search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் இங்கிலாந்து தொடர்"

    • பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 657 ரன்கள் குவித்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்தது.

    இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான், ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 268 ரன்களில் சுருண்டது. சவுத் ஷகில் (74), இமாம் உல் ஹக் (48), முகமது ரிஸ்வான் (46), அசார் அலி (40) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 4 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 9ம் தேதி தொடங்குகிறது.

    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணி முதல் இன்னிங்சில், 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 2 நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தனர்.

    தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 114 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 121 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார். ஜாக்ஸ் பந்து வீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஹாரி புரூக் அதிகபட்சமாக 153 ரன் எடுத்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.

    ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர். இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹாரி புடூக் 153 ரன்னில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் 41 ரன்னும், ராபின்சன் 37 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஜாஹித் முகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் பொறுமையுடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஷபிக் 89 ரன்னும், ஹக் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.

    இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

    இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.

    கராச்சி:

    17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9-ந் தேதி முலதானிலும், கடைசி டெஸ்ட் போட்டி 17-ம் கராச்சியிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புக்கு தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது மற்றும் இங்கு இருப்பது சிறப்பிக்குரியது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது.

    கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்து அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று 3 டெஸ்டில் விளையாடுகிறது.
    • டி20 தொடரின் போது வழங்கப்பட்ட உணவு உயர் தரமாக இல்லை என்று வீரர்கள் அதிருப்தி.

    இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஏழு டி20 போட்டிகளில் விளையாடியது. இந்தத் தொடரை 4-3 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது.

    தற்போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.

    டி20 தொடரின்போது இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கிய உணவு தரமாக இல்லை எனவும், சில வீரர்களுக்கு வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் டெஸ்ட் போட்டிக்கான அணியுடன் சமையல் கலைஞரை (Chef) அனுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன் 2018 உலகக் கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 202 கால்பந்து தொடரின்போது இங்கிலாந்து கால்பந்து அணியுடன் இதுபோன்று செஃப் அனுப்பப்பட்டார்.

    தற்போது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக செஃப்-ஐ அனுப்ப இருக்கிறது.

    பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் முல்தானிலும், 3-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற இருக்கிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 209 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்ததில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 7வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் டுகெட் 19 பந்தில் 30 ரன்னும், புரூக் 29 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். இதனால் அந்த அணி 200 ரன்களை கடந்தது.

    இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    அந்த அணியில் ஷான் மசூத் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இதன்மூலம் டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    • இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன் குவித்தார்.
    • பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் அடித்தார்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தன.

    3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. 


    அந்த அணி தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 40 ரன் அடித்தார். ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன்களும், பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். குஷ்தில் ஷா 29 ரன்கள் எடுத்து ஆட்டழிந்தார். முகமது நவாஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.

    அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    • பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.
    • முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 88 ரன் அடித்தார்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் டக்அவுட்டானார்.

    பிலிப் சால்ட் 30 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பென் டுக்கெட் 43 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹேரி பூருக் 31 ரன்னும், சாம் கரண் 10 ரன்னும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 55 ரன் குவித்தார். இங்கிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடி கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 88 ரன் அடித்தார்.

    இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஒவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 158 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கராச்சி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெற்ற்து. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் எடுத்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹாரி புரூக் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 68 ரன்கள் விளாசினார்.

    கராச்சி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடி முகமது ரிஸ்வான் -பாபர் ஆசம் ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் சேர்த்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள், ஹைதர் அலி 11 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    இங்கிலாந்து தரப்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • கேப்டன் ஜோஸ் பட்லர் பின்னங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் முதல் 5 ஆட்டங்களில் ஆடமாட்டார்.
    • இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

    கராச்சி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.

    அந்த வகையில் 7 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

    இதனால் அந்த அணி இளம் வீரர்களுடன் களம் இறங்குகிறது. கேப்டன் ஜோஸ் பட்லர் பின்னங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் முதல் 5 ஆட்டங்களில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான மொயீன் அலி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

    இது குறித்து மொயீன் அலி கூறுகையில், 'ஜோஸ் பட்லர் காயத்துடன் தான் வந்து இருக்கிறார். உலக கோப்பை போட்டி எங்களுக்கு பெரியது என்பதால் அந்த போட்டி முழுவதும் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே பாகிஸ்தான் தொடரில் அவர் களம் இறங்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக முடிவு எடுக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த தொடரில் கடைசி ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடுவதா? இல்லையா? என்பது குறித்து அவர் முடிவு செய்வார்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த பாகிஸ்தான் தொடரில் கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கிறது' என்றார். அண்மையில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்ற பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் முத்திரை பதித்தார். ஆனால் கேப்டன் பாபர் அசாம் 6 ஆட்டங்களில் 68 ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார். இழந்த பார்மை மீட்டு உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ரன்வேட்டை நடத்தும் வேட்கையுடன் அவர் உள்ளார்.

    சமீபத்திய தோல்வியால் எழுந்த கடுமையான விமர்சங்களுக்கு இந்த தொடர் மூலம் விடைகொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதே சமயம் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் சவாலை முறியடித்து வெற்றிக்கனியை பறிக்க போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் 21 சர்வதேச 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் இங்கிலாந்தும், 6-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

    17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×