search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 236547"

    • நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.

    இந்த குடியிருப்பில் 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழே உள்ள தளத்தில் ஸ்ரீ வள்ளிபுத்தூரை சேர்ந்த முருகன் (வயது19), வடுகப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(20), வெங்கடேஷ்(20) ஆகிய 3 வாலிபர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்பில் வாலிபர்கள் வசிக்கும் தரை தளம் அருகே குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல நிறுத்தி விட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த தீ வாலிபர்கள் வசித்த வீட்டின் கதவின் மீது பரவி வீடு முழுவதும் புகை மூட்டமானது. இதனால் அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தீ வேகமாக பரவியதால் வாலிபர்கள் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் மூலம் ஜன்னலை உடைத்து தப்பி வெளியே வந்தனர்

    பின்னர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராமநாதபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் 4 மொபட்டுகள் எரிந்து நாசமானது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
    • அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பழனிக்குமார் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து சேலம் சாலையில் கரூரைச் சேர்ந்த பழனிக்குமார்,(வயது 49.) இவர் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டு பூட்டி இருந்து.

    இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிசை வீடு எரிந்து நாசமானது
    • 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிக் கருப்பூர் வடக்கு காலனியை சேர்ந்த–வர் கிருஷ்ணன் மனைவி பார்வதி (70). கிருஷ்ணன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பார்வதி மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    பார்வதி வெளியே சென்று விட்டு இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போதுதிடீரென அவரது குடிசை வீடு தீப்பி–டித்து எரிந்தது.

    இதைத் தொடர்ந்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டில் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் கருகி–யது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறை–யினர் வழக்குப்பதிந்து விசார–ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2 கடைகள் தீயில் எரிந்து நாசமானது.
    • தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

    புதுக்கோட்டை

    விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாதிரிபட்டி பிரிவு சாலையில் 2 பெட்டிக்கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை 2 கடைகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த கடைகள் கீற்று கொட்டகையாக இருந்ததால் தீ மளவளவென்று பரவியது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இருப்பினும் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டிபட்டி வாரச்சந்தை முன்பு தினசரி காய்கறி கடைகளும் உள்ளன.
    • நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் 10 கடைகள் எரிந்து நாசமாகின.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிட்டி பஜார் வீதியில் காய்கறி வாரசந்தை செயல்பட்டு வருகிறது. வாரசந்தை நுழைவாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 12 மணியளவில் இந்த பகுதியில் வந்த மர்மநபர்கள் காய்கறி கடைகளுக்கு தீவைத்து விட்டு சென்றனர்.

    இதனால் தீ மளமளவென பற்றி எரிந்து மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் 10 காய்கறிகடைகளும் அடியோடு எரிந்து நாசமானது. நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×