search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தி"

    • சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.
    • 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    சேலம்:

    சேலத்தில் கரும்புச் சாறினால் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், ஓமலூர், நாலுகால்பாலம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், தும்பல், டேனிஸ்பேட்டை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல இடங்களுக்கும் தவிர இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆடி மாதத்தையொட்டி வெல்லம்அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த 6 மாதங்களில் ஜூன், ஜூலை வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தினர்.

    உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் அவ்வப் போது விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆடிப்பண்டிகையை தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியும், செப்டம்பர் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி, அக்டோபர் 4-ந் தேதி ஆயுதபூஜை விழாவும் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

    சேலம் மாவட்டத்தில் கருப்பூர்,ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்க சேலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளோம்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மண்டியில் 30 டன் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம் 60 சதவீதம் பெங்களூருக்கும், மீதமுள்ள 40 சதவீதம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் (1250 முதல்1350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

    • நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி (சென்னை) தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- உலகத்துக்கே உணவு வழங்கும் உற்பத்தித் தொழிலான விவசாயத்தின் முக்கிய இடுபொருளாக விதைகள் உள்ளது.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை உற்பத்தி செய்யும் பணியை விதை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை தன்னிறைவு பெறச் செய்ததில் நமது மாவட்டத்தின் பங்கு முக்கியமானது. தற்போது விவசாயிகளிடையே குண்டு நெல் ரகங்களான சாவித்திரி, சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது. தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக அரசு கொள்முதல் நிலையங்களில் சிகப்பு நிற மட்டை அரிசி ரகமான டிகேஎம் 9 ரகம் கொள்முதல் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.கே.எம். 9 ரகம் தவிர அனைத்து குண்டு ரகங்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

    எனவே விதை உற்பத்தியாளர்களும் டிகேஎம் 9 தவிர மற்ற ரக நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விதைச் சான்றுத்துறை அலுவலர்களை நேரடியாக ஒரே இடத்தில் சந்தித்து பயன் பெறும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விதை வளாகம் கட்டப்படவுள்ளது. இதற்கென ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விதைச் சான்றுத்துறை, விதை ஆய்வுத்துறை மற்றும் விதை பகுப்பாய்வு நிலையம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமையவுள்ளது. இது விவசாயிகளுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இ்வ்வாறு அவர் கூறினார்.  

    • இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும் கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

    ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 35 மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்லணை அணைப்பகுதியில் மகளிர் கய உதவிக்குழுவினர் தயார் செய்யும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

    அந்த அங்காடியினை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இன்று மதியம் திறந்து வைத்தார்.

    இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகன், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் கால் மிதியடி பொம்மை வகைகள் பைகள் மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்திகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட இயக்குநர்லோகேஸ்வரி, செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் திட்ட களப்பணியார்கள், மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது.
    • ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது. இந்த இடைக்கணுப் புழுக்களை ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் டிரைக்கோடிரெம்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது.

    இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டம் தோறும் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தில் உள்ளது.

    இந்த மையத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் தற்காலிகப் பணியாளர் மூலம் உற்பத்தி தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் கரும்பில் இடைக்கணுப் புழு மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும்.அட்டைகளில் ஒட்டி வழங்கப்படும் இந்த முட்டைகளை கரும்பின் சோகையில் கட்டி விட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது. ஒரு சிசி என்பது 100 முட்டைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.

    இந்த அட்டைகளை மாலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக் கூடாது. இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் சிறிய ரகக்குழவி இடைக்கணுப் புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டைகளை அழிக்கிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் தடைப்பட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல பருத்தியில் காய்ப்புழு, நெல்லில் இலைமடக்குப்புழு ஆகியவற்றையும் இந்த ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களிலும் புழுக்களைககட்டுப்படுத்த இந்த ஒட்டுண்ணியைப்பயன்படுத்தலாம்.

