search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 237512"

    • கவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பைக் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த சலுகை பலன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

    கவாசகி இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை வழங்குகிறது. இவை கவாசகி Z650, கவாசகி Z650 RS மற்றும் கவாசகி W800 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளை பயனர்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலலாம்.

    சலுகைகளின் படி கவாசகி Z650 RS வாங்குவோருக்கு கே-கேர் பேக்கேஜ், குட் டைம்ஸ் வவுச்சர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றின் மதிப்பு முறையே ரூ. 52 ஆயிரத்து 283 மற்றும் ரூ. 25 ஆயிரம் ஆகும். மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து இந்த வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    கவாசகி Z650 நேக்கட் ரோட்ஸ்டர் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள குட் டைம்ஸ் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதே போன்று கவசாகி W800 வாங்குவோருக்கும் குட் டைம்ஸ் வவுச்சர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ரெட்ரோ ஸ்டைல் மாடல் இந்திய சந்தையில் டிரையம்ப் T100 மற்றும் ஸ்பீடு ட்வின் 900 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    சலுகைகள் தவிர கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிள் W175-ஐ செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கவாசகி W175 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய கவாசகி W175 மாடல் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W175 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புது மோட்டார்சைக்கிள் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கவாசகி W175 இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய கவாசகி பைக் வெளியீட்டு தேதி கொண்ட டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி கவாசகி W175 மாடல் இந்திய சந்தையில் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகமானதும் இது கவாசகி நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெறும்.

    மற்ற W சீரிஸ் மாடல்களை போன்றே கவாசகி W175 மாடலிலும் வட்ட வடிவ ஹலோஜென் ஹெட்லேம்ப், வட்ட வடிவ அனலாக் ஸ்பீடோமீட்டர், முன்புற போர்க் கெய்ட்டர்கள், ஒற்றை இருக்கை, முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் கவாசகி W175 மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் W175 மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம்.

    பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் W800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

    • கவாசகி நிறுவனத்தின் 2023 Z900 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது மேம்பட்ட மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும்.

    ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்தியாவில் 2023 Z900 மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும். புதிய 2023 கவாசகி Z900 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 8 லட்சத்து 93 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 கவாசகி Z900 மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள்- மெட்டாலிக் பேண்டம் சில்வர் / மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் எபோனி / மெட்டாலிக் மேட் கிராபீன் ஸ்டீல் கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 2023 கவாசகி Z900 மாடல் சிறு கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.


    புதிய நிறம் தவிர ஒட்டுமொத்தத்தில் 2023 கவாசகி Z900 மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், 2023 கவாசகி Z900 மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள் விலை தற்போதைய மாடலை விட ரூ. 51 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இந்த மாடலிலும் ஸ்டீல் டிரெலிஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் 17 இன்ச் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை 2023 கவாசகி Z900 மிடில்வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிளில் 4.3 இன்ச் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டூயல் சேனல் ஏபிஎஸ், கவாசகி டிராக்‌ஷன் கண்ட்ரோல், பல்வேறு ரைடு மோட்கள், எல்இடி லைட்டிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 41 மில்லிமீட்டர் இன்வெர்டெட் போர்க், பின்புறம் மோனோ-ஷாக் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரேக்கிங்கிற்கு 2023 கவாசகி Z900 மோட்டார்சைக்கிளில் டூயல் செமி-ஃபுளோட்டிங் 300 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் பிரேக், பின்புறம் 250 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 948சிசி, 4 சிலிண்டர், இன் லைன் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123.64 ஹெச்பி பவர், 98.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • கவாசகி இந்தியா நிறுவனம் தனது புதிய நின்ஜா 400 பிஎஸ் 6 மாடலை இந்திய சந்தையில் இரண்டு நிறங்களில் விற்பனை செய்து வருகிறது.
    • நின்ஜா 400 மாடல் கேடிஎம் RC390 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது. பிரீமியம், சப்-500சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கவாசகி நின்ஜா 400 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் விலையை விட ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இந்த விலைக்கு பெரிய என்ஜின் மற்றும் அதிக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


    புதிய நின்ஜா 400 பிஎஸ்6 மாடலில் 399சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 44 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பவர் மாறாத நிலையில், டார்க் மட்டும் முந்தைய மாடலில் இருந்ததை விட 1 நியூட்டன் மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது.

    2022 கவாசகி நின்ஜா 400 பிஎஸ்6 மாடல்- லைம் கிரீன் மற்றும் எபோனி மற்றும் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பிரேக்கிங்கிற்கு 310 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 220 மில்லமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நின்ஜா 400 பிஎஸ்6 மாடல் கேடிஎம் RC390 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

    • கவாசகி இந்தியா நிறுவனம் புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடல் W சீரிஸ் பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W சீரிஸ் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இது பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களில் கவாசகி நிறுவனம் W175 ரெட்ரோ ஸ்டைல் ரோட்ஸ்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக கவாசகி இந்தியா நிறுவனம் W175 மாடலை இந்திய சந்தையில் சோதனை செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் 2020 வாக்கில் இருந்தே கவாசகி W175 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய W175 இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.


