search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரவாதி"

    • இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் கங்கனா ரனாவத்
    • 'கத்தியால் குத்துவது மற்றும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போல் பெரிய விஷயம் இல்லை என்று ஆகிறது'

    சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து எம்.பி.யும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது நேற்று கைது செய்யப்பட்டார்.

    குல்விந்தர் கவுருக்கு ஆதர்வாக விவசாய சங்கங்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் கங்கனா ரனாவத் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், திருட்டு, கொலை, கற்பழிப்பு ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் கூட அதில் ஈடுபடுவதற்கு உடல்க ரீதியாக மன ரீதியாக பல காரணங்கள் உள்ளன.யாரும் காரணம் இல்லாமல் குற்றத்தில் ஈடுபடுவதில்லை.

    காரணம் இருப்பதால் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக அவர்களை அப்படியே விட்டு விடுவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சட்டத்தை கையில் எடுத்து ஒருவரை தாக்குபவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களாயின் நீங்கள் கொலை மற்றும் கற்பழிப்புக்கு ஆதரவு வழங்குபவராக கருதப்படுவார்கள்.

    ஏனெனில் கத்தியால் குத்துவது மற்றும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போல் பெரிய விஷயம் இல்லை என்று ஆகிறது. எனவே உங்களின் மனசாட்சியை ஆழமாக ஆராய்ந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெறும்.
    • தொண்டியில் உள்ள மரைன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பலியாகினார்கள். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை 6 மணிக்கு தொடங்கி, நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிவரை 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதில், கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல்துறையைச் சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா்.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா். இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சாலை களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொள்கி ன்றனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் முதல் சோழியக்குடி, மோர்ப் பண்ணை கடல் பகுதிகள் உள்ளன. இந்த வழியாக தேவி பட்டினம் வரை தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ஆபரேசன் சாகர் கவாச் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கடலோர காவல்படை போலீ சாருக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெறும்.

    இதில் போலீசாரின் சிலரை தீவிரவாதி போல் வேடமிட்டு கடல் மார்க்கமாக தப்பிப்பதாகவும், அதனை பிடிப்பதற்காக கடலோர காவல்படை போலீசார் கண்டுபிடிப்பதும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    அதன்படி வேதாரண்யம் அருகே கடலோர காவல்படை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சி கடலோர பகுதிகள் முழுவதும் வாகன தணிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தொண்டியில் உள்ள மரைன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ×