என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராட்ச அலை"
- 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- கோவளம் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக சீரமைத்து அதற்கு பதிலாக புதிய தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு வள்ளத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது கடலில் பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.ஆக்ரோஷமாக எழும்பி வந்த ராட்சத அலை ஒன்று இவர்களது வள்ளத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த வள்ளம் கவழ்ந்தது.
அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததனர். அவர்கள் "காப்பாற்றுங்கள்" "காப்பாற்றுங்கள்" என்று அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு கரையில் நின்ற மற்ற மீனவர்கள் கடலில் நீந்தி சென்று 4 மீனவர்களையும் அவர்கள் சென்ற வள்ளத்தையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கரைக்கு மீட்டு கொண்டு வந்த 4 மீனவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கோவளம் கடற்கரையில் அமைந்துள்ள தூண்டில் வளைவுபாலம் உடைந்து கிடப்பதால் தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் வள்ளங்கள் அடிக்கடி ராட்சத அலையில் சிக்கி கவிழ்வதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
எனவே உடைந்து சேதம் அடைந்த கோவளம் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக சீரமைத்து அதற்கு பதிலாக புதிய தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கோவளம் கடற்கரை கிராம மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.