search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் ஏலம்"

    • ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

     கிருஷ்ணகிரி,

    மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 25 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணமாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் முன்பணமாக வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஓசூரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498105529 மற்றும் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498175188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
    • அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுத படை மைதானத்தில் இன்று பொது ஏலம் விடப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கென்னடி, காலால் உதவி ஆணையர் மாறன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களில் மொத்தம் 132 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

    அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் வாகனங்களை எடுப்ப தற்காக முன் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஏலம் விடப்பட்ட வாகனங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ற வாறு ஏலத்தில் வாகனத்தை எடுத்து மீதி தொகையும் செலுத்திவிட்டு வாக னங்களை வாங்கி சென்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
    • இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வருகிற 7- ந் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 முன் பணம் கட்ட வேண்டும்.

    வருகிற 5- ந் தேதி காலை 10 மணி முதல் 6- ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள், 10 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 17 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் காங்கயம் சாலை நல்லிகவுண்டன் நகரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள நபா்கள் நுழைவுக்கட்டணமாக ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயரை ஆதாா் அட்டையுடன் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

    ஏலத்தில் பங்கேற்பவா்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரையில் ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகையை ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும். ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அதே நபா் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஆயுதப்படை காவல் ஆய்வாளரை நேரிலோ அல்லது 95668-88041, 87540-30229 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.
    • திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு சோதனையின் போது ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த வாகனங்கள் அனைத்தும் இன்று (9-ந்தேதி) ஏலம் விடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.

    திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது ஒரு கார் ஏலம் விடப்பட்ட போது காரில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் மண்டை ஓடு கிடந்தது. இதனை பார்த்ததும் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். எனவே அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த மரக்காணம் போலீசார் அங்கு விரைந்தனர். மண்டை ஓட்டினை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மண்டை ஓடு காருக்குள் எப்படி வந்தது. இதனை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    • ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும்

    மதுரை

    மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற 17-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இரு சக்கர வாகனத்துக்கு ரூ.2000, ஆட்டோ மற்றும் காருக்கு தலா ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

    அதற்கு முன்பாக இன்று (15-ம் தேதில் மற்றும் 16, 17ந் தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். வருகிற 19-ம் தேதி நடக்கும் ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம் 27-ந் தேதி நடக்கிறது/
    • அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் மதுகடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி பொது ஏலம் விடப்படுகிறது.

    இந்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏலம் விட நிறுத்திவைக்கப்பட்டுள்ள 105 வாகனங்களை 23, 24 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இரு சக்கரவாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5 ஆயிரம், 4 சக்கர வாகனத்துக்கு ரூ: 10ஆயிரம் செலுத்த வேண்டும். வாகனத்கை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகையை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன்பணம் திருப்பித் தரபடமாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியும் ஏலத்தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவிற்கு சொந்தமான கழிவு நீக்கம்.
    • 4 வாகனங்களை உள்ளது உள்ளபடி ஏல விற்பனை மேற்கொள்ளப் பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான மகேந்திரா பொலிரோ வாகனம் மற்றும் 3 அம்பாசிடர் வாகனங்கள் ஆகிய 4 வாகனங்கள் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது.

    இவ்வாகனங்கள் பழுது ஏற்பட்டு இருப்பு நீக்கம் செய்ய வேண்டி தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறை இயக்ககத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவு செய்யப்பட ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவிற்கு சொந்தமான கழிவு நீக்கம் செய்யப்பட்ட மகேந்திரா பொலிரோ வாகனம் மற்றும் 3 அம்பாசிடர் வாகனங்கள் ஆகிய 4 வாகனங்களை உள்ளது உள்ளபடி ஏல விற்பனை மேற்கொள்ளப் பட உள்ளது. இதன் முழு விவரங்களை www.tamil nadupubliclibraries.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×