என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாகன ஓட்டி"
- கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி சாலை ஒற்றக்கண் பாலம் அருகில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் . நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் குழாய் பதிப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டது.
- வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. பல இடங்களில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் போடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை புதூர் பிரிவு அருகில் குடிநீர் குழாய் பதிப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்களாக சாலை போடப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. விரைவில் அந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
- ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக மாநகர பகுதிகளில் சாலைகள் அமைக்க, சாக்கடை கால்வாய் அமைக்க, குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் அமைக்க என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் பல பகுதிகளில் சரியான முறையில் திட்டமிடப்படாமல் மேற்கொள்வதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அனுப்பர்பாளையத்தில் இருந்து 15 வேலம்பாளையம், சோழிபாளையம் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழி சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பெரிய வாகனங்கள் அந்த சாலையில் வரும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எதிரெதிரே வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறும் ஏற்படுகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.
இதுபோல் அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோல் மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலையில் செல்ல முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் விளம்பர பதாகைகள் கூட வைக்கப்படவில்லை. இதனால் பலரும் சாலையில் சென்று விட்டு பாதை இல்லாததால் திரும்பி வரும் நிலையும் உள்ளது. திருப்பூருக்கு தமிழக முதல்-அமைச்சர் வரும் போது, அந்த பகுதியில் வேலை செய்யப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலரும் போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் இதற்கு தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
- 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் ,பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காங்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது.
ஆனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சாலை பணி முழுமையாக முடியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த சாலையில் தனியார் பள்ளிகள் ,பல்வேறு பனியன் நிறுவனங்களும் உள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.காங்கிரீட் சாலையின் இரு புறங்களிலும் குழிகள் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் கான்கிரீட் போட்ட ஒரு சில இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பல்லாங்குழியாக கிடப்பதால் தரமற்ற முறையில் ரோடு போடப்பட்டுள்ளதா? என சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தெருக்களில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் முறையாக பாதாள சாக்கடைக்கு சென்று சேரும் வகையில் வழிகள் இல்லாமல் அவசர கதியில் ஏனோ தானோ என்று ரோடு போடப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த சாலையை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ரோடு பணியை முழுமையாக முடித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆயிரகணக்கான கார், வேன், லாரி, தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன.
- வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
அவினாசி :
அவினாசி - கோவை மெயின்ரோட்டில் தினமும் காலை முதல் ஆயிரகணக்கான கார், வேன், லாரி, தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன.
இந்த நிலையில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் ரோட்டில் பின்நோக்கி நடப்பதையும், ரோட்டின்மைய தடுப்பில் அமர்ந்து கொள்வதையும்பல மாதங்களாக வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர் யாராவது அவரிடம் ஏன் இப்படி பின்புறமாக நடக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களை அவர் தகாத வார்த்தையால் திட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
எனவே அவரை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
- வாகனங்களில் செல்வோர், பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் , தள்ளுவண்டி வியாபாரிகள் பயணிக்கின்றனர் .
இந்த பாலத்தில் மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.இதனால் வாகனங்களில் செல்வோர் ,பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் தேங்காதவாறு இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த இடமாகும். வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எந்த நேரமும் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
இந்த நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீசார் விதிகளை மீறி மஞ்சள் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.
பின்னர் அவற்றை எடுக்க வந்த உரிமையாளர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் அவ்வாறு நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- தாராபுரத்தில் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளை அகற்றி வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரத்தில் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதாலும், பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி ,சின்ன கடை வீதி , பூக்கடை கார்னர் சர்ச் வீதி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே மழை காலங்களில் சாக்கடை நீர் ரோட்டில் செல்லாமல் தடுப்பதற்காகவும் தாராபுரத்தில் அனைத்து பகுதியிலும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளை அகற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் அகற்றப்பட்ட கற்குவியல்கள் கடை வீதி எங்கும் காணப்படுகின்றன .ஒரு சில இடங்களில் தெருவிற்கு செல்லும் ரோட்டை அடைத்து கிடப்பதால் அந்த வீதியில் இருந்து வெளியே வரும் பள்ளிக்குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கற்களையும் மண்ணையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ,வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
- நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது.
திருப்பூர் :
அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது குடித்துவிட்டு ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணியாமல் செல்லுதல், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்கள் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
சமீபத்தில் அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார். அவர் ெஹல்மெட் அணிந்திருக்கவில்லை. பைக்கில் சக நண்பர்கள் 2பேர் உடன் வந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்தால்விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் குறைந்தபட்ச காயங்களுடன் மாணவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், திருப்பூரில் நடைபெறும், பல விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக அமைகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிவதை சுமையாக கருதத் தேவையில்லை. அது உயிர்க்கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது சுலபமான விஷயம்தான். ஆனால் பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை.
நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான ரோடுகளில் கூட, பலர்வாகனங்களை விதிமுறைப்படி இயக்குவதில்லை.விபத்து நேரும்போதுதவறாக விதிமுறை பின்பற்றுபவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. விதிமுறையை முறையாக கடைபிடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவிகள் உயிரிழக்க நேர்கிறது.
திருப்பூரின் ரோடுகள் பரந்து விரிந்தவை அல்ல.பரபரப்புடன் இயங்கும் மாநகரில் வாகனங்களை நிதானமாக இயக்கியாக வேண்டிய கட்டாயம் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களில் பறப்பவர்கள் பலர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 18 வயது நிரம்பாத மாணவர்கள் பலர் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.போலீசார் அறிவுறுத்தினாலும்ப ள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது தொடர்கதையாக உ ள்ளது. பெற்றோர் நினைத்தால், வாகனங்களை மாணவர்கள் எடுத்துச்செல்லாமல் தடுக்க முடியும்.கவனமின்மையால் விபத்துகள் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால்ஒவ்வொரு விபத்துகளும், விலை மதிக்க முடியாத இழப்பை ஏதேனும் ஒரு குடும்பத்திற்கோ, விபத்தால் பாதிக்கப்பட்டவரை சார்ந்திருப்பவர்களுக்கோ ஏற்படுத்தி விடுகின்றன.எனவே வாகன விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தடுக்க வேண்டுமென போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
- கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனம் செல்லும் போது புழுதிகள் பறந்து கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- இப்போது அவர்களுக்கு அபராத வசூல் சீட்டு தரப்படவில்லை.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 32 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே மதுரையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக "மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்" என்று மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதற்காக மதுரையின் 5 மண்டலங்களிலும், 15 குழுவினர் அதிரடி அபராத வசூல் வேட்டையில் ஈடு பட்டு வருகின்றனர்.
மதுரை மாநகரில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த தாக 100 பேரிடம் 32,400 ரூபாய் அபராதம் வசூலிக்க ப்பட்டு உள்ளது.அதேபோல தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் மற்றும் கொரோனா விதி முறை களை கடைபிடிக்க தவறியதாக 62 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.21,300 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்திலும் வருவாய்த்துறை அதி காரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று காலை 12 மணி நேர நிலவரப்படி, சுமார் 50 பேரிடம் முகக்கவச அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் முன்பு முகக்கவசம் அணியாமல் திரியும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கு அபராத வசூல் சீட்டு தரப்படவில்லை. எனவே அவர்கள் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருந்த போதிலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்