search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • ராமேசுவரம் கடலில் தங்க கட்டிகளை வீசிய கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    மதுரை

    ராமேசுவரம் கடல் பகுதியில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது நாட்டுப் படகில் தங்கம் கடத்தி வந்த நாகூர் ஹனி (32), முகமது சமீர் (29), முகமது இப்ராஹிம் மகன் சகுபர் சாதிக் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடுக் கடலில் வீசிய ரூ. 150 கோடி மதிப்புடைய 17.74 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

    பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கடத்தலில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொடைக்கானலில் இருந்து தப்பி வந்து மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் ஜஹாங்கீர் அப்பாஸ் (29), முகமது சாதிக் (33), அசாருதீன் (25) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராமேசுவரம் கடலில் தங்கம் கடத்தி வந்த மேற்கண்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சரிதா, அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி நேரு நகர் ரேசன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரிதா (29).

    இவர்களுக்கு கடந்த  4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களின் மகன் பவன் கிருத்திக் (3).கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிதா மற்றும் அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்து சரிதாவின் தாயார் ஜெயா பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
    • 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள் அதில் மொத்த ரவுடிகள் 423 பேர்களில் 373 ரவுடிகளின் வீடுகளில் 17 வகையாக கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    மேலும் 45 ரவுடிகளின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தைப் பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    32 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்களையும் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெங்கடேசனு க்கும் அவர் மனைவி பழனிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது.
    • முத்துசாமியை காவேரி ப்பட்டணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மணிமாடிகொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன், (வயது 51)விவசாயி.

    இவரது மனைவி பழனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(40) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் உறவு இருந்துள்ளது.

    இதனால் வெங்கடேசனு க்கும் அவர் மனைவி பழனிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது.

    இந்த நிலையில் கடந்த, இரு மாதங்களுக்கு முன் வெங்கடேசனிடம் கோபித்து கொண்ட பழனி, போத்தாபுரத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றார்.

    மனைவியை சமாதா னப்படுத்தி வீட்டிற்கு அழைக்க சென்ற வெங்கடே சனுக்கு, பழனியின் வீட்டில் அவரது கள்ளக்காதலன் முத்துசாமி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கேட்டபோது, வெங்கடேசனை அவரது மனைவி பழனி, கள்ளக்காதலன் முத்துசாமி ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

    அருகிலிருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    முத்துசாமி மீதும், நடந்த விவரங்கள் குறித்தும் வெங்கடேசன் காவேரி ப்பட்டணம் போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

    முத்துசாமியை போலீசார் அழைத்து கண்டித்துள்ளனர். ஆனாலும் பழனியுடன் இருந்த கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை.

    இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வெங்கடேசன் கடந்த, 1-ந் தேதி விஷம் குடித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்த நிலையில் நேற்றுமுன்தினம் இறந்தார்.

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக வைக்க ப்பட்ட வெங்கடேசனின் சடலத்தை வாங்க மறுத்தும், முத்துசாமியை கைது செய்ய வலியுறுத்திம் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனை வெங்கடேசனின் உறவி னர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து வெங்கடே சனின் தந்தை கரியகவுண்டர் அளித்த புகார்படி, வேலூரில் பதுங்கியிருந்த முத்துசாமியை காவேரி ப்பட்டணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பெண்ணை தாக்கிய கணவருக்கு சிறை
    • பெண்ணை தாக்கிய கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புதுக்கோட்டை,

    ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை ஊராட்சி வடக்கு தோப்புப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (வயது 39). டிரைவர். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி பிரேமாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து பிரேமாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அருகில் கிடந்த கம்பியை எடுத்து மனைவி தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் நேற்று ராஜேந்திரனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

    • ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.
    • சுரேஷ், முனிராஜ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள சப்ரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி நிரோஷா (32).

    இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து ஓம் சக்தி மகளிர் மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.

    இதேபோல குடியரசு தினத்தன்று அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நிரோஷா தலைமையில் சென்ற மகளிர் குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (34), முனிராஜ் (32) ஆகிய 2 பேரும் நிரோஷாவின் வீட்டுக்கு சென்று நீ எப்படி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் நிரோஷாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் தேன்கனி கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ், முனிராஜ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வாலிபர் மற்றும் பாஸ்போர்ட் ஏஜெண்ட் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த துவான் சபைதீன் (வயது 45) என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய சோதனையில் வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை இருந்ததை கண்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் சட்டவிரோதமாக உரிய காலத்திற்கு பிறகு தங்கியிருப்பதுடன் மேற்கண்ட ஆவணங்களை பெற்றுள்ளதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாமனாரின் முகவரியை பயன்படுத்தி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் பழைய பாஸ்போர்ட்டை பயன் படுத்த முடியாததால் புதிய பாஸ்போர்ட் பெற எண்ணி உள்ளார்.

    இதற்காக பெரிய பட்டி னத்தை சேர்ந்த ஜகாங்கீர் என்பவரை அணுகினார். அவர் ஆவணங்களை பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் அருகே பனைக் குளம் மேற்குத்தெருவை சேர்ந்த டிராவல் ஏஜென்சி நடத்தும் அன்வர்ராஜா(45) என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று கொடுத்துள்ளார். இதனை வைத்து அவர் குடும்பத்துடன் துபாய் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பு ல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து துவான் சபைதீனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் பனைக்குளத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தும் பனைக்குளத்தை சேர்ந்த அன்வர் ராஜாவை பிடித்து வந்து விசாரித்தனர்.

    இதையடுத்து துவான் சபைதீன் (வயது 45), பனைக்குளம் அன்வர் ராஜா(45) ஆகியோரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தர உத்தரவு
    • சிறையில் அடைப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .திருமானூர்அடுத்த கரைவெட்டி பரதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சக்திவேல்(வயது 20). இவர் கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் காதலித்து வந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் 3 மாதம் கர்ப்பிணியான அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சக்திவேலுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சக்திவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆரியூர்பட்டி தண்ணீர் தொட்டி அருகில் பணம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அங்கு சென்ற போலீ சார் சுற்றி வளைத்த போது, திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த சேகர்( 45) என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    சேகரிடம் இருந்த சேவல் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
    • இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு , கேபி கரடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் ( வயது 28). இரும்பு கிரில் பட்டறை உரிமையாளர். இவர் நேற்று அன்னதானப்பட்டி அகரமகால் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற அய்யாவு (35) என்பவர் திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அய்யாவு என்பவரை கைது செய்தனர்.

    இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற குற்றத்திற்காகஅவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • ஆலங்குடியில் வழிபறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • இது குறித்து புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலம் கச்சிராம்பட்டியை சேர்ந் த கருப்பையா மகன் பழனிவேல்( வயது 48). இவர் மீன் வியாபாரத்துக்கு அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருவரங்குளம் தனியார் கல்லூரி எதிரில் அவரை மறித்த ஒருவர் அவரிடம் இருந்து பொருட்களை பறித்து சென்றுள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இலுப்பூர் தாலுகா கீழக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் விஜய் (எ) விஜய்பிரசாத் (வயது 17) என்பது தெரிய வந்தது. தலைறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கீழக்குறிச்சியில் வைத்து கைது செய்தனர். பின்னர் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர்கள் காப்பகத்தில் அடைத்தனர்.




    ×