட்டில் உள்ளது.

    இந்த எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை அள்ளிச்சென்றனர். இதனை தடுக்க வந்த எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.

    இந்தநிலையில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஏற்கனவே சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கொடநாடு தொடர்புடைய ஆவணங்கள் இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ஆவணங்களை கொண்டு தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பேரிலேயே ஆறுமுகசாமி, மகன் செந்தில்குமார் ஆகியோரி டம் போலீசார் விசாரித்துள்ளனர்.

    நேற்று புதுவையைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரை போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இந்த விசாரணை நடந்தது.

    நவீன் பாலாஜிக்கு சொந்தமான பிரமாண்ட ரிசார்ட் ஒன்றை சசிகலா வாங்கியதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பழைய 500 ரூபாய், ரூ.1000 மதிப்பிழப்பு செய்திருந்த நேரத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன்பே ரிலேயே நவீன் பாலாஜியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இன்று முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரிக்க அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி ஆறுக்குட்டி போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற்றனர்.

    ஆறுக்குட்டியிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விசாரித்து இருந்தனர். தற்போது 3-வது முறையாக அவரிடம் விசாரணை நடந்தது.

    ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் டிரைவராக வேலை பார்த்தவர். கொடநாடு கொள்ளை நடந்த சில நாட்களில் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி. சுதாகர் சென்னையிலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் நவீன் பாலாஜி, தொழில் அதிபர் ஆறுமுகசாமி தவிர மேலும் பலரிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சினைக்கு இடையே கொடநாடு விவகாரமும் சூடுபிடிக்கத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • செந்தில்குமாரிடம் கொடநாடு தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

    தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபரும், மணல் ஒப்பந்ததாரருமான ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

    நேற்றுமுன்தினம் அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாகவும் செந்தில்குமாரிடம் விசாரித்தனர். மேலும் அவரது தந்தையான ஆறுமுகசாமியிடமும் விசாரணை நடைபெற்றது. அவர் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் கொடநாடு தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு ஆவணங்கள் எப்படி வந்தது. இந்த வழக்கில் என்னென்ன தகவல்கள் தெரியும் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை தனிப்படையினரிடம் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில்குமாரிடம் இன்று 2-வது நாளாக ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
    • இன்று காலை ஆறுமுகசாமி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

    தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

    நேற்று அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை தனிப்படையினரிடம் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

    இதற்கிடையே செந்தில்குமாரின் தந்தையும் மணல் ஒப்பந்ததாரரும், தொழில் அதிபருமான ஆறுமுகசாமிக்கும் சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை ஆறுமுகசாமி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    ஒரே நேரத்தில் தந்தை, மகனிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்குடன் கனகராஜ் வழக்கையும் சேர்த்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கனகராஜின் மனைவி கலைவாணி ஆத்தூரில் இருந்து சென்னை கே.கே.நகர் பாலை தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    சேலம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காவலாளி கொன்று கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி சமுத்திரம் சித்திரை பாளையத்தை சேர்ந்த கனகராஜ் ஆத்தூரில் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஆவார்.

    இந்த நிலையில் தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கனகராஜ் மனைவி கலைவாணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்குடன் கனகராஜ் வழக்கையும் சேர்த்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கில் ஆதாரங்களை அளித்து சாட்சியை கலைத்ததாக கனகராஜன் அண்ணன் தனபாலை கோடநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே கனகராஜின் மனைவி கலைவாணி ஆத்தூரில் இருந்து சென்னை கே.கே.நகர் பாலை தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது குழந்தைகளுடன் இடம்பெயர்ந்து அங்கு வசித்து வருகிறார். இதற்கிடையே கலைவாணியை கனகராஜன் மற்றொரு அண்ணனான எடப்பாடி சமுத்திரம் சித்திரைபாளையத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 44) தொடர்பு கொண்டு பேசினார். அதில் கனகராஜ் பெயரில் பணிக்கன் ஊரில் உள்ள இடத்தை விட்டு தருவதாகவும், அதற்காக ஊருக்கு வரும்படியும் அழைத்தார். இதையடுத்து கடந்த 3-ந் தேதி தனது அண்ணனுடன் கலைவாணி தாரமங்கலத்துக்கு வந்தார் .

    அப்போது அங்கு வந்த பழனிவேல், கலைவாணியை பணிக்கனூர் ஊரிலுள்ள கோவிந்தராஜ் என்பவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து நிலத்தை வாங்க வந்தவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது திடீரென நிலத்தை விற்க முடியாத அளவிற்கு செய்துவிடுவேன் என பழனிவேல் பேசியதுடன் நிலத்தை வாங்க வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தார்

    ஏன் இப்படி செய்தீர்கள் என கலைவாணி கேட்டதற்கு உனது புகாரால் தான் எனது அண்ணன் தனபால் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை ரூ.4 லட்சம் செலவு ஆகி உள்ளது. ஆனால் செலவான பணத்தை கொடுத்துவிட்டு வழக்கையும் வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது .

    அங்கிருந்து தப்பிய கலைவாணி ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது கணவரின் அண்ணன் பழனிவேலால் எனக்கும் எனது குழந்தை உயிருக்கும் ஆபத்து உள்ளது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர்பழனிவேல் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை 294(3), 195 ஏ, 354, 506 உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பழனிவேல் கைது செய்த போலீசார் அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    • வாளையார் மனோஜ், ரமேஷ், தனபால் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
    • கொடநாடு வழக்கை நீதிபதி அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடமும், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கில் இதுவரை 257 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தோம்.

    வாளையார் மனோஜ், ரமேஷ், தனபால் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். தளர்வு கொடுத்தால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தோம். இதை ஏற்ற நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ×