என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐ.ஜி நேரில் ஆய்வு"
- கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஐ.ஜி ராதிகா நேரில் ஆய்வு செய்தார்.
- கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர்
கடலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (25- ந்தேதி) தொடங்கியது. இந்த தேர்வு நாளையும் (26 -ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர் . முன்னதாக காலையில் தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுதும் மையத்திற்கு போலீசார் அனுமதித்தனர். இன்று காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி தொடங்கியதை யொட்டி போலீஸ் ஐ.ஜி ராதிகா தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தேர்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு எழுதும் 20 பேருக்கு ஒரு போலீசாரும், 5 போலீசாருக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் தேர்வு எழுதும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இத் தேர்வுக்காக 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இன்று மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் .