search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநியோகம்"

    • அரசு தோட்டக்கலை பண்ணை, ஆடுதுறையில் கத்தரி வீரிய ஒட்டு ரக குழித்தட்டு நாற்றுகள் 3 லட்சம் எண்கள் இருப்பு உள்ளது.
    • மா நெருக்கு ஒட்டு கன்றுகள் 8 ஆயிரம் எண்களும், மா குருத்து ஒட்டு கன்றுகள் 4 ஆயிரம் எண்களும், மல்லிகை வேர்குச்சிகள் 15000 எண்களும், தேக்கு 25000 எண்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் மற்றும் ஆடுதுறை அரசு தோட்டக்கலை பண்ணைகளில் வீரிய ஒட்டு ரக காய்கறி நாற்றுகள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்தரி வீரிய ரக குழித்தட்டு நாற்றுகளும் மிளகாயில் வீரிய ரக குழித்தட்டு நாற்றுகளும் தலா 50 ஆயிரம் நாற்றுகள் இருப்பு உள்ளது. மேலும் மா நெருக்கு ஒட்டு கன்றுகள் 8 ஆயிரம் எண்களும், மா குருத்து ஒட்டு கன்றுகள் 4 ஆயிரம் எண்களும், மல்லிகை வேர்குச்சிகள் 15000 எண்களும், தேக்கு 25000 எண்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    அரசு தோட்டக்கலை பண்ணை, ஆடுதுறையில் கத்தரி வீரிய ஒட்டு ரக குழித்தட்டு நாற்றுகள் 3 லட்சம் எண்கள் இருப்பு உள்ளது. மேலும் துளசி, கற்றாழை, ரணகல்லி உள்ளிட்ட மருத்துவ செடிகள் 3000 எண்கள் மற்றும் மா நெருக்கு, குருத்து ஒட்டு கன்றுகள் 2000 எண்களும் விற்பனைக்கு உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
    • மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது இதனை அடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி மாநில பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் காரை க்கால் பகுதியைச் சுற்றியுள்ள தமிழக எல்லையோர கிராமங்களில் நோய் பரவல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அந்த வகையில் காரைக்கால் மாவட்ட எல்லை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உள்ள திருக்கடையூரில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

    அவர் கூறுகையில் காரைக்காலில் காலரா பரவி வருவதால் காரைக்காலை சுற்றியுள்ள நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடி க்கை குறித்து அமைச்சர் மற்றும் துணை செயலாளர் அறிவுரைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். எல்லையோரம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நீரேற்று நிலையங்களிலும் ஆய்வு செய்துள்ளேன். மேலும் மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    மேலும் காரைக்காலை சுற்றியுள்ள மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நம்மிடம் போதிய மருந்து கையிருப்பு வார்டு வசதிகள் உள்ளன. காரைக்காலில் பணிபுரிபவர்கள் தமிழக பகுதியில் இருந்தால் அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் சோதனைகள் மேற்கொண்டுள்ளோம்.

    நடமாடும் மருத்துவக் குழு மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எட்டு பிளாக்குகளிலும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர கிராமங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்து தேவை இருப்பின் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    • மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    திருப்பூர்:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 20ந் தேதி வெளியிடப்பட்டது. இதனால், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது. தவிர, அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் துவங்கி உள்ளது.உடுமலையிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், கல்லூரிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக சான்றிதழ் வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நோட்டு விநியோகம் நிறுத்தப்பட்டது.
    • நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    அரசு, அரசு உதவி ெபறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் 14 வகையான இலவச திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன்படி புதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

    சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.

    இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த 13-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திய பிறகும் அவற்றை குறிப்பெடுக்க நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஆணையரகம் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தில் தயாராகும் நோட்டு புத்தகங்களை பள்ளிகளுக்கு வாங்குவதற்கும், உரிய வழிகாட்டுதல் அளிக்காததால், இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்கள் பாட அம்சங்களை குறிப்பெடுத்துக்கொள்ள நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×