search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 9-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    9-வது நாள் 4-10-2022 (செவ்வாய்க்கிழமை)

    வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.

    திதி : நவமி

    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.

    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

    பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கிய மாக இருப்பார்கள்.

    • தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்தை தேடி வந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    • பட்டு கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்திரோட்டில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் கைதேர்ந்த நெசவாளர்களை கொண்டு தரமான ஜரிகை வேலைப்பாடுகளுடன் பட்டு சேலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்தை தேடி வந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    இந்த பட்டு கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி கொலுவை தீபாராதனை காட்டி சங்க தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான விஸ்வநாதன் தொடங்கி வைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். இதில் தமிழக கைத்தறி துறை இணை இயக்குனர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று எட்டாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளேபோற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலேபோற்றி

    ஓம் அண்டர் போற்றும்

    அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியேபோற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளேபோற்றி

    ஓம் மாயோனின் மனம்

    நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளேபோற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியேபோற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவேபோற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய்போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணிபோற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய்போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தேபோற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமேபோற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய்போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 8-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    8-வது நாள் 3-10-2022 (திங்கட்கிழமை)

    வடிவம்: நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

    பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

    திதி: அஷ்டமி

    கோலம் : பத்ம கோலம்

    பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தா மரை, குருவாட்சி.

    நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

    ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

    பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

    • இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும்.
    • ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். ஆனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். அடிப்படை அம்மன் வழிபாடு.

    ஸ்ரீ ராமர் ராவணனை வென்ற வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை வடமாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது, கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் 10 நாட்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமி அன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி எழுந்தருளி மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவார். துர்க்கை மகிசாசூரனை அழித்த நாளே விஜயதசமி. வடக்கே உள்ள ஐதிகம்.

    பராசக்தியே துர்க்கை வடிவம். தசராவில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர். புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் 'ஆச்வின' மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி.

    ராமநாதபுரத்திலும் கர்நாடக மாநிலத்தில் கொண்டாடுவது போல் ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக சிறப்பாக நடைபெறும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் நவராத்திரி திருவிழா, மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போல மன்னர்கள் காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்வச மூர்த்திகளுடன் ஊர்வலமாக மகர் நோன்பு திடலை அடைந்து அங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறுவார்கள்.

    • மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
    • பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.

    வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, 7-ம் நாளான நேற்று, கம்பாந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

    சக்தி கொலு 7-ம் நாள் விழாவை ரங்கவள்ளி ஆர்ட்ஸ் பவுன்டேஷனை சேர்ந்தவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.

    மேலும், காலை 7.30 முதல் 12.30 மணி வரையும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையும் மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இது தவிர இரவு, வித்யாவாணி சங்கீத வித்யாலயா குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. மேலும், குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    7-ம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஏழாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி

    ஓம் மூலாதாரத்து ஒளியேபோற்றி

    ஓம் ஆதிமுதல் அம்பரமேபோற்றி

    ஓம் அகண்ட பரிபூரணியேபோற்றி

    ஓம் அகிலலோக நாயகி போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவாய்போற்றி

    ஓம் அஞ்சலென்று அருள்வாய்போற்றி

    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய்போற்றி

    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரிபோற்றி

    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி

    ஓம் எழுவரில் ஒன்றானவளேபோற்றி

    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி

    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளேபோற்றி

    ஓம் சாம்பவி மாதே போற்றி

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 7-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    7-வது நாள் 2-10-2022 (ஞாயிற்றுக்கிழமை)

    வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

    பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

    திதி : சப்தமி.

    கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

    பூக்கள் : தாழம்பூ, தும்ைப, மல்லிகை, முல்லை.

    நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

    ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

    பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

    • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 2000, 500,100, 50 என ரூ.3.50 கோடி ரூபாய் நோட்டுகள் கொண்டு அம்மனை அலங்கரித்து இருந்தனர்.
    • தங்க பிஸ்கட்டுகளை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    திருப்பதி:

    நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள், வீடுகளில் விதவிதமான சாமி சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் வித்தியாசமாக ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி நகைகளை கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 2000, 500,100, 50 என ரூ.3.50 கோடி ரூபாய் நோட்டுகள் கொண்டு அம்மனை அலங்கரித்து இருந்தனர்.

    மேலும் 6 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொண்டு சாமி அலங்கரிக்கப்பட்டு, தங்க பிஸ்கட்டுகளை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் கோவிலுக்கு முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இதேபோல் பிரகாசம் மாவட்டம் கிட்டலூருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 1 கோடியே 2 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, 108 தங்க மலர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதனை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
    • இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.

    ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

    அம்மன் விரும்பும் நவராத்திரி:

    நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.

    ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.

    நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.

    நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் - சக்தியாலும், வறுமை-செல்வத்தினாலும், அறியாமை-ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

    • அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
    • நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.

    நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றைதவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினிபூஜை, கன்யா பூஜைஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.

    வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளைசெய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்காகவேநமதுமுன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர்.

    அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.

    தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம்குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும்விளக்கை ஏற்ற வேண்டும்.

    ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளிஅல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்தஇரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது.

    இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள்விடாமல் எரிய வேண்டும். நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும்.

    இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    • முதன்முறையாக கவர்னர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் கவர்னரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோரால் கடந்த 26-ந் தேதி அன்று திறந்து வைக்கப்பட்ட 'நவராத்திரி கொலு', பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள 'நவராத்திரி கொலு', தற்போது 5-ந் தேதி வரை நாள்தோறும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் உட்பட பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச்சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முதன்முறையாக, தற்போது கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு' ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்கள் முதலில் பார்வையிடலாம்' என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம். பார்வையிடும் நேரம் 4 கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கட்டத்திற்கு 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் மின்னஞ்சலில் வழங்கிய அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் 2-வது நுழைவுவாயிலுக்கு வர வேண்டும்.

    இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினர் அவர்களின் அடையாளத்திற்காக நுழைவாயிலில் பாஸ்வேர்டை காண்பிக்க வேண்டும். இந்த அடையாளச்சான்று மின்னஞ்சலில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சான்றாக இருக்கவேண்டும். பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம். வளாகத்திற்குள் அலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ×