search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • பொன்னமராவதியில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தக திருவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பொன்னமராவதியில் கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா வரும் 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற உள்ளது.

    அதன்ஒரு பகுதியாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில், பொன்னமராவதி வட்டார அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கியப்போட்டிகள் நடபெற்றது. மூன்று பிரிவுகளாக பேச்சுப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், தமிழநாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலப் பொருளாளர் பிரபாகரன், மாநில செயலர் பாலகிருஷ்ணன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, தலைமையாசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க பொன்னமராவதி ஒன்றியத் த லைவர் அறிவுடைநம்பி, செயலர் ராசு, சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
    • இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.

    தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .

    ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.

    இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    ×