    தற்போது ஒட்டுண்ணி உற்பத்திக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து கார்சேரா அந்துப்பூச்சியின் முட்டைகள் பெறப்பட்டு அவற்றை கம்பு, நிலக்கடலை, ஈஸ்ட் ஆகியவை அடங்கிய கலவையில் இட்டு மூடி வைத்து இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அந்துப்பூச்சிகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் கருமுட்டைகள் அழிக்கப்பட்டு அதில் ஒட்டுண்ணிகள் வளர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த முட்டைகள் அட்டைகளில் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு வேளாண்துறையினர் கூறினர்.

    • மழையால் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
    • வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைப்பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.அதேநேரம் கிராம ஊராட்சிகளில் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அபேட் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டால் பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்திட விசைத்தறிகளுக்கு ஆா்டா் வழங்கிட வேண்டும் என விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈரோடு சுரேஷ், செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் சித்தோடு பாலசுப்பிரமணயம் ஆகியோா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் 67ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல நெசவாளா்கள் பயன் பெற்று வருகிறாா்கள். கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் விசைத்தறிகள் வேலை இல்லாமல் அதனை சாா்ந்த நெசவாளா்களும் அவா்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக 2021ம் ஆண்டு வரை ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாா்பில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் வேட்டி, சேலை வடிவத்தில் எவ்வித மாறுதல் இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும்.

    கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்கி விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

    • சேலம் மத்திய சிறை கைதிகள் மூலம் காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.
    • விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்செயலாக குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை கண்டறிந்து நன்னடத்தையின் அடிப்படையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை சாலையில் பணியமடுத்தப்படு கின்றனர். அதன் அடிப்படையில் திறந்த வெளி சிறைச்சாலையில் 10 நன்னடத்தை கைதிகள் உள்ளனர்.

    கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது கரடு முரடாக இருந்த திறந்தவெளி சிறைச்சாலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு மத்திய சிறைக்கு தேவையான காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று திறந்தவெளி சிறை சாலையில் ஆய்வு மேற்கொண்டார் . இதனை தொடர்ந்து அவர் கூறும் போது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் உதவி ஆய்வாளர் திருமலை தெய்வம் தலைமையில்6 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் . நன்னடத்தை கைதிகளைக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு உரம் எருஉரம் உள்ளிட்ட உரங்களை கொண்டு கத்திரிக்காய் வெண்டைக்காய் முள்ளங்கி புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் நாளொன்றுக்கு 15 லிட்டர் பால் மத்திய சிறை அனுப்பப்படுகிறது . இதன் மூலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு தயாரிப்பதற்கு கைதிகளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுவதால் பொருட்செலவு மிச்சமாகிறது. இனிவரும் காலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டு வெளி சந்தையில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயிகளுக்கு‘’தரமான விதை உற்பத்தி’’குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டு மேடு சமுதாயக்கூடத்தில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயி களுக்கு''தரமான விதை உற்பத்தி''குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தரமான விதை உற்பத்தியின் நோக்கம், விவசாயத்தின் ஆதாரமாம் விதையின் முக்கியத்துவம், சாகுப டிக்கு ஏற்ற விதையின் உற்பத்தி திறன், உணவு உற்பத்தியில் விதைகளின் முக்கியத்துவம்,பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    நாமக்கல், விதை சான்றளிப்புத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் சித்திரைசெல்வி,

    வேளாண்மை அலுவலர் அருண்குமார் ஆகியோர் விதை உற்பத்தியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

    பயிற்சியில் பரமத்தி வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    பரமத்தி உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன் உதவி வேளாண்மை அலுவலர், கவுசல்யா,, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் தரமான விதைகள் தேர்வு, விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

    • அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டடுள்ளது.
    • இதன் மூலம் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழைய உற்பத்திப் பிரிவில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகள் மற்றும் புதிய உற்பத்திப் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அலகு உள்ளது. இதன் மூலம் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தின் 1-வது மற்றும் 4-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த யூனிட்டுகளில் நடைபெற்றுவந்த 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    ×