search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலோரம்"

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மீனவ பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மீனவ பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:-

    மீன்பிடி தடை காலத்தில் ரோந்து படகுகளை தீவிரப்படுத்த வேண்டும். விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு முழுமையான மானிய விலை மண்எண்ணெய் வழங்க வேண்டும். பள்ளம்துறை கீழ கிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் மக்களின் நலன் கருதி நடை பாலம் அமைக்க வேண்டும். மிடாலம் பகுதியில் திடக்கழிவு மையத்தை அகற்ற வேண்டும். குறும்பனையில் உள்ள 3 பஞ்சாயத்தை ஒரே பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும். தேங்காப்பட்டினத்தில் தனியார் துறைமுகம் அமைக்க கூடாது.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர சாலைகளை ஒரே சாலையாக அமைக்க வேண்டும். ஹெலன்நகர் சாலையை சீரமைக்க வேண்டும். கடலோர கிராம பகுதிகளில் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலோர கிராம பகுதிகளில் போதைப்பொருள் விற்ப னையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    மீன்பிடி தடை காலத்தில் கடலோர பகுதிகளில் ரோந்து படகுகள் ஏற்கனவே அதிகப்படுத்தப்பட்டுள்ளன. படகுகளுக்கு மானிய விலையில் மண்எண்ணை வழங்கப்பட்டு வருகிறது.

    கிளை வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர கிராமப் பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டு நடத்துவதற்கு போதுமான இடவசதிகள் இல்லை.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கடலோரக் கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.


    ×