என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர் விபத்தில் பலி"
- தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கோவை,
திருப்பூரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது கல்லூரியில் படிக்கும் சவுரிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீஹரி (வயது 19) என்பவருடன் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா செல்வது என முடிவு செய்தார். அதன்படி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டிச் சென்றார்.
மோட்டார் சைக்கிள் காளப்பட்டி நால் ரோடு சந்திப்பில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஸ்ரீஹரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அண்ணனுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்
கோவை :
கோவை ஆனைகட்டி பனப்பள்ளியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). விவசாயி. இவரது மகன்கள் பாலகிருஷ்ணன் (23), கதிர்வேல் (16).
கதிர்வேல் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது தம்பியை அைழத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் கோவை ஆலமரமேட்டில் இருந்து ஆனைகட்டி ரோட்டில் சென்றார்.அப்போது தடாகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறி அண்ணன்-தம்பி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் கதிர்வேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டாது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு கதிர்வேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதேபோன்று வடக்கிபா ளையம் பகுதியில் நடந்து சென்ற பொள்ளாச்சியை சேர்ந்த நஞ்சன் (80) என்பவரும், வட வள்ளியில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (70) என்பவரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்