search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியாகாந்தி"

    • விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக சோனியா காந்தி கருத்து.
    • ராகுல் காந்தியும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், அவரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி.ரா குல் காந்தியும் திரவுபதி முர்மு தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு நமது அரசியல் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பார் என நாடே எதிர்நோக்கி உள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

    சரத் ​​பவார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். உங்கள் பதவிக்காலம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையில் அகமது படேல் செயல்பட்டார்.
    • கலவர வழக்கு தொடர்ந்த செடல்வாட்டிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மோடி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளதாவது:

    சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் மறைந்த அகமது படேல், குஜராத் மாநிலத்தில் பாஜக அரசை சீர்குலைக்கவும், மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையிலும் செயல்பட்டார். எனினும் அவர் சோனியாகாந்தியால் இயக்கப்பட்டார்.

    சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட டீஸ்டா செடல்வாட், நீதிமன்றத்தின் முன் அளித்த வாக்குமூலத்தில் அகமது பட்டேல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செடல்வாட் மனைவியிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை படேல் வழங்கியதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணம் சோனியாகாந்தி வழங்கியது.

    குஜராத் கலவர வழக்குகளைத் தொடர்ந்த செடல்வாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சம்பித் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம்
    • சோனியாகாந்தி ஒரு புலி, அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர் பயப்பட மாட்டார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ந் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 18 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பைப் காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு புலி என்றும், அவர் பயப்பட மாட்டார் என்றும் கூறினார். இது போன்ற பல விஷயங்களை அவர் ஏற்கனவே சந்தித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக கடந்த மாதம் ராகுல்காந்தி ஐந்து நாட்களுக்கும் மேலாக அமலாக்க அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பாலியல் புகார் கூறியுள்ள பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
    • அரசியல் ரீதியாக பழிவாங்க பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக தனி செயலாளர் தகவல்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்து வரும் 71 வயதான பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக, டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் கூறியுள்ளார்.

    இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் மிரட்டப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து மாதவன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாதவன், அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையிலும், தனது இமேஜை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

    பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


    ×