என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கஞ்சி தொட்டி போராட்டம்"
- தாய்சோலாவில் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை உள்ளது
- தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணிக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலாவில் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
தொழிலாளர்களுக்கு வேண்டிய 2020-21-ம் ஆண்டிற்கான போனஸ், விடுப்பு ஊதியம், மருத்துவ பலன்கள், மாதந்தோறும் முறையாக ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பயன்களை வழங்க கோரி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், சுமூக தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணிக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இதற்கு ஏ.ஐ.டி.யு.சி சி.ஐ.டியு, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் நேற்று காலை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாதேவன், பழனி, ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை ெதாடர்ந்து கஞ்சி திறக்கும் போராட்டமும் நடத்தினர். இதற்கிடையே அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ரூரல் டி.எஸ்.பி.(ெபாறுப்பு) செந்தில்குமார், எஸ்டேட் நிர்வாகம் சார்பில் மேலாளர் சூசை, தொழிற்சங்கம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுசெயலாளர் போஜராஜ், ஏ.ஐ.டியு.சி கட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆரி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ரகுநாதன், ஐ.என்.டி.யு.சி செயலாளர் வின்சென், சி.ஐ.டி.யு செயலாளர் அலியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
1 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.இதனால் மேலும் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிக்கு செல்வதை புறக்கணிக்க போவதாகவும், தொடர்ந்து கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்