என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடி ஏற்றம்"
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் 5 வீதியுலா உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடலூர்:
பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்திப்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும் தேரோட்டத்து டன் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுக்களாக கொரோனா தொற்று காரணமாக ஆனிதிருமஞ்ச திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (27-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள்வீதியுலா நடந்தது. அதன்பின்னர் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் நகரின் 4 வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர், விநாயகர், சண்டி கேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு 4 மாட வீதிகளிலும் வலம்வரும். அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பார்கள். அன்றிரவு தேர் நிலைக்கு வந்தவுடன்நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படுவார்கள் பின்னர் அன்று இரவுலட்சார்ச்சனை நடைபெறும். 6-ந் அதிகாலையில் நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் பல்வேறு அர்ச்சனைகள், திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் 5 வீதியுலா உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியப்டியே வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனமாக காட்சியளித்து சித்சபைக்கு செல்வார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்