என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலக்கடலை"
- இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 650 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.70க்கும், சராசரியாக ரூ.85க்கும் ஏலம்போனது.
காங்கயம்:
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 650 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,500 முதல் ரூ.7,650 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,600 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.25 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.33 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 61 மூட்டை கொப்பரைகளை விற்பனைக் கொண்டு வந்திருந்தனா்.
இவற்றின் எடை 3,008 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா். இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.70க்கும், சராசரியாக ரூ.85க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.33 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.
- 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- ரூ.6, 850 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது.
சேவூா் :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், முதல் ரக நிலக்கடலை ரூ.6, 850 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.93 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.
- ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பூர்:
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு நிலக்கடலை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,400 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
- தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
- பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும்.
உடுமலை:
வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.அதேநேரத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கடலை தேவை அதிகம் இருக்கிறது.இதனைக் கருத்தில் கொண்டு ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பச்சை நிலக்கடலையை வாங்கி வந்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட உலர்களங்களில் காய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-உடுமலை மட்டுமல்லாமல் காங்கேயம் பகுதி எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கடலை பருப்பு தேவை அதிகம் இருக்கிறது.எனவே நிலக்கடலையை வாங்கி வந்து காய வைத்து தோல் நீக்கி பருப்புகளாக்கி விற்பனை செய்து வருகிறோம்.நல்ல வெயில் காலத்தில் ஒரு சில நாட்களில் பச்சைக்கடலை நன்கு காய்ந்து விடும்.ஆனால் தற்போதைய பருவநிலையில் நன்கு காய்வதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மழை பெய்வதால் கடலை நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியதுள்ளது.நிலக்கடலைக்கு தேவை அதிகம் உள்ள நிலையில் நல்ல மண் வளம் உள்ள உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளும் நிலக்கடலை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.அதற்கான சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர்.
- மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது.
- இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
ஆந்திரமாநிலம் கதிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் கதிரி லாப்பாக்சி 1812 என்ற புதிய நிலக்கடலை கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த ரகத்தினை பயிரிட அடி உரமாக தொழு உரமும், 12.5 டன் தழை மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தினை இடவேண்டும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு 12.5 - 50 - 30 தழை மணி சாம்பல் சத்தினை இடவேண்டும். ஹெக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட கலவையை தொழுஉரம் அல்லது மணலில் கலந்து இடலாம்.
பயிர் நட்ட 35-45 நாட்களுக்குள் களை யெடுத்து ஜிப்சம் 400 கிலோ எக்டருக்கு என்ற அளவில் இட்டு மண் அணைக்கவேண்டும். இதனால் மண்ணின் தன்மை இலகுவாகி காய்பிடிப்பு திறன் அதிகமாகிறது.
மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது. இத்தகைய ரகத்தினை பவானிசாகர் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் புளியம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்கமையத்திலும் நடப்பு பருவத்திற்கு போதுமான அளவு விதைகள் இருப்பில் உள்ளது.
இந்த விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசா–யிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.
- செப்டம்பர் மாதம் அறுவடை துவங்கவுள்ள நிலையில் பல இடங்களில் விளைச்சல் துவங்கியுள்ளது.
- பருவமழையை நம்பி தான் தோட்டத்தில் களையெடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
அவிநாசி :
அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், பெருமளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதம் அறுவடை துவங்கவுள்ள நிலையில் பல இடங்களில் விளைச்சல் துவங்கியுள்ளது.பெரும்பாலும் மானாவாரி நிலத்தில் தான் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற நிலையில், பருவமழையை நம்பி தான் தோட்டத்தில் களையெடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
தற்போது பரவலாக சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் பலர் தங்கள் தோட்டங்களில் களையெடுக்க துவங்கியுள்ளனர். பல இடங்களில் நிலக்கடலை செடிகளில் பூ பூக்க துவங்கியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
மழையை நம்பியே நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். சந்தையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் விலை, வழக்கத்தை காட்டிலும் உயர்ந்திருப்பதால் தரமான முறையில் விளைவிக்கப்படும் நிலக்கடலை மூலம் தயாரிக்கப்படும் நிலக்கடலை எண்ணெய்க்கு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம், நிலக்கடலையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கணிக்கப்படுகிறது. எனவே சரியான சமயத்தில் மழை பெய்து விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது.
- கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.
அவிநாசி :
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ்பொ ருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் செயல்படுகிறது.
இத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் ராபி மற்றும் கரீப் பருவத்தில் விளைவிக்கப்பட்டு அரசின் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது. அதன்படி நிலக்கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.5,850 (கிலோவுக்கு, 58.50 ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலை, ஈரோடு மாவட்டத்தில் சத்தி, புளியம்பட்டி, நம்பியூர், கோபி, நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள் ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சீசன் துவங்கியுள்ளது.
கடந்தாண்டு நிலக்கடலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கும் அதிகமாகத்தான் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒப்பிடுகையில், கடந்த, 2018 - 19ல் கிலோவுக்கு ரூ.48.90, 2019-20ல் ரூ.50.90 , 2020-21ல் ரூ.52.75 ,2021-22ல் ரூ. 55.50 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்