search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் நிலை பேரூராட்சி"

    • கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் செல்வகனி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பிகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் விமலா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் செல்வன், கணேசன், தங்ககுமார், கிறிஸ்டோபர் சந்திரமோகன், சரோஜா, சரிபா, பொன்முடி, நாகம்மாள், ரெத்தினம், இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட2-வது வார்டு பகுதியான மந்தாரம்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றை ரூ.1லட்சத்து 85 ஆயிரம் செலவில் சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும்

    3-வது வார்டு பகுதியான அச்சங்குளம் படிப்பகம் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் செலவில் சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும்

    ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள கிணற்றை ரூ.2 லட்சத்து 50ஆயிரம் செலவில் சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும்

    12-வது வார்டு பகுதியான நாராயணன்புதூரில் ரூ.2லட்சத்து 35 ஆயிரம் செலவில் கிணற்றை சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இது தவிர கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ரூ.5லட்சம் செலவில் மேலும் பல குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    ×