என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவை நகை கொள்ளை"
- இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
- இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கணபதி, தெய்வநாயகி நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோருடன் வசித்து வரு கிறார்.
ஆரோக்கியசாமி கணபதி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரோக்கியசாமி சனிக்கிழமை வியாபாரம் முடித்து அன்று வசூலான பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். அதன்பிறகு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1.72 லட்சம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆரோக்கியசாமி வீட்டில் கைரேகை பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேக்கரி அதிபர் வீட்டுக்குள் எத்தனை பேர் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 9 பேர் கும்பலை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
- சம்பவத்தன்று இரவு, தாஜூதீன் விடுதியின் வரவேற்பறையில் இருந்தார்.
கோவை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 33).
இவர் கடந்த 9 மாதங்களாக கோவை கணபதி அலமேலு மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து சிவில் என்ஜினியரிங் வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அலுவலகமும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் தங்கி இருக்கும் தனியார் விடுதியை மெர்வின் மற்றும் பரத் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர்.
இவர்களின் நண்பர் ஹரி என்பவர் அடிக்கடி விடுதிக்கு வந்து சென்றார். இதையறிந்த விடுதியின் உரிமையாளரான தண்டபாணி 3 பேரையும் அழைத்து தாஜூதினுக்கு ஆதரவாக பேசி, ஹரியை இனிமேல் இங்கு வரக்கூடாது என விரட்டி விட்டார்.
இதனால் அவரது நண்பர்கள் பரத், மெர்வின் ஆகியோர் கோபத்துடன் வெளியில் சென்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு, தாஜூதீன் விடுதியின் வரவேற்பறையில் இருந்தார்.
அப்போது அங்கு பரத், மெர்வின் உள்பட 9 பேர் கும்பல் காரில் வந்து இறங்கினர். அவர்கள் தாஜூதீனிடம் சென்று உன்னிடம் பேச வேண்டும் என அவரது அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் அறையில் இருந்த ஸ்பீரேவை எடுத்து அடித்து, தீ பற்ற வைத்தனர். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அறையில் இருந்த ரூ.5 லட்சம், வைரம், 3 பவுன் தங்க நகை, மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை எடுத்தனர்.
மேலும் தாஜூதீனை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
தொடர்ந்து அவரது தந்தைக்கு போன் செய்து, உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். மகன் உயிருடன் வேண்டும் என்றால், எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர்.
இதனை தொடர்ந்து அவர் பணத்தை கொடுத்து மகனை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே தாஜூதீன் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பரத், மெர்வின் உள்பட 9 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்த தலைமறைவான 9 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பீரோவை உடைத்து அதில் இருந்த 12 ½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- திடீரென சி.சி.டி.வி காமிரா வேலை செய்ய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் உடனே வீடு திரும்பினார்
கோவை:
கோவை பேரூர் தீத்திப்பா ளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சர்மிளா (57). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்றார்.
சர்மிளாவின் மகன் வீட்டில் ெபாருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை அடிக்கடி தனது செல்போனில் பார்த்து வந்தார். அப்போது திடீரென சி.சி.டி.வி காமிரா வேலை செய்ய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனே வீடு திரும்பினார்.
அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 ½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சர்மிளா பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை ராமநாதபுரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் வெலிங்டன் (47). இவர் அதே பகுதியில் பேக்கரி ஸ்ரீகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு பேக்கரியை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலையில் திறக்க வந்த போது பேக்கரி ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ. 42 ஆயிரத்தை காணவில்லை. ஜேசுராஜ் வெலிங்டன் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்