என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊழியர் சாவு"
- தவறி விழுந்து சுங்கச்சாவடி ஊழியர் சாவு
- நகராட்சி அலுவலகம் பின்புறம் நீதியரசன் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதியரசன் (வயது 56). இவர், பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையத்தில் தற்காலிக நேர காப்பாளராக பணிபுரிந்து, தற்போது சமயபுரம் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில், நீதியரசன் பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் உள்ள அவர் குடியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது நகராட்சி அலுவலகம் பின்புறம் அவர் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் அந்த வழியே சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து ஊழியர் உயிரிழந்தார்
- கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவரது மகன் ஆனந்த் (வயது 28). இவர் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் ஆனந்த் மது போதையில் முதலியார் சத்திரம் பகுதியில் ஒர்க் ஷாப் எதிராக உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சுந்தரி பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் தொட்டியில் விழுந்த ஊழியர் உயிரிழந்தார்
- அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கரூர்:
கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் 4வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 47). இவர் தாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மது மயக்கத்தில் இருந்த ராமமூர்த்தி, வீ ட்டிலிருந்த தரைத்தள தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயரிழந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தி சடலத் தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- டாஸ்மாக் கடை ஊழியர் விபத்தில் பலியானார்.
- வேலு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 26).இவர் பகண்டை கூட்டு ரோடு இளையனார்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்து வேலு மோட்டார் சைக்கிளில் அத்தியூர் நோக்கி சென்றார். அத்தியூர் பால ஓடைபகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ேமாதியது. இந்த விபத்தில் வேலு படுகாயம் அைடந்தார்.
தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சையது பாஷா, சோலை ஆகியோர் வேலுவை மீடடு சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வேலு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார்.
விபத்து குறித்து பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, பாபு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்