என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காலரா பரவல் எதிரொலி - மாவட்ட எல்லைகளில் அதிகாரிகள் ஆய்வு
- பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
- மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.
தரங்கம்பாடி:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது இதனை அடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி மாநில பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் காரை க்கால் பகுதியைச் சுற்றியுள்ள தமிழக எல்லையோர கிராமங்களில் நோய் பரவல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் காரைக்கால் மாவட்ட எல்லை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உள்ள திருக்கடையூரில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில் காரைக்காலில் காலரா பரவி வருவதால் காரைக்காலை சுற்றியுள்ள நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடி க்கை குறித்து அமைச்சர் மற்றும் துணை செயலாளர் அறிவுரைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். எல்லையோரம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நீரேற்று நிலையங்களிலும் ஆய்வு செய்துள்ளேன். மேலும் மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் காரைக்காலை சுற்றியுள்ள மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நம்மிடம் போதிய மருந்து கையிருப்பு வார்டு வசதிகள் உள்ளன. காரைக்காலில் பணிபுரிபவர்கள் தமிழக பகுதியில் இருந்தால் அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் சோதனைகள் மேற்கொண்டுள்ளோம்.
நடமாடும் மருத்துவக் குழு மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எட்டு பிளாக்குகளிலும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர கிராமங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்து தேவை இருப்பின் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்