என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "slug 237410"
- இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.
ஊட்டி,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பஸ்சில் சுரேஷ் என்பவர் டிரைவராகவும், மனோகரன் என்பவா் நடத்துநராக பணியில் இருந்தனர்.
ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்தார்.
குன்னூா்-பா்லியாறு அருகே பஸ் சென்றபோது, டிப்பா் லாரியும், அரசு பஸ்சும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் சுமாா் 1 மணி நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் குறித்து குன்னூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
- வீடுகள் சூறை- மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
- வேன் கண்ணாடி உடைப்பு
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 25), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் (27) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது.
இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு 10 மணியளவில் கணேஷ் தனது நண்பர்கள் எட்வின் ராபர்ட் (30), சுரேஷ்பாபு (29) ஆகியோருடன் அனீஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை அவர்கள் சேதப்படுத்திய தோடு தீ வைத்தும் எரித்த னர்.
இதனைக் கண்ட அனீஸ் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது அவர் மீதும் கணேஷ் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். அவரும் பதிலுக்கு தாக்கி உள்ளார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திரண்டு வரவே, கணேஷ் கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. அப்போது அங்கு நின்ற வேன் கண்ணாடிகளையும் உடைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அனீஸ் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அனீஸ் அவரது உறவினர்கள் சபீன், சுஜி ஆகியோர் நள்ளிரவு 12 மணியளவில், கணேஷ் வீட்டுக்குச் சென்று அங்கி ருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
மேலும் வீட்டில் இருந்த புறாக் கூண்டுகளையும் சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அனீஸ் மற்றும் கணேசை கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சாலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சதிஷ் குமார் மற்றும் சிறுவன் சிவராஜ் ஆகியோர் மீது மோதியது.
- அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் - தஞ்சாவூர் சாலையில் வடக்குபட்டு அருகே சாலையின் இடது புறமாக தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 21) மற்றும் அவரது நண்பரான தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சின்னையன் மகன் சிவராஜ் (வயது 16) ஆகியோர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆவணி ஞாயிற்றுக்கி ழமையை முன்னிட்டு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சாலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சதிஷ் குமார் மற்றும் சிறுவன் சிவராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில்சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதில் சிறுவன் சிவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீஸார் விபத்தில் பலியான சதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வி
பத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறுமியை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தில் மோதல்; 7 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவரது மனைவி மணி மேகலை(வயது29). சம்பவத்தன்று இவர்களது மகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றிருக்கிறார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த அனுஷியா (28) மற்றும் மல்லிகா (62) ஆகிய இருவரும் சிறுமியை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தனது மகளை செல்போனில் படம் எடுத்தது குறித்து அனுஷியா வீட்டிற்கு சென்று மணி மேகலை கேட்டார்.
அப்போது இரு தரப்பின ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் மல்லிகா மற்றும் அனுசியா மீதும், மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி அம்மாள், பழனி, நந்தினி, மணிமேகலை, தீபாஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய சாலையில் கார் அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது
- 3 பேர் காயமடைந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு அருகே மேலப்பழுவஞ்சியில் பெருமாநாடுலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் ஒன்று அதிவேகமாக சென்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களில் மோதிவிட்டு பின்னர் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் புதுக்கோட்டை பெருமாநாடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.