search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்கள்"

    • இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
    • அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.

    இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த வாரம் அவர் அதே பள்ளி மாணவர்களுடன், பெற்றோரையும் கோவை முதல் சென்னை வரை 110 பேரை விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.

    சென்னையில் மெட்ரோ ரெயில், எலக்ட்ரிக் ரெயில் உள்ளிட்டவற்றிலும் அவர்களை அழைத்து மகிழ்ச்சிப்படுத்தினார். விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை பார்த்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களுக்கு எவ்வளவோ கனவுகள் உண்டு. இதில் எங்கள் பள்ளிகளுக்கு வரும் சில தன்னார்வலர்கள் எங்களுக்கு புத்தாடை நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வந்தனர். ஆனால் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் எங்களுக்கு அனுபவ ரீதியாக எது தேவையோ அதை செய்து வருகிறார். இதில் நாங்கள் விமானத்தில் சென்று வந்தது புது அனுபவமாக இருந்ததாக கூறினர்.

    இதுகுறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்று அரசியல் தலைவர்களாகவும், பெரிய பதவிகளிலும் உள்ளனர். இன்றைய சூழலில் பெற்றோர்களிடையே தனியார் கல்வி பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமையாக உள்ளனர். ஆனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சிறிதளவு ஊக்குவித்தால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமைகள் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

    அடுத்த கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை மீண்டும் வெள்ளியங்காடு, காரமடை அரசு பள்ளிகளில் சிறந்து முறையில் படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். 

    • ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.
    • அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அறிவியல் சார்ந்த பொறியியல், மின்னியல் மற்றும் ரோபோட்டிக் துறையில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டவும், பற்பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அனைத்து உபகரணங்களையும் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல் இரண்டு வகுப்புகளிலேயே மாணவர்கள் சுயமான தானியங்கி சென்சார் மூலம் திறந்து மூடும் கதவுகளை கொண்ட வீடு, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரம்பியதை அறிவிக்கும் அலாரம், மனிதர்கள் வீட்டுக்குள் நுழைவதை கண்டறியும் தானியங்கி சென்சார் போன்றவற்றை வடிவமைத்துள்ளனர்.

    ஒவ்வொரு மாதமும் பிரத்யேகமாக உரிய நிபுணர்கள் மூலம் அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆய்வுக்கூடத்தை முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி பார்வையிட்டார். புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டினார்.பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, இயற்பியல்துறை முதுகலை ஆசிரியர் கண்ணன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ஜெயமோகனகிருஷ்ணன், பி.டி.ஏ., துரைசாமி, நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்குமார், கிரீஷ், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஸ்டாலின் மணிக்குமார், ஜெகன் அலெக்ஸ், ராமசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
    • மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் சின்னசாமியம்மாள் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி உள்ளது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் 2பேர் ஒருமையில் பேசுவதாகவும், கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி தலைமையாசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தலைமையாசிரியர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல்அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.   

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.
    • இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    நகரப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு வருவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது.

    இதற்கு பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமின்றி சிலருடைய குடும்ப சூழலும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதனை செயல்படுத்த அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளிலும் தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும்.

    இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கியாஸ் சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு போன்றவை வழங்கப்படும்.

    சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக்குழுவுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.

    காலை 5.30 மணிக்கு சமையல் பணியை தொடங்கி காலை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும். சமைத்த உணவை காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. பாராட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10 மற்றும் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சமீர் என்ற மாணவர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

    இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாய் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 516 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×