    இந்தோனேசிய சந்தையில் கவாசகி W175 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் W175 மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம்.

    இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் W800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் ஹாலோஜன் ஹெட்லைட், டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ZX-10R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய ZX-10R மாடல் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

    கவாசகி இந்தியா நிறுவனம் 2023 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ZX-10R மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட் மற்றும் லைம் கிரீன், பியல் ரோபோடிக் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இரு நிற வேரியண்ட்களும் ஒரே விலையிலேயே கிடைக்கின்றன.

    இரண்டு நிற ஆப்ஷன்களிலும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மாடலிலும் ட்வின் பாட் ஹெட்லைட், மேல்புற கௌல் மீது விங்லெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்பி பவர், 114.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் நான்கு விதமான ரைடு மோட்கள், எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய 2023 கவாசகி நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் பிஎம்டபில்யூ S1000RR, டுகாட்டி பனிகேல் V4, ஹோண்டா CBR 1000RR-R ஃபயர்பிளேடு போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • காவசகி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த மாடல் அடுத்த மாதத்தின் கடைசி வாரத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புது மோட்டார்சைக்கிள் W175 ஆகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் நின்ஜா 300 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது.

    முன்னதாக கவாசகி W175 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக W175 அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய கவாசகி W175 விலை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.


    இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. கவசாகி நிறுவனம் புதிய W175 தான் இந்தியாவில் அறிமுகமாகும் என இதுவரை தெரிவிக்கவில்லை. அந்த வகையில் கவாசகி நிறுவனம் Z400 மாடலையும் இந்தியாவுக்கு கொண்டு வரலாம். ஏற்கனவே நின்ஜா 400 மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதிய கவாசகி Z400 மாடல் இந்திய சந்தையில் கேடிஎம் 390 டியூக் மற்றும் பிஎம்டபிள்யூ G310 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் கவாசகி நிறுவனம் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 399சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மற்றும் வல்கன் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
    • இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்திய சந்தையின் மிடில்-வெயிட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கவாசகி இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மாற்றியமைத்து வருகிறது. இந்த வரிசையில், அந்நிறுவனத்தின் மிடில்-வெயிட் மாடல்களான நின்ஜா 650 மற்றும் வல்கன் எஸ் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஃபுலி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் விலை தற்போது ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. குரூயிசர் மாடல் விலை தற்போது ரூ. 6 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    புதிய விலை விவரங்கள்:

    கவாசகி நின்ஜா 650 ரூ. 6 லட்சத்து 95 ஆயிரம்

    கவாசகி வல்கன் எஸ் ரூ. 6 லட்சத்து 40 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    விலை தவிர இரு மாடல்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கவாசகி நின்ஜா 650 மற்றும் வல்கன் எஸ் மாடல்களில் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. நின்ஜா 650 மாடலில் இந்த என்ஜின் 67.3 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    கவாசகி வல்கன் எஸ் மாடலில் இந்த என்ஜின் 60 ஹெச்பி பவர், 62.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. நின்ஜா 650 மாடல் லைம் கிரீன், பியல் ரோபோடிக் வைட் நிறங்களிலும் வல்கன் எஸ் மாடல் மெட்டாலிக் மேட் கிராபீன்ஸ்டீல் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

    • கவாசகி நிறுவனம் விரைவில் புதிய வெர்சிஸ் 650 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

    கவாசகி நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், மற்றொரு புது மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் கவாசகி நிறுவனம் துவங்கி விட்டது. இம்முறை கவாசகி நிறுவனம் சற்றே பெரிய வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனையகங்களை வந்தடையும் என கூறப்படுகிறது. மேம்பட்ட கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் புதிய ஃபேரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தோற்றத்தில் கவாசகி வெர்சிஸ் 1000 போன்றே காட்சியளிக்கிறது.


    இத்துடன் ரிவைஸ்டு ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிளை-ஸ்கிரீன், கூர்மையாக காட்சியளிக்கும் என்ஜின் கவர் உள்ளது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு, ட்வின் சிலிடண்ர் என்ஜின் வழஙகப்படும் என தெரிகிறது.

    இந்த என்ஜின் 66 பி.எஸ். பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் கவாசகி டிராக்‌ஷன் கண்ட்ரோல், டூ-லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    புதிய வெர்சிஸ் 650 மாடலில் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் தொடர்ந்து CKD முறையிலேயே இந்தியா கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி ரூ. 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம். தற்போதைய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